பெயர் மற்றும் இமெயில் கொடுத்து உறுப்பினராகலாம்.!

We'll not spam mate! We promise.

Friday, October 17, 2014

வேர்களைத் தேடி ...முதல் தேவாரப் பாடல் !நால்வர்
inner_header
DR._Lambotharan
தேவாரம்- முதற் பாடல்

குருவடி பணிந்து
இ.லம்போதரன் MD
www.knowingourroots.com
 First Song of Thaevaaram – The Garland of the Sacred Songs for God

முன்னொரு காலத்திலே தமிழ் நாட்டிலே அப்பர் சுவாமிகள் என்றொரு அருளாளர் வாழ்ந்தார். இவர் காலம் கி.பி. ஏழாம் நூற்றாண்டு என்பர். இவர் சம்பந்தருடைய சமகாலத்தில் வாழ்ந்த பெரியார். இவருடைய இளமைக்காலத்திலே அக்காலத்தில் பிரபலமாயிருந்த சமண மதத்தைச் சார்ந்த கல்வி கற்று சமண சமயத்துக்கே மாறினார். 

இவருக்கு கடுமையான வயிற்று வலி வந்தது பல நாட்களாகியும் எல்லா வைத்தியங்களும் செய்தும் ஒருவராலும் குணப்படுத்த முடியவில்லை. இறுதியில் தனது அக்காவிடம் வந்து சேர்ந்தார். 

அக்கா திலகவதி இவருக்கு திருநீறு பூசிக் கோவிலுக்கு அழைத்துச்சென்று சிவனை வழிபடவைத்தார். அங்கு இவர் ‘கூற்றாயினவாறு‘ என்ற பாடலைப் பாடி வழிபட வயிற்றுவலி உடனடியாக நீங்கியது. 

இதுவே பின்னர் இவர், சம்பந்தர், சுந்தரர் ஆகியோரால் பாடப்பட்ட எண்ணாயிரத்துக்கு மேற்பட்ட தேவாரப்பாடல்களின் தொடக்கம். 

அன்றில் இருந்து தமது எண்பதாவது வயது வரை பல ஊர்களுக்கும் சென்று, பல தலங்களைத் தரிசித்துப், பாடல்கள் பாடி மக்களை சைவ சமயநெறியில் வாழ வழி காட்டினார். 

இன்றும் நாம் இவரின் வழிகாட்டலைப் பின்பற்ற முயலுகின்றோம். இவர் சைவத்தின் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவராகவும், நான்கு சமய குரவர்களில் ஒருவராகவும் மதிக்கப்படுகின்றார்.

கூற்றா யினவா றுவிலக் ககிலீர்
கொடுமை பல செய்தன நானறியேன்
ஏற்றாய் அடிக்கே இரவும் பகலும்
பிரியாது வணங்குவன் எப்பொழுதும்
தோற்றாது என் வயிற்றின் அகம்படியே
குடரோடு துடக்கி முடக்கி இட
ஆற்றேன் அடியேன் அதிகைக் கெடில
வீரட்டானத் துறை அம்மானே”

Knowing Our Roots
5637, Unit 7, Finch avenue East
Scarborough, On
Canada 
(Finch & Tappscot)
Email : knowingourroots@hotmail.com
satsang@knowingourroots.com
yourquestion@knowingourroots.com
youth@knowingourroots.com
Fax : 416- 299-4620

இந்து மதம், சைவ சித்தாந்தம் போன்ற ஆன்மீகத் தேடல் உடையோருக்கான தளம்

Socializer Widget By Blogger Yard
SOCIALIZE IT →
FOLLOW US →
SHARE IT →

0 comments:

Post a Comment