பெயர் மற்றும் இமெயில் கொடுத்து உறுப்பினராகலாம்.!

We'll not spam mate! We promise.

Friday, October 17, 2014

ஓவிய வடிவில் தமிழர் வரலாறுதமிழ்மொழி, இனம், நிலம் இவற்றின் பண்டைய வரலாற்றை தமிழர்கள் முழுமையாக அறியவில்லை. நாம் யார் என்பதை உணர்ந்தால்தான் உலக அரங்கில் தமிழினம் தலை நிமிர்ந்து நிற்க முடியும். இந்த உயரிய நோக்கத்தை நிறைவேற்ற தமிழக பெண்கள் செயற்களம் "தமிழர் வரலாறு' குறித்த ஓவியக் கண்காட்சி ஒன்றினை நடத்தியது. பல்லாயிரக்கணக்கான மக்கள் அதைப் பார்த்து வியந்து மகிழ்ந்தனர். தம்மை உணரவும் செய்தனர்.

அரசு அல்லது பல்கலைக் கழகங்கள் செய்ய வேண்டிய ஒன்றினை தனி ஒரு அமைப்பு  யாருடைய உதவியும் இல்லாமல் செய்தது என்பது பாராட்டத்தக்க ஒன்றாகும். கண்காட்சியை நடத்தியதோடு மட்டுமல்ல அதில் வைக்கப்பட்டிருந்த ஓவியங்களை புத்தகமாகத் தொகுத்து வெளியிடும் அரும்பணியையும் தமிழகப் பெண்கள் செயற்களம் செய்துள்ளது. அதற்காக அதன் ஒருங்கிணைப்பாளர் இ. இசைமொழி அவர்களையும் அவர்களுக்குத் துணையாக நின்று செயற்பட்ட அனைவரையும் மனமாரப் பாராட்டுகிறோம்.

தமிழகப் பெண்கள் செயற்களம் : அலைபேசி : 9094430334, 9884187979, 9841268676.

மின்னஞ்சல் : seyarkalam@gmail.com இணையதளம் : www.seyarkalam.org விலை : ரூ.500/- மூன்று தொகுதிகள்

நன்றி :- http://tamil.thenseide.com/


Socializer Widget By Blogger Yard
SOCIALIZE IT →
FOLLOW US →
SHARE IT →

0 comments:

Post a Comment