பெயர் மற்றும் இமெயில் கொடுத்து உறுப்பினராகலாம்.!

We'll not spam mate! We promise.

Tuesday, October 14, 2014

இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் அமைதிக்கான பரிசு


ண்டுதோறும் உலகம் முழுவதும் இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு யாருக்கு வழங்கப்படுகிறது? என்பது ஆர்வத்தோடு பார்க்கப்படும் ஒன்றாகும். இந்த நோபல் பரிசின் தொடக்கமே ஒரு உணர்வுபூர்வமானதாகும். 1833–ம் ஆண்டு சுவீடன் நாட்டில் பிறந்தவர் ஆல்பிரட் நோபல். தன் குடும்ப பாரம்பரியப்படி ஒரு என்ஜினீயராகவும், ரசாயன நிபுணராகவும், கண்டுபிடிப்பாளராகவும் திகழ்ந்தார். முதலில் ஒரு இரும்பு தொழிற்சாலையை வாங்கிய அவர் அங்கு ஆயுதங்களைத் தயாரித்தார். வெடிகுண்டுகள், டைனமைட் உள்பட 335 வெடிபொருட்களை கண்டுபிடித்ததோடு மட்டுமல்லாமல், அவற்றை விற்பனை செய்து பெரும் பொருள் ஈட்டினார்.

இந்த நிலையில், 1888–ம் ஆண்டு அவருடைய சகோதரர் காலமானார். அவர் இறந்ததை நோபல்தான் இறந்துவிட்டார் என தவறாக புரிந்துகொண்டு, பிரான்சு நாட்டில் உள்ள ஒரு பத்திரிகை மரண வியாபாரி மரணம் அடைந்தார் என்று செய்தி வெளியிட்டது. இதைகண்ட நோபல் மிகவும் அதிர்ச்சியடைந்தார். தன்னுடைய மரணத்துக்குப்பிறகு உலகம் தன்னை இப்படித்தானே நினைவில்கொள்ளும் என்ற எண்ணம் அவரை வாட்டியது. தன்னுடைய காலத்துக்குப்பிறகு உலகளாவிய அளவில் மனிதகுலத்துக்கு அமைதி, அல்லது சமாதானம், பவுதீகம், ரசாயனம், மனோதத்துவம், அல்லது மருத்துவம், இலக்கியம் ஆகிய 5 துறைகளில் பெரும் சேவை ஆற்றியவர்களுக்கு பரிசுகள் வழங்க தன்னுடைய சொத்துகளை எழுதிவைத்தார். அந்த வகையில், 1901–ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் 5 பேர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது. இந்தியாவில் இருந்து இதுவரையில் ரவீந்திரநாத் தாகூர், விஞ்ஞானி சர்.சி.வி.ராமன், ஹர் கோவிந்த் கொரானா, அன்னை தெரசா, எஸ்.சந்திரசேகர், அமர்தியா சென், வெங்கடராமன் ராமகிருஷ்ணன் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

இந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு இந்தியாவைச்சேர்ந்த கைலாஷ் சத்யார்த்திக்கும், பாகிஸ்தானை சேர்ந்த மலாலாவுக்கும் சேர்ந்து வழங்கப்பட அறிவிக்கப்பட்டுள்ளது. சத்யார்த்தி 60 வயதான ஆண். மலாலா 17 வயது பெண். இவர் இந்து, அவர் முஸ்லிம். சத்யார்த்தி குழந்தை தொழிலாளர் ஒழிப்புக்காக பாடுபடுவதையே தன் வாழ்வின் லட்சியமாகக்கொண்டு செயல்படுபவர். மலாலா, பெண் கல்விக்காக பாடுபடுபவர். தலீபான்கள் பெண்கள் யாரும் பள்ளிக்கூடத்துக்கு செல்லக்கூடாது என்று தடை விதித்த நேரத்தில், பாகிஸ்தானில் 2 ஆண்டுகளுக்கு முன்பு பஸ்சில் பள்ளிக்கூடம் சென்ற நேரத்தில் தலீபான்களால் துப்பாக்கியால் சுடப்பட்டு உயிர் பிழைத்தவர். தலீபான்களின் தொடர் அச்சுறுத்தலால் இப்போது அவர் இங்கிலாந்தில் படித்து வருகிறார்.

இப்போது இவர்கள் இருவருக்கும் இணைந்து நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தியாவும், பாகிஸ்தானும் காலாகாலமாக ஒரே நாடாகத்தான் இருந்தது. ஆங்கிலேயரிடம் இருந்து விடுதலை பெற்றபிறகு மதத்தின் அடிப்படையில்தான் இரு நாடுகளாக பிரிந்தது. பாகிஸ்தானில் உள்நாட்டு பிரச்சினைகள் ஏற்படும்போதோ, அல்லது தேர்தலை சந்திக்கவேண்டிய நேரத்திலோ மட்டும் மக்களை திசைதிருப்ப எல்லையில் மோதல், தீவிரவாதிகளை ஊடுருவ செய்தல் போன்ற செயல்களில் அந்த நாட்டு ராணுவம் ஈடுபடுகிறது. 9 நாட்களாக எல்லையில் அத்துமீறல்களில் ஈடுபட்டுக்கொண்டு இருந்த பாகிஸ்தான், இந்தியாவின் இறுதி எச்சரிக்கைக்குப்பிறகு நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட நாளில் துப்பாக்கியை பயன்படுத்துவதை நிறுத்தினாலும், இன்னும் முழுமையாக நிறுத்தவில்லை.

இருநாடும் இணைந்து நோபல் பரிசு வாங்கிய நல்ல நாளில் சத்யார்த்தி ஒரு நல்ல செய்தியை வெளியிட்டுள்ளார். மலாலாவும், நானும் இன்னும் ஒருபடி மேலே போய் இந்த துணைக்கண்டத்தில் அமைதி ஏற்பட பாடுபடவேண்டும். இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் நமது குழந்தைகள் அமைதியான சூழ்நிலையில் பிறந்து, வாழ்வதே முக்கியமானது என்று கூறியிருக்கிறார். எங்கள் பரிசளிப்பு விழாவில் இந்திய, பாகிஸ்தான் பிரதமர்கள் கலந்து கொள்ளவேண்டும் என்பதே என் விருப்பமாகும் என மலாலா தெரிவித்துள்ளார். இந்த நோபல் பரிசு இரு நாடுகளுக்கிடையே ஒரு நல்லுறவை வளர்க்கட்டும். மலாலா ஆசைப்படி இருநாட்டு பிரதமர்களும் நோபல் பரிசளிப்பு விழாவில் கலந்துகொண்டு, ஒரு புதிய அத்தியாயத்தை படைக்கலாம். நோபல் பரிசு பெற்ற இருவரும், இருநாடுகளுக்கிடையே அமைதியை பரப்பும் முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபடவேண்டும்.

 
About 2,99,000 results (0.56 seconds) 

Search Results

தினத்தந்தி

www.dailythanthi.com/Translate this page
தமிழ் நாளேடு . தற்போதைய செய்திகள், ஜூதிடம் , மற்றும் கார்ட்டூன் .

Socializer Widget By Blogger Yard
SOCIALIZE IT →
FOLLOW US →
SHARE IT →

0 comments:

Post a Comment