பெயர் மற்றும் இமெயில் கொடுத்து உறுப்பினராகலாம்.!

We'll not spam mate! We promise.

Monday, October 20, 2014

நீர்வேலி பாலர் பகல் விடுதி

                                                          

நீர்வேலி பாலர் பகல் விடுதிநீர்வேலி தெற்கில் 1962 ம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட ஶ்ரீ சுப்பிரமணிய சனசமூக நிலையத்தின் 1955 ம் ஆண்டின் வருடார்ந்த பொதுக்கூட்டத்தின் அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்ட சமுதாய முன்னேற்றக் கழகம் பகல் நேரங்களில் ஆறு வயதுக்குட்பட்ட பிள்ளைகளைப் பராமரிப்பதற்காக பாலர் பகல் விடுதி ஒன்று ஆரம்பிக்க வேண்டும் என்று கருதியது. அதனை அரசாங்கத்திற்கு அறிவித்ததன் பிரகாரம் அரசாங்கம் வழங்கிய நன்கொடை ரூபா நாற்பதினாயிரத்தைக் கொண்டு கட்டட வேலைகள் ஆரம்பிக்கப்பட்டது. அப்போதைய சமூக சேவைகள் வீடமைப்பு கைத்தொழில் மந்திரியாக இருந்த சேர். கந்தையா வைத்தியநாதன் அவர்கள் 08.12.1955 இல் இதற்கான அத்திவாரக்கல் நாட்டப்பட்டது. இவ்வுர் மக்களின் சிரமதான முயற்சியால் பாலர் பகல் விடுதி கட்டடத் தொகுதி அமைக்கப்பட்டு அப்போதைய அரசாங்க அதிபராக இருந்த திரு.ம.ஶ்ரீகாந்த அவர்களால் 08.07.1856 அன்று திறந்து வைக்கப்பட்டது.
இத்தகைய பாலர் பகல் விடுதியை அமைப்பதற்கு காரண கர்த்தாவாக விளங்கியவரும் ஆரம்ப காலம் முதல் இருபத்தைந்து ஆண்டுகள் வரை சமுதாய முன்னேற்ற கழகத்தின் தலைவராக விளங்கியவருமான காலம் சென்ற திரு. E.K. சண்முகநாதன் அவர்கள் போற்றுதற்குரியவர். அவருடன் இணைந்து காரியதரிசியாக பணியாற்றிய திரு. வே. சி. அப்புத்துரை தனாதிகாரியாக பணியாற்றிய திரு. க. இராசதுரை ஆகியவர்களும் போற்றுதற்குரியவர்கள்.
நீர்வேலி பாலர் பகல் விடுதிஇப்பெரும்தகைகளால் உருவாக்கப்பட்ட இப்பாலர் பகல் விடுதி இப்பிரதேச பாலர்களின் உடல், உள, அறிவு, பண்பு வளர்ச்சிக்காக கடந்த 58 ஆண்டுகளுக்கு மேலாக சிறப்பான கல்வி முறைமைக்கு அமைய பாலர்களுக்கான முன்பள்ளியும் சிறப்பாக நடைபெறுகின்றது. இங்கு கற்கும், பராமரிக்கப்படும் பாலர்களுக்காக பல விளையாட்டு உபகரணங்கள் பொருத்தப்பட்ட சிறந்த விளையாட்டு முற்றம் அமைக்கப்பட்டுள்ளதுடன் விளையாட்டுப் பொருட்கள் பாலர்களின் விளையாட்டுக்காக பயன்படுத்தப்படுகிறது. நவீன கற்றல் கற்பித்தல் முறைக்கு ஏற்ப கட்புல செவிப்புல சாதனங்கள் பயன்படுத்தி பாலர்கள் ஆடல் பாடல் மூலம் கற்றல் செயற்பாட்டில் ஈடுபட வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் அடிப்படை கணனி அறிவை பெற்றுக் கொள்வதற்காக கணனிக்கூடம் அமைக்கப்பட்டுள்ளது. இவற்றின் மூலம் பாலர்கள் மகிழ்ச்சிகரமாக கற்றல்களில் ஈடுபடுகின்றனர்.
இங்கு பராமரிக்கப்படும் பாலர்களுக்கு சிறந்த போசாக்கான உணவுகளான பால், மதிய உணவு, சமபோசா, சிற்றுண்டி, தேநீர் என்பன வழங்கப்படுவதுடன் சிறந்த சுகாதாரமும் பேணப்படுகிறது. இவ்வாறான வசதிகளுடன் சிறந்த பௌதீக வளங்கள் மேற்பார்வைகளுடன் இயங்கும் இப் பாலர் பகல் விடுதியில் பராமரிக்கப்படும் பாலர்களுக்காக குறைந்த கட்டணங்களே அறவிடப்படுகின்றன. நீர்வேலி லண்டன் நலன்புரி சங்கம், நீர்வேலி கனடா நலன்புரி சங்கம் என்பன நிதி உதவி அளித்து வருவதுடன் பாலர் பகல் விடுதியின் வளர்ச்சிக்காக பல்வேறு பணிகளை ஆற்றுகின்றன. அத்துடன் உள்ளூர், வெளிநாடுகளில் வாழும் நலன் விரும்பிகளும் உதவிகளை அளித்து வருகின்றனர்.
கடந்த வருடத்தில் விளையாட்டுப் போட்டியும் கலை விழாவும் கலைச்சுற்றுலா, வாணி விழா, ஆசிரியர் தினம், கணனி அறை திறப்பு விழா என்பன நடைபெற்றன. எதிர்காலத்தில் ஆங்கில பேச்சுக்கலை வகுப்பு ஆரம்பிக்கப்படவுள்ளது.

பதிப்பாசிரியர்

     சி. சுதர்சன்

 நன்றி :- “http://www.ourjaffna.com/

Socializer Widget By Blogger Yard
SOCIALIZE IT →
FOLLOW US →
SHARE IT →

0 comments:

Post a Comment