பெயர் மற்றும் இமெயில் கொடுத்து உறுப்பினராகலாம்.!

We'll not spam mate! We promise.

Tuesday, September 23, 2014

வாடிக்கையாளரை ஏமாற்றிய ரியல் எஸ்டேட் நிறுவனம் ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு


பசுமைக் குடியிருப்பு கட்டித்தருவதாகக் கூறி , வாடிக்கையாளரை ஏமாற்றிய ரியல் எஸ்டேட் நிறுவனம் ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்கவேண்டும் என்று சென்னை தெற்கு நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூரூவைச் சேர்ந்தவர் பி.சோமசேகர். இவர் சென்னை நுகர்வோர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் கூறியிருப்பதாவது..

பத்திரிக்கைகளில், “தேகா பார்ம்ஸ் பொள்ளாச்சி “ ( DEGA FARMS POLLACHI ) என்ற பெயரில் பசுமைக் குடியிருப்பு குறித்த ரியல் எஸ்டேட் விளம்பரம் வெலியிடப்பட்டு இருந்தது. அதன்படி, பசுமைக்குடியிருப்புக் கட்டப்பட உள்ள இடத்தை நிறுவன அதிகாரிகளுடன் சென்று பார்த்தேன்.’ ஒரு சதுர அடி ரூ250/- நெருங்கிய நண்பர்களுக்கு மட்டும்தான்  இந்த விலை .விரைவில் இடத்தின் மதிப்பு ரூ.20 லட்சம் உயரும்’ என்று நிறுவத்தினர் தெரிவித்தினர்.

அதன் அடிப்படசியில் 1500 சதுர அடி கொண்ட கட்டிடம் கட்டிக் கொடுக்க முன்பணம் ரூ.2 லட்சம் செலுத்தினேன். சில நாட்கள் கழித்து நேரில் சென்று பார்த்தபோது கட்டிடம் எதுவும் கட்டப்படவில்லை. இது குறித்து நிறுவனத்திடம் கேட்டதற்குப் பசுமைக் குடியிருப்புத் திட்டம் கைவிடப்பட்டதாகத் தெரிவித்தனர். “பணத்தைக் கேட்டு நோட்டீஸ் அனுப்பியும் தரவில்லை. எனவே, நான் செலுத்திய ரூ.2 லட்சத்தை 187 சதவிகித வட்டியுடன் திருப்பியளிக்க உத்தரவிட வேண்டும். மேலும் மன உளைச்சல் ஏற்படுத்தியதற்காக ரூ2 லட்சம் , போக்குவரத்து செலவு ரு.12 ஆயிரம் வழங்க உத்தரவிட வேண்டும்’ என மனுவில் திரு . சோமசேகர் கூறியிருந்தார்./

இந்த வழக்கை சென்னை தெற்கு நுகர்வோர் நீதிமன்றத் தலைவர் திரு. பா.ஜெயபாலன், உறுப்பினர்கள் திரு. எஸ்.தீனதயாளன் , திருனதி கே.அமலா ஆகியோர் விசாரித்தனர். .

தீர்ப்பில் கூறியதாவது :- தேகா பார்ம்ஸ் அண்டு எக்கோ கன்ஸ்ட்ரக்‌ஷன் என்ற நிறுவனம் நேர்மையற்ற வணிக முறையைக் கடைப்பிடித்துள்ளனர். மனுதாரரை நிறுவனம் ஏமாற்றியுள்ளது தெரியவருகிறது. முன்பணம் ரூ.2 லட்சத்தை , நிலம் வாங்கிய 10-10-2008-ஆம் ஆண்டிலிருந்து வைப்பீடு செய்யும் நாள்வரை 15 சதவிகித வட்டியுடன் வழங்க வேண்டும்.

வழக்கு செலவு தொகை ரூ5 ஆயிரம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

நன்றி : தி இந்து 19-07-2014

---------------------------------------------------------------------------------------------------------------------------நன்றி
 .    

தமிழ்நாடு நுகர்வோர் கவசம்

உணவுப் பொருள் வழங்கல் மற்றும்

நுகர்வோர் பாதுகாப்புத்துறை

எழிலகம், சேப்பாக்கம், சென்னை - 600 005.

தொலைபேசி - 044 - 28583222

மின்னஞ்சல் :- ccs@tn.gov.in

இணையதளம் :- www.consumer.tn.gov.in


--------------------------------------------------------------------------------------------------------------------------பயன்படுத்திக் கொள்வது புத்திசாலித்தனம்

பயன்படுத்தாதிருத்தல் அறியாமை.

ஓராண்டுச் சந்தா .100/-

மூன்றாண்டுகள் : ரூ.300/-

ஐந்தாண்டுகள் ரூ.500/-
--------------------------------------------------------------------------------------------------------------------------
  , 
 பழைய நுகர்வோர் கவச இதழ்கள்  இணையத்தில் முழுமையாகக் கிடைக்கச் செய்தல் வேண்டும்.
--------------------------------------------------------------------------------------------------------------------------

Socializer Widget By Blogger Yard
SOCIALIZE IT →
FOLLOW US →
SHARE IT →

0 comments:

Post a Comment