பெயர் மற்றும் இமெயில் கொடுத்து உறுப்பினராகலாம்.!

We'll not spam mate! We promise.

Tuesday, September 30, 2014

அ.நாராயணன் அவர்களை ஆசிரியராகக் கொண்ட பாடம் இதழ் மீண்டும் தொடரட்டும் !


அ,நாராயணன், ஆசிரியர் பாடம் மாத இதழ்

இந்து தமிழ் நாளிதழுக்கு அனுப்பப்பட்ட மடலின் நகல்.பாடம் என்பது ஓர் தமிழ் மாத இதழ்.வளர்ச்சி அரசியலுக்கான மாத இதழ். இன்னும் இரு மாதங்கள் வந்திருப்பின் 5 ஆண்டுகள் பூர்த்தியாய் இருக்கும். இளைஞர்களுக்கு ஆதர்ச வழிகாட்டி. இயற்கையை நேசித்த ஓர் இதழ். ஆண்டுதோறும் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடத்தப்படும் இளைஞர் விழா- இயற்கை உணவு பங்கேற்றோருக்குத்தான் அதன் அருமை புரியும். தமிழோடு ஆங்கிலப் புலமையும் நிரம்பப் பெற்ற நம்மாழ்வார்- அவரைச் சுற்றி அமர்ந்து கொண்டு ந்டத்தப் பெற்ற கலந்துரையாடல்கள் நெஞ்சிருக்கும் வரை நினைவிருக்கும். நல்லதைத் தொடர இயலுமா? இயலாது. பாடம் தனது பயணத்தை நிறுத்திக்கொண்டுள்ளது. இது தற்காலிகமாகவே என்பதே எங்களைப்போன்றோரது ஆசை. விரைவில் மீண்டும் பாடம் மலரும்.

இதிலும் ஓர் சிறப்பினை நிரூபணம் செய்துகாட்டியுள்ளார், பாடம் ஆசிரியர்  அ.நாராயணன். சந்தாதாரரின் தொகை மீந்திருப்பின் அதனைக் காசோலையாகத் திருப்பி அனுப்பியுள்ளார், எனக்கு வயது 65. தமிழகத்தில் இதுபோன்ற புதுமை நிகழ்ந்ததில்லை. செய்தியை இந்து தமிழ் நாளிதழுக்குத் தகவலாய்த் தந்துள்ளேன். அவற்றின் நகல்கள் மேலே.

சிறார் பாலியல் கொடுமைகள், மதுவால் விளையும் விபத்துகள், மதுவிலிருந்து மீட்டெடுக்க நாள்தோறும் அவருக்கு வரும் அளவிறந்த தொலைபேசி அழைப்புகள், இயற்கைச் சீர்கேடுகள் எங்கு நடந்தாலும் அவற்றை அச்சமின்றிக் கண்டிக்கும் ஆளுமைத் திறன், மனிதக் கழிவை மனிதன் சுத்தி செய்யும் அவலங்களை நீதிமன்றம் எடுத்துச் சென்று வெற்றி பெற்றமை, இன்னும் இதுபோல் எண்ணற்ற பொது நல வழக்குகள், கொத்தடிமைத் தொழிலாளர் மீட்பில் காட்டிய ஆர்வம், கிடைத்தபோதெல்லாம் மீடியாக்களில் புள்ளிவிவரங்களை அள்ளி வீசி மக்களில் சாமான்யருகளுக்காக வாதிடும் நேர்த்தி ... என்று எடுத்துச் சொல்லிக் கொண்டே போகலாம்.

பாடம் நிறுத்தப்பட்டதால் இழப்பு அவருக்கல்ல; தமிழ் நாட்டிற்குத்தான். 

பாடம் மீண்டும் தொடரட்டும்.

அதுவரை அவரது கருத்துகள் வாரம் ஒருமுறையேனும் வலைப்பூக்கள் மூலம் உலா வரட்டும். 

- சங்கர இராமசாமி, rssairam99@gmail.com .Socializer Widget By Blogger Yard
SOCIALIZE IT →
FOLLOW US →
SHARE IT →

0 comments:

Post a Comment