பெயர் மற்றும் இமெயில் கொடுத்து உறுப்பினராகலாம்.!

We'll not spam mate! We promise.

Friday, September 12, 2014

பாரதியார் நினைவு நாள்: உறுதிமொழி ஏற்பு

மகாகவி பாரதியாரின் நினைவு நாளையொட்டி, உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி திருநெல்வேலி சந்திப்பில் நடைபெற்றது.

பாரதியார் உலக பொது சேவை நிதியம் என்ற அமைப்பின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு அதன் தலைவர் மரியசூசை தலைமை வகித்தார். திருநெல்வேலி சந்திப்பில் உள்ள பாரதியாரின் சிலைக்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. சிலையின் முன்பு தமிழைக் காப்பது, நாட்டுப்பற்றை வளர்ப்பது குறித்த உறுதிமொழி ஏற்கப்பட்டது.
அமைப்பின் செயலர் கணபதி சுப்பிரமணியன், பொருளாளர் வெங்கடாசலம், பென்சனர் சங்க மாவட்டச் செயலர் கணபதியப்பன், சிவப்பிரகாசர் நற்பணி மன்ற துணைச் செயலர் முத்துசாமி, நுகர்வோர் பாதுகாப்பு இயக்க உறுப்பினர் சந்திரபாபு, கவிஞர் பேரவைத் தலைவர் பே. ராஜேந்திரன், சிவானந்தம், ஜெயக்குமார், குருராஜ், ராமச்சந்திரன், கதிர்வேல் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

நன்றி ; தினமணி

Socializer Widget By Blogger Yard
SOCIALIZE IT →
FOLLOW US →
SHARE IT →

0 comments:

Post a Comment