பெயர் மற்றும் இமெயில் கொடுத்து உறுப்பினராகலாம்.!

We'll not spam mate! We promise.

Wednesday, October 29, 2014

பன்னூல் ஆசிரியர் நா.கதிரைவேற் பிள்ளை
பன்னூல்  ஆசிரியர்

நா.கதிரைவேற்  பிள்ளை

1874  -  1907


தமிழ் - வடமொழி  ஆகிய  இருமொழிப்  புலமையர்  -  நாவன்மையர்: திரு.வி.க.வின்  ஆசிரியர்.

கவனகம் வல்லார்

பன்னூல்  ஆசிரியர். ‘அருட்பா  அருட்பாதான்,  மருட்பா  அல்ல,  என்று முழக்கமிட்டவர்.  சிறந்த  அகராதியைத்  தொகுத்தவர்.


யாழ்ப்பாணத்தில்  மேலைப்புலோலி  என்னும்  ஊரில்  பிறந்தவர் கதிரைவேலர்.  இவர்  தந்தையார்  பெயர்  நாகப்பிள்ளை  என்பது.  பிறந்த ஆண்டு  கி.பி. 1874.

இவர்  சைவ  வித்தியாசாலையில்  ஆராம்  வகுப்பு  வரை  பயின்றார்.  அதற்கு மேற்  பயில  வறுமை  இபம்  தராமையால்  தமிழறிஞர்களைத்தேடி அவர்களிடம்  தமிழ்  இலக்கியம்,  இலக்கணம்,  சித்தாந்தம்,  தருக்க  நூல்கள் ஆகியவற்றைக்  கற்றார்.  வடமொழிப்  புலமையும்  பெற்றார்.

இவர்க்குப்  பதினெட்டாம்  அகவையிற்  திருமணம்  நடந்தது.  துணைவியார் பெயர்  வடிவாம்பிகை  என்பது.

நொந்தாரிசு  சிதம்பரம்  பிள்லை  என்பாரிடம்  பத்திரம்  எழுதுபவராகப்  பணி செய்தார்.  அப்பணியில்  மனம்  செல்லவில்லை.  அடிமைப்  பணியாகவும் தோன்றியது.  அதனால்  அப்பணியை  விட்டுத்  தம்  துணைவியாரொடும்  தம் இருபத்திரெண்டாம்  வயதில்  சென்னைக்கு  வந்தார்.

சென்னையில்  தி.த. கனகசுந்தரம்  பிள்ளை,  சபாபதி  நாவலர்  ஆகிய பெருமக்களோடு  தொடர்பு  கொண்டார்.

கேட்டாரை  வயப்படுத்தவல்ல  நாவன்மையர்.  தருக்கத்தில்  மிகத் தேர்ந்தவர். சைவ  சமயத்தில்  ஆழ்ந்த  பற்றாளர்.  எண்  கனகம்,  பதின்  கவனகம் என்பவை  செய்து  வியப்புறுத்தும்  ஆர்றலர்.

சிவநெறியே  உயர்நெறி  என்பதைப்  பிற  பிற  சமயத்தாரொடும்  வாதிட்டு வென்றமையால்,  “அத்துவித  சித்தாந்த  மகோத்தரணர்’  என்றும்,  ”மாயா வாத  துவம்ச  கோளரி”  என்றும்  பாராட்டப்படும்  சிறப்பைப்  பெற்றார்.

ஆரணி  அரசவைப்  புலவராகவும்,  மதுரைத்  தமிழ்ச்  சங்கப்  புலவராகவும் விளங்கிய  இவர்,  ஆங்கிலேயர்க்குத்  தமிழ்  கற்பிப்பவராகவும்  இருந்தார். இராயப்பேட்டை  வெசுலி  கல்வி  நிலையத்தில்  தமிழாசிரியராகப்  பணி செய்தார்.  அக்காலத்தில்  இவரிடம்  பயின்றவர்  தமிழ்த்  தென்றல்  திரு.வி.க. கதிரைவேற் பிள்ளை  சரித்திரம்  என்னும்  நூலே,  திரு.வி.க.  இயற்றிய  முதல் நூலாகும்.

“கதிரைவேற்  பிள்ளையை  முதல்  முதல்  புரசையில்  ஒரு  கண்டனக்  கூட்டத்தில்  பார்த்தேன்.  அவர்தம்  நாவன்மை  என்  உள்ளத்தைக்  கொள்ளை  கொண்டது.  அவர்  வெஸ்லி  கல்லூரியில்  ஒரு  தமிழாசிரியராக  வந்தபோது  அவருடன்  யான்  நெருங்கிப்  பழகினேன்.  அப்பழக்கம்  என்னைக்  கதிரைவேற்  பித்தனாக்கியது  என்கிறார்.  கூர்ம  புராணம்,  சிவராத்திரி  புராணம்  முதலியவற்றிற்கு  வரைந்துள்ள  விரிவுரைகள்  அவரது  புலமைத்  திறத்தை  விளக்குவனவாம்.

கதிரைவேற்  பிள்ளையால்  செப்பம்  செய்யப்பட்ட  பேரகராதி  பின்னே தோன்றிய பல  அகராதிகளுக்குச்  செவிலித்தாயாக  நின்றுவருதலை  அறிஞர் இன்றும்  போற்றா  நிற்பர்.

"என்  வாழ்க்கைச்  சக்கரம்  ஒரு  வழியில்  ஓடிக்  கொண்டிருந்தது.  கதிரைவேற்  பிள்ளை  கூட்டுறவால்  அது  வேறு  வழியில்  திரும்பியது.  என்  பொருட்டோ  கதிரைவேற்  பிள்ளை  யாழ்ப்பாணம்  விடுத்துச்  சென்னை  போந்தனர்  என்று  யான்  ஒவ்வொருபோழ்து  நினைப்பதுண்டு  என்று தம்  வாழ்க்கைக்  குறிப்பில்  திரு.வி.க. எழுதுகிறார்.”

நாவன்மையும்  உரைவன்மையும்  தொகுப்புத்  திறமும்  கவனகச்  செல்வமும் ஒருங்க்ற்  கொண்ட  கதிரைவேலர்  தம்  முப்பத்து  இரண்டாம் அகவையிலேயே  நீலகிரியைச்  சார்ந்த  குன்னூரில்  1907-இல்  இயற்கை  எய்தினார்.     

Socializer Widget By Blogger Yard
SOCIALIZE IT →
FOLLOW US →
SHARE IT →

0 comments:

Post a Comment