
கூகுள் நிறுவனத்தின் மூத்த துணைத்தலைவர் சுந்தர் பிச்சைக்கு அதிகபொறுப்புகள் வழங்கப்பட் டிருக்கிறது.
கூகுள் நிறுவனத்தின் முக்கிய பொறுப்புக்கு சுந்தர் பிச்சையை உயர்த்தி இருக்கிறார் இந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி லாரி பேஜ். சுந்தர் பிச்சை சென்னையை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதன் மூலம் கூகுள் பிளஸ், மேப்ஸ், காமர்ஸ், விளம்பரம் மற்றும் இன்ஃபிராஸ்ட்ரக்ச்சர், சர்ச், சோஷல் மீடியா மற்றும் ஆராய்ச்சி உள்ளிட்ட பிரிவுகளின் தலைவர்கள் இனி சுந்தர் பிச்சையின் கீழ் வருவார்கள். இதற்கு முன்பு இவர்கள் கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி லாரி பேஜ் கட்டுப்பாட்டில் இருந்தார்கள்.
அதேசமயம் கூகுள் நிறு வனத்தின் இன்னொரு பிரிவான ’யூ டியூப்’ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி லாரி பேஜ் கட்டுப்பாட்டிலே இருக்கும்.
மேலும் சுந்தர் பிச்சையின் கீழ் செயல்பட்டுவரும் கூகுள் ஆண்ட்ராய்டு, குரோம் மற்றும் ஆப்ஸ் ஆகியவை சுந்தர் பிச்சை தலைமையிலே செயல்படும் என்று நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
இந்த நிர்வாக மாற்றம் கூகுள் நிறுவனத்தின் பணியாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
1972-ம் ஆண்டு சென்னையில் பிறந்தவர் சுந்தர் பிச்சை. ஐஐடி கரக்பூர், ஸ்டான்போர்டு பல்கலைக்கழகம்(எம்.எஸ்) மற்றும் வார்டன் கல்லூரியில் (எம்பிஏ) படித்தவர். 2004-ம் ஆண்டு கூகுள் நிறுவனத்தில் இவர் இணைந்தார்.
இந்த நிர்வாக மாற்றம் மூலம் கூகுள் நிறுவனத்தின் முக்கிய பொறுப்புக்கு சுந்தர் பிச்சை உயர்த்தப்பட்டிருக்கிறார். மேலும் நிறுவனத்தின் அடுத்த சி.இ.ஓ- வாய்ப்பு இவருக்கு அதிகமாக இருப்பதாக இந்த துறை சார்ந்த வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.
நன்றி :- தி இந்து
0 comments:
Post a Comment