பெயர் மற்றும் இமெயில் கொடுத்து உறுப்பினராகலாம்.!

We'll not spam mate! We promise.

Sunday, October 5, 2014

செந்தமிழ்ப் புரவலர், இலக்கியச் செம்மல், ஆட்சிச்சொற்காவலர் கீ.இராமலிங்கனார், எம்.ஏ. எழுதிய நூல்கள் :-01.  “இசைச் சக்கரவர்த்தி  நயினாப்பிள்ளை  வரலாறு”  குமரன்  அச்சகம்காஞ்சிபுரம் - 1930

02.  “வழிகாட்டும்  வான்பொருள்” - இரெட்டியப்பட்டி  அடிகளார்  சங்கம்அருள்  நகர்அரசூர்  ( அஞ்சல் )

03.  “உண்மை நெறி  விளக்கம்” - ஆராய்ச்சி  உரைதென் ஆர்க்காடு  மாவட்டம் - 1936

04.  “நகராட்சி  முறை” - உள்ளாட்சித்துறை  அலுவலகங்களில்  தமிழைப்  பயன்படுத்த  உதவுவதுசைவ  சித்தாந்த  நூற்பதிப்புக்  கழக  வெளியீடு - 1954

05.  “திருவெம்ன்பாவை” - விளக்கத்  தெளிவுரைதருமையாதீன  வெளியீடு - 1955

06.  “தமிழ்  ஆட்சிச்  சொற்கள்” - ஆட்சிச் சொல் ஆக்கும்  முறையை  விளக்குவதுவிசாலாட்சிப்  பதிப்பகம்மதுரை - 1959.

07.  “ஆட்சித்துறைத் தமிழ்” - அரசு அலுவலகங்களில்  பயன்படுத்துதற்குரிய  சொற்கள்தொடர்கள்வரைவுகள்குறிப்புகள்அமைச்சர்  மாண்புமிகு  முத்துசாமி  அவர்களால்  வெளியிடப்பெற்றது.;  சைவ சித்தாந்த  நூற்பதிப்புக்கழக வெளியீடு - 1968.

08.  “தமிழ் மண முறை” - இலக்கிய  மேற்கோளுடன்  வெளியிட்டவர்  இரா. முத்துக்குமாரசாமிதமிழ்  ஆட்சியர், வாலாசாபாத்துசெங்கற்பட்டு  மாவட்டம். சங்கர இராமசாமி - பரமேசுவரி  ஆகியோர் தமிழ்த் திருமணத்தினை நிகழ்த்தி வைத்து கீ.இராமலிங்கனார் அவர்களால்  18-01-1973 -அன்று வாலாஜாபாத்தில்  வெளியிடப்பட்டது.

09.  “ஆட்சித் தமிழ்” - அன்றுமுதல்  இன்றுவரைசென்னைப் பல்கலைக் கழக வெளியீடு - 1977.

10.  “தமிழில்  எழுதுவோம்” - தமிழில்  ஆட்சி  நடத்த  ஊக்குவிப்பதுஅமைச்சர்  மாண்புமிகு  வீரப்பன்  அவர்கள்  தலைமையில்  வெளியிடப்பெற்றதுசைவ  சித்தாந்த  நூற்பதிப்புக்  கழக  வெளியீடு..

11.  “திருமுறைச்  சமுதாயம்”  - ஆராய்ச்சி  நூல்மாம்பாக்கம்குருகுல  அருள்மிகு  அழகரடிகள்  வெளியீடு.

12.  “ஐந்து  நிலைகள்” -  ஆராய்ச்சி  நூல்மாம்பாக்கம்  குருகுல  அருள்மிகு  அழகரடிகள்  வெளியீடு.

13.  "Tamil Marriages,  Modes  of  Performance  and  Significance,  Translation  of  my  talk  in  Tamil  published  by  the  Institute  of  Tradtional Culture,  Madras University

14.  “ஆட்சிச் சொல்  அகராதி”  - “பொது” - செம்மை  செய்தும்ஆக்கியும்  பெருக்கியதுமுதல்  இரண்டு  பதிப்புகள்,  1958 - 1964,  அரசினர்  வெளியீடு.  “துறைச்  சொற்கள்” - செம்மை  செய்ததும்ஆக்கியதும்  -  துறைக்கு  ஒரு  சுவடியாக  - அரசினர்  வெளியீடு  -  1958 - 1964.

15.  “தொழிலாளர்  சட்டத்  தொகுப்பு”  - ( Labour code ). அரசு  பணித்தவாறு  மொழிபெயர்த்துத்  தந்தது. - 1974.

16.  “புதுக்கோட்டை  மாவட்டச்  சுவடி”  ( ஒரு  பகுதி  )  - அரசு பணித்தவாறு  மொழி  பெயர்த்துத்  தந்தது  - 1975

17.  “தமிழ்த்  திருமணம்” - முறை  விளக்கமும்செய்முறையும்தமிநூல்  வெளியீட்டுக் கழகம்குமரன் அச்சகம்காஞ்சிபுரம்.


தகவல்  உதவி :-

என் வரலாறு  ( 1986 )

கீ.இராமலிங்கனார் ( என்றும் தமிழாய் வாழும் )

தமிழ்மணம்

8, கிழக்குப்  பூங்காச்  சாலை,

செனாய்நகர்சென்னை - 600 030.       


  

Socializer Widget By Blogger Yard
SOCIALIZE IT →
FOLLOW US →
SHARE IT →

0 comments:

Post a Comment