பெயர் மற்றும் இமெயில் கொடுத்து உறுப்பினராகலாம்.!

We'll not spam mate! We promise.

Friday, September 12, 2014

மலேசியப் பள்ளி தமிழ் ஆசிரியர்களுக்கு சென்னை பல்கலையில் பயிற்சி

மலேசிய துணைக் கல்வி அமைச்சர் பி. கமலநாதன் 
சென்னை பல்கலைக்கழகத் துணைவேந்தர் 
ஆர். தாண்டவனை வியாழக்கிழமை சந்தித்துப் பேசினார்.

மலேசியாவிலுள்ள 523 பள்ளிகளில் பணிபுரியும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ் ஆசிரியர்களுக்கு சென்னை பல்கலைக்கழகத்தில் குறுகிய கால திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
சென்னை வந்துள்ள மலேசிய துணைக் கல்வி அமைச்சர் பி. கமலநாதன், சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர். தாண்டவனை சந்தித்துப் பேசிய பின்னர் இந்த முடிவை சென்னை பல்கலைக்கழகம் எடுத்துள்ளது. மேலும், அவ்வாறு பயிற்சி பெற வரும் ஆசிரியர்களுக்கு இலவசமாகத் தங்கும் வசதி அளிப்பது, சென்னைப் பல்கலைக்கழகம், மலேசியா இடையே மாணவர்கள் கல்விப் பரிமாற்றம் செய்துகொள்வது என்பன உள்ளிட்ட முடிவுகளும் எடுக்கப்பட்டுள்ளன.
அதோடு, பல்கலைக்கழகத்தில் தமிழ் வளர்ச்சியின் அங்கமாக உருவாக்கப்பட்டுள்ள சங்கப்பலகை இருக்கையில் கல்வி பெறும் மாணவர்கள், மலேசியக் கல்வி வளர்ச்சிப் பணிகளுக்குப் பயன்படுத்தப்படுவர் என மலேசிய அமைச்சர் உறுதியளித்துள்ளதாகவும் சென்னை பல்கலைக்கழக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி :- தினமணி

Socializer Widget By Blogger Yard
SOCIALIZE IT →
FOLLOW US →
SHARE IT →

0 comments:

Post a Comment