பெயர் மற்றும் இமெயில் கொடுத்து உறுப்பினராகலாம்.!

We'll not spam mate! We promise.

Saturday, October 4, 2014

தங்கவேல் ஜெய்சக்திவேல்


தங்கவேல் ஜெய்சக்திவேல் (அல்லது தங்க. ஜெய்சக்திவேல் Thangavel Jaisakthivel பி: 21 சூன் 1978) வானொலித்துறையில் கொண்ட பற்றினால்  வானொலி தொடர்பான படிப்பினைப் படித்து பிபிசி உலக சேவையில் பணியாற்றியவர் . சென்னைப் புதுக்கல்லூரியில் காட்சி சார் அறிவியல் (Visual Communication) துறையில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றினார். பின்னர் திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் உள்ள தொடர்பியல் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வந்தார். தற்போது சென்னைப் பல்கலைக்கழகத்தில் இதழியல்  மற்றும் தொடர்பியல் துறையில்  உதவிப்பேராசிரியராகப் பணியாற்றி வருகின்றார்.

ஆரம்ப கால வாழ்க்கை
தமிழகத்தின் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தாலூக்காவில் உள்ள பெரியாத்துக் கள்ளிவலசு என்னும் கிராமத்தில் பிறந்து வளர்ந்தார். அப்பா பழநிசாமி தங்கவேல், அம்மா கெளசல்யா. சகோதரர் தங்க. சிவராஜ்.

கல்வி
தனது பள்ளிக் கல்வியை பொன்னு மெட்ரிகுலேசன் பள்ளியிலும், என். சின்னசாமி பிள்ளை மேல் நிலைப் பள்ளியிலும் முடித்தார். உடுமலைப்பேட்டைஅரசினர் கலைக் கல்லூரியில் ஆங்கில இலக்கியத்தில் இளங்கலை பட்டமும், சென்னைப் பல்கலைக்கழகத்தில் இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியலில் முதுகலை பட்டமும் முடித்தார். சர்வதேச வானொலி மீது கொண்ட பற்றினால் முதுகலையில் “வெளிநாட்டுத் தமிழ் வானொலிகள்” என்ற தலைப்பில் ஆய்வினை செய்துள்ளார்.
எம்.பில் (M.Phil) க்கான ஆய்வினை சென்னையில் உள்ள வளாகச் சமுதாய வானொலிகளை மையப்படுத்தியும், முனைவர் பட்டத்துக்கான ஆய்வினைதிண்டுக்கல்லில் ஒலிபரப்பாகும் பசுமை பண்பலை சமுதாய வானொலியை மையப்படுத்தியும் செய்துள்ளார்.

வானொலி ஆர்வம்
தனது இளமைப் பருவத்தில் தகப்பனாரின் வழிகாட்டுதலின் படி வானொலித் துறையில் ஆர்வம் ஏற்பட்டது. பள்ளியில் படிக்கும் போது இந்தியாவின் பொதுத் துறை வானொலியான அகில இந்திய வானொலி கோவை நிலையத்தில் இளைய பாரதம், ஊர்ப்புறத்திலே போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.

ஊரில் உள்ள நண்பர்களுடன் இணைந்து ஆர்டிக் சர்வதேச வானொலி நேயர்கள் மன்றத்தினை[1] நிறுவினார். ஒரு சிறு கிராமத்தில் தொடங்கிய இம்மன்றம் தற்போது தமிழகம் முழுவதும் உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.

தனது கல்லூரி படிப்பின் போது சக நண்பர்களுடன் இணைந்து அட்சயப் பாத்திரம் எனும் சிற்றிதழையும், வானொலி ஆர்வலர்களுடன் இணைந்து 1998ல் டிஎக்ஸர்ஸ் கைடு [2] எனும் வானொலி தொடர்பான செய்திகளை உள்ளடக்கிய காலாண்டு இதழை ஆங்கிலத்தில் நடத்தினார்.

சர்வதேச வானொலி (இதழ்)
வானொலிக்காக நடத்தப்பட்ட ஆங்கில இதழுக்குக் கிடைத்த வரவேற்பினை அடுத்து 1999ல் சர்வதேச வானொலி[3] என தமிழில் ஒரு இதழினைத் தொடங்கினார்.

வானொலிப் பணி
கோயம்புத்தூர் அகில இந்திய வானொலியில் ஆரம்ப காலத்தில் நிகழ்ச்சிகளை சக நேயராக வழங்கி வந்தவர், சென்னைப் பல்கலைக்கழகத்தில் படிக்கும் போது சென்னை அகில இந்திய வானொலியின் ரெயின்போ பண்பலையில் வண்ணக் களஞ்சியம் எனும் நிகழ்ச்சியின் மூலம் அறிமுகம் ஆனார். இதற்கு காரணமாக இருந்தவர் முனைவர் சேயோன் ஆவார். அதன் பின் என். சி. ஞானப்பிரகாசம் அவர்கள் தயாரித்து வழங்கிய சினிமா நேரம் எனும் நிகழ்ச்சியில் எட்டு வருடங்கள் நிகழ்ச்சித் தயாரிப்பில் உதவியாளராகப் பணியாற்றினார்.

அதே காலத்தில் நூற்றுக்கும் அதிகமான அனைத்துலக வானொலி ஒலிபரப்புகளோடு தொடர்பு கொண்டிருந்தார்.

சர்வதேச வானொலி அனுபவம்

சர்வதேச வானொலிகளான (German) வானொலி மற்றும் தைவான் வானொலிகளின் அலைஎண் கண்கானிப்பாளராக (Frequency Monitor) செயல்பட்டுள்ளார். இங்கிலாந்தின் தேசிய வானொலியான பிபிசி உலக சேவையில் நேயர் நல்லுறவு அதிகாரியாக ஆறு ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். டென்மார்கில் இருந்து வெளிவரும் Shortwave News எனும் மாத இதழின் World News பத்தி எழுத்தாளராக கடந்த ஐந்து ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறார்.

Socializer Widget By Blogger Yard
SOCIALIZE IT →
FOLLOW US →
SHARE IT →

0 comments:

Post a Comment