பெயர் மற்றும் இமெயில் கொடுத்து உறுப்பினராகலாம்.!

We'll not spam mate! We promise.

Wednesday, October 8, 2014

அறிவறியத் துடிப்தெதோ அதுதனைவாழ்த் துவமே ! - பாவலரரேறு பெருஞ்சித்திரனார்

விரிவிசும்பைச்  செங்கதிரை  விண்மீனை  நிலவை

வெப்பவொளி  மண்டிலத்தை  விளங்கருபாழ்  வெளியை,

எரிவளியைத்  தீப்புனலை  இருநிலத்தை, நிலமேல்

ஏந்துகின்ற  நுண்னுயிரை  இயங்குநிலைத்  திணையை,

திரிதருமென்  புள்ளினத்தைத்  திறல்விலங்கை  நீரில்

தேங்குறுமீன்  கூட்டத்தைத்  தெருள்மாந்த  வினத்தைப்

புரிமனத்தைப்  பெருநினைவைப்[  பொருள்செறிந்த  தமிழைப்

பொலப்படுத்துந்  திறலெதுதுவோ  புலனுறவாழ்த்  துவமெ!


தமிழாருஞ்  செம்பொருளைத்  தவிர்தலிலா  முதலைத்

தாயாருக்குந்  தாயாகித்  தனித்திருக்கும்  மெய்யைக்

குமிழாரும்  உயிர்ப்புனலைக் கூட்டுவிக்கும் நெறியைக்

கோதில்லா  நல்லுணர்விற்  குமிழ்த்தெழுமெய்க்  கூத்தைச்

சிமிழாரும்  இமைவிழிக்குள்  சிறுபாவைக்  குள்ளே

சிதரொளியைக்  குவிக்குமொரு  செயலறுத்த   செயலை

அமிழாதெம்  நன்னெஞ்சம்  அங்காந்த  தாகி

அறிவறியத்  துடிப்தெதோ  அதுதனைவாழ்த்  துவமே !  


கனிச்சாறு  -  6  -வது  தொகுதி

தென்மொழி  பதிப்பகம்

மேடவாக்கம்  கூட்டுச்சாலை,

மேடவாக்கம்,  சென்னை - 600 100.
---------------------------------------------------------
94444  40449
  

Socializer Widget By Blogger Yard
SOCIALIZE IT →
FOLLOW US →
SHARE IT →

0 comments:

Post a Comment