எப்படியேனும் இத் தமிழகத்தை
முப்படி உயர்த்திடல் வேண்டும் - என்
மூச்சதற் குதவிடல் வேண்டும் !
முப்படி நிலையில் முதற்படி தமிழ்ப்படி !
முறைப்படி அதன்நலம் வேண்டும் ! - முழு
முயற்சியும் அதற்கிடல் வேண்டும் !
தமிழ்ப்படி யேறின் தமிழினம் ஏறும் !
தமிழ்நிலை இழிவுகள் மாறும் ! - நம்
தலைவிலை எனின் - தரல் வேண்டும் !
தமிழின உரிமையே தமிழ்நில உரிமை
தருமெனில் மறுப்புரை உண்டோ ? - இத்
தலைமுறைக்(கு) உழைப்(பு) - அது வன்றோ ?
தமிழ்மொழி வாழ்க ! தமிழ்மொழி வாழ்க !
தமிழ்மொழி வாழ்க - வென் றுரைப்[போம் ! - அதால்
தமிழினம் மலர்க - வென் றழைப்போம் !
தமிழினம் வாழ்க ! தமிழினம் வாழ்க
தமிழினம் வாழ்க - வென் றுரைப்போம் - அதில்
தமிழ்நிலம் தழைக்க - வென் றுழைப்போம் !
எப்படி யேனும் இத்தமி ழகத்தை
முப்படி உயர்த்திடல் வேண்டும் ! - என்
மூச்சற் குதவிடல் வேண்டும் !
கனிச்சாறு - தொகுதி 1
தென்மொழி பதிப்பகம்
மேடவாக்கம் கூட்டுச்சாலை
மேடவாக்கம்
சென்னை - 600 100
-----------------------------
94444 40449





.jpg)
இயல்பான எதுகை மோனை, இடராத ஓசை நயம், மரபு மாறாத செய்யுள் நலம், மறக்கொணாத பொருள் வளம் இவைதாம் அரிமாப் பாவலர் துரைமா அவர்களின் பாநலம். நன்றி நண்பரே
ReplyDeleteஅய்யா, எனக்கு பாவலர் அய்யாவின் மகபுகு வஞ்சி நூல் கிடைக்கவிலலை அன்பு கூர்ந்து அதனைப் பதிவேற்றித் தருவீர்களா?
ReplyDelete