பெயர் மற்றும் இமெயில் கொடுத்து உறுப்பினராகலாம்.!

We'll not spam mate! We promise.

Monday, October 5, 2015

பெரியார் சாக்ரடீஸ் நினைவு விருது 2015 விழா

                                                                                                                                                                              
   
காற்றுக்கு அசையும் ஒரு மலர், நித்திரையினூடான குழந்தையின் குமிழ் சிரிப்பு ஆகிய அற்புததருணங்கள் நிகழ்வது போலத்தான் எளிமையும் அதிசயமும் அழகுமாய் நடந்தேறியது பெரியார்சாக்ரடீஸ் நினைவு விருது விழா
செவ்வாய்க்கிழமை வேலை நாளான காரணத்தால் அனைவரும் வந்து சேர எப்படியும் நேரம் பிடிக்கும் என்ற காரணத்தால் அவரது ஒரு மணிநேர படமான கூடங்குளம் அணு உலை பற்றிய ரேடியேஷன் ஸ்டோரிஸ் படத்தோடு துவக்க திட்டமிட்டோம் 
  

முன்னாள் அமைச்சரும் பெரியார் சாக்ரடீசை நெருக்கமாக அறிந்தவருமான பரிதி இளம் வழுதி அவர்கள்  காலில் பட்ட காயம் காரணமாக திடீரென வரமுடியாத நிலையில் நேற்றே அமுதனை சந்திக்க விரும்பி வீட்டுக்கு வரவழைத்து கவுரவித்திருந்தார்.


இன்று விழாவில் அவரது இன்மையை கபோக்கும் விதமாக அரங்கினுள் எதிர்பாரவிதமாக எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் வருகை தந்தார். இத்தனைக்கும் முறையான அழைப்புகூட இல்லாத நிலையில் இவ்விழாபற்றி கேள்விப்பட்டு அவராக வந்திருந்தார். அவரது வருகையால் அரங்கம் ஒரு மலரின் வாசத்தை எதிர்கொண்டது .மகிழ்ச்சியுடன்  அவரை எதிர்கொண்டு அழைத்து அரங்கில் அமர வைத்தோம்

சரியாக ஆறுமணிக்கு திட்டமிட்டார் போல  அமுதனின் ஆவணப்டம்  திரையிடல் துவங்கியது

தொடர்ந்து இயக்குனர் தங்கர்பச்சான் , பத்ரிக்கையாளர் மை பா நாராயணன் ஆகியோரும் வந்தனர் அரங்கமும் முழுமையாக நிறைந்தது.

வழக்கமாக இது போன்ற ஆவணப்படத்திரையிடல்களின் போது பலரும் அங்குமிங்குமாய் எழுந்து வெளியே செல்வதுண்டு ஆனல் ஆச்சர்யமூட்டும் வகையில்  அவ்வப்போது கைதட்டல்களுடன்  அரங்கம் களைகட்டிக்கொண்டிருந்த்து அமுதனின் மிக நேர்த்தியான பார்வையாளனை கட்டிப்போடும் காட்சி மொழியும் மண்ணின் மைந்தர்களது போராட்டத்தின் மேல் கொண்டிருந்த உணர்வுபூர்வமான மன எழுச்சியும்  அதற்கு காரண்ம் என்பதை அறிந்து கொண்டேன்
ஆவணப்படம் முடிந்த கையோடு விருது விழா துவங்கியது விருது கொடுக்கப்போகும் முக்கிய விருந்தினர்கள் மற்றும் விருது வாங்கப்போகும் ஆர்.பி.அமுதன் ஆகியோர் மேடைக்கு அழைக்கப்பட அவர்களும் வந்து தங்களுக்கான இருக்கையில் அமர்ந்தனர்

பெரியார் சாக்ரடீஸ் குறித்த சிறு அறிமுகத்தை பார்வையாளர்களுக்கு கட்டுரையாக நான் வாசிக்க தொடர்ந்து ஒரு நிமிட மவுன அஞ்சலி

விருதுக்குழுவில் ஒருவரும் பெரியார் சாக்ரடீசின் நெருங்கிய நண்பருமான  டாக்டர் நாச்சி முத்து அவர்கள் இந்த விழா பற்றியும் தனக்கும் சாக்ரடீசுக்குமான உறவை பற்றியும் சுருக்கமாகவும் அழகாகவும் பேசினார்.


