பெயர் மற்றும் இமெயில் கொடுத்து உறுப்பினராகலாம்.!

We'll not spam mate! We promise.

Sunday, October 5, 2014

ம.பி. பாடப் புத்தகங்களில் தேசிய கீதத்தில் பிழை: தவறை திருத்த ஆளுநர் உத்தரவு



மத்தியப் பிரதேச மாநிலத்தில், பள்ளிப் பாடப் புத்தகங்களில் அச்சிடப்பட்ட தேசியகீதத்தில் இருக்கும் எழுத்துப் பிழையை திருத்திக் கொள்ளும்படி, மாநில அரசுக்கு அந்த மாநில ஆளுநர் ராம் நரேஷ் யாதவ் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து போபாலில் பி.டி.ஐ. செய்தியாளரிடம் அவர் கூறியதாவது:

மத்தியப் பிரதேசத்தில் உள்ள பல்கலைக்கழகங்கள், பிற கல்வி நிறுவனங்களுக்கு நான் சென்றபோது, அங்குள்ளவர்கள் தேசிய கீதத்தைப் பாடும்போது, "சிந்த்' என்பதற்கு பதிலாக "சிந்து' எனக் குறிப்பிடுவதை பார்த்தேன். இதுபோல பள்ளி பாடப்புத்தகங்களிலும், "சிந்த்' என்பது "சிந்து' என அச்சிடப்பட்டிருந்தது.

இதையடுத்து, இந்த தவறைச் சரி செய்யும்படி மாநில அரசுக்கும், பல்வேறு பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கும் நான் கடிதம் எழுதியுள்ளேன்.
இதுமட்டுமல்லாமல், 10, 12ஆம் வகுப்பு பாடப்புத்தகங்களில் மராத்தியத் தலைவர் தாத்தியா தோபே தூக்கிலிடப்பட்டது குறித்து தவறான தகவல் இடம்பெற்றிருந்தது. சிவபுரி மாவட்டத்துக்கு நான் சென்றபோது இதைக் கண்டுபிடித்தேன். அதாவது 10ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடப் புத்தகத்தின் 110ஆவது பக்கத்தில், 1959ஆம் ஆண்டு வெள்ளைக்காரர்களால் விசாரணை நடத்தப்பட்டு, தாத்தியா தோபே தூக்கிலிடப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதே புத்தகத்தில் 145ஆம் பக்கத்தில், அவர் கைது செய்யப்பட்டு, சிவபுரியில் தூக்கிலிடப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் 12ஆவது வகுப்பு சமூக அறிவியல், ஹிந்தி பாடப் புத்தகங்களிலோ, தாத்தியோ தோபே தூக்கிலிடப்பட்டார் என்பதற்குப் பதிலாக யாரோ ஒருவரை வெள்ளைக்காரர்கள் தூக்கிலிட்டனர் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதுகுறித்து, மத்தியப் பிரதேச முதல்வருக்கும், கல்வித்துறை அமைச்சருக்கும் இந்த ஆண்டு தொடக்கத்தில் கடிதம் எழுதினேன். அதைத் தொடர்ந்து, அந்த தவறை மத்தியப் பிரதேச அரசு திருத்திக் கொண்டது என்றார் நரேஷ் யாதவ்.

நன்றி :- தினமணி

Socializer Widget By Blogger Yard
SOCIALIZE IT →
FOLLOW US →
SHARE IT →

0 comments:

Post a Comment