தமிழக அரசின் ஊழியராக அவ்வப்போது மந்திரிகளுக்கு தேவைப்படும் நேரத்தில் சுருக்கமாக தகவல்கள் மற்றும் கட்டுரை எழுதி தருவதில் ஆதாரங்களை தேடித்தருவதில்  இரண்டு ஆட்சிக்காலத்திலும் அவர் பாகுபாடின்றி சிறப்பாக பணிபுரிந்தார். அது அரசு வேலை என்பதைக் கடந்த அவரது ஆர்வமும் ஈடுபாடுமே அவருக்குள் இருந்து அவரை செயல்படுத்தியது. இரண்டு ஆட்சிக்காலத்திலும் பலரது முக்கியமான உரைகள் தமிழகம் முழுமைக்குமாக பயனளிக்க கூடிய சேவைகளுக்கு அவர் பின்புலனாக இருந்திருக்கிறார். செம்மொழி சிற்பிகள் நூலை பரிதி அவர்கள் ஆலோசனையின்படி நாங்கள் கொண்டுவர திட்டமிட்ட போது அதில் அவரது ஈடுபாடும் பங்களிப்பும் அபாரமானது என்றார்.

மை பா நாராயாணன் தனக்கும் பெரியார் சாக்ரடீசுக்குமான அனுபவங்களை பகிர்ந்து கொண்டார் , பழுத்த ஆத்திகரான  மை பா நாராயணன் பழுத்த நாத்திகரான சாக்ரடீசும் நண்பர்களாக முடிந்த சாத்தியத்துக்கு காரணம் பெரியார் சாக்ரடீசிடம் இருந்த மனித நேயப்பற்றே என்று கூறி தன் அவரோடு பழகிய அனுபவங்களை கூறினார்

அடுத்தாக எஸ் ராமகிருஷ்ணன் பேசிய போது இவ்விழாவில் வந்து கலந்து கொண்டதற்கான காரணம் பெரியார் சாக்ரடீஸுக்கும் தனக்குமான நட்பு எனக்கூறி அனைவரையும் நெகிழ வைத்தார்.

ருஷ்ய கலாச்சார மையத்தில் நாள் தோறும் ஒரு எழுத்தாளர் பற்றிய உரைவிழாவின் போது தினசரி தவறாமல் உரை கேட்க வந்த சாக்ரடீசுக்கு அன்று  அலுவல் வேலை காரணமாக  பதினைந்து நிமிடம் தாமதமாக போக வேண்டிய நிர்ப்பந்தம். உடனே ராம்கிருஷ்ணனுக்கு போன் செய்த சாக்ரடீஸ் எனக்காக உரையை 15 நிமிடம் தாமதித்து துவங்க முடியுமா என கேட்டிருக்கிறார். அதற்கு எஸ் ரா வோ தனக்காக பலரும் காத்திருக்கும் சூழலில் தன்னால்  எப்படி சாத்தியப்படும் எனக்கேட்க சாக்ரடீஸ் குழந்தை போல உங்கள் உரைக்காக தினசரி ஓடோடி வருகிறேன் எனக்காக நீங்கள் இதை செய்யக்கூடாதா என குழந்தை போலகேட்க அவரது ஆர்வத்திற்கும் வாசக அனுபவத்துக்கும் மதிப்பளித்து எஸ் ரா 15 நிமிடம் அவருக்காக காத்திருந்தாக சொல்லி ஒரு வாசகனாக சாக்ரடீசின் தீவிரத்தை எடுத்துரைத்தார். தொடர்ந்து அவரது பெயரில் கொடுக்கப்படும் முதல் விருதே மிகச்சரியான நபருக்கு செல்வது தனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாக கூறி தேர்வு க்குழுவினரை பாராட்டி நன்றி தெரிவித்தார்

அடுத்து விழா பற்றியும் விருது பற்றியும் நான் முன்பே தயாரித்து வைத்த உரையை வாசித்து இறுதியாக ஆர் பி அமுதனை தேர்வு செய்த காரணகாரியங்களை விளக்கி அவரது முக்கியத்துவத்தை கூற பலத்த கர கோஷத்துடன் ஆர்.பி.அமுதன் அவர்களுக்கு  எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன்  பொன்னாடை போர்த்த இயக்குனர்  தங்கர்பச்சான் விருது வழங்கி கவுரவித்தார்

பின் கவிஞரும் கொம்பு வார இதழின் ஆசிரியருமான வெய்யில் ஆர் பி அமுதன் வாழ்க்கை வரலாற்றை சுருக்கமாக வாசிக்க ஆர் பி அமுத்னை பாராட்டும் வகையிலும் பெரியார் சாக்ரடீசை நினைவு கூறும் வகையிலும் பத்ரிக்கையாளர் எழுத்தாளர் நக்கீரன்  இணை ஆசிரியர் கோவி லெனின் சிற்றுரை நிகழ்த்தினார்.  தொடர்ந்து இயக்குனர் தங்கர் பச்சான் தன் சிறப்புரையை வழங்கினார். பெரியார் சாக்ரடீசுக்கும் தனக்கும் நடந்த காராசாரமான  கருத்து மோதலை பற்றிக்கூறினார். தன் வீட்டில் சாப்பிட வந்து  சண்டை போட்டுக்கொண்டு கோபித்துக்கொண்டு போனதை நினைவுறுத்தி அவர் தான் கொண்ட கொள்கையின் மேல் கொண்டிருந்த உறுதியை எடுத்தியம்பினார். பின் அந்த மோதலே பெரியார் திராவிடர் கழகம் பெரியார் படம் எடுக்க விதையாக விழுந்த கதையை கூறி பெரியார் சாக்ரடீசின் முக்கியத்துவத்தை கூறினார். தொடர்ந்து இன்றைய சூழல் பற்றியும் இளைஞர்கள் ஆற்ற வேண்டிய பணியையும் பற்றி கூறிய தங்கர்பச்சான் ஆவணப்படங்களின் முக்கியத்துவம்  பற்றி கூறி ஆர் பி அமுதன் அவர்களின் பங்களிப்பை உச்சிமுகர்ந்து பாராட்டினார் 
.
அமுதனின் படங்கள் சமூகத்தின் அவலங்களை சாட்டையடியாக உணர்த்துபவை இவற்றை பிட்டு படங்களை போல கம்ர்ஷியல் படங்கள் ஓடும் போதுஇணைத்து மக்களை அதிரவைக்க வேண்டும் என அதிரடியாக ஆலோசனைகள் கூறினார் . டாக்குமண்டரி படங்களுக்காக மிகபெரிய இயக்கம் அமைக்கவேண்டும் என்ற ஆதங்கமும் அவரது பேச்சில் இருந்தது.

அவர் பேசி முடித்த கையோடு விருது குழுவின் நிமித்தம் தொடர்ந்து பெரியார் சாக்ரடீசு பெயரில் அறக்க்ட்டளை துவங்கவிருப்பதற்கான் அறிவிப்பை திரு.டாக்டர் நாச்சிமுத்து அவர்கள் அறிவிக்க  தொடர்ந்து ஏற்புரை வழங்க வந்த அமுதன் இந்த அங்கீகாரம் நான் களைத்திருக்கும் போது கிடைத்த கைதட்டல் . இது என்னை உற்சாகபடுத்தி என் பாதையில் என்னை முன்னிலும் உற்சாகமாக ஓட வைக்கிறது என்றும் கூறினார்

இறுதியாக வேடியப்பன் நன்றியுரை கூற அது வரை செவியில் உள்வாங்கி சிந்தையின் ஆழத்தில் சஞ்சரித்த  பார்வையாளர்களின் உடல்கள் இயல்பு நிலைக்கு வந்து தங்களை உணரத்துவங்க கூட்டம் மெல்லக் கலையதுவங்கியது


Socializer Widget By Blogger Yard
SOCIALIZE IT →
FOLLOW US →
SHARE IT →

0 comments:

Post a Comment