
ஹாங்காங்குக்கு சுய அதிகாரமும், அதன் நீதித் துறைக்கு சுதந்திரமும் வழங்குவதாக சீனாவை ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி வாக்குறுதி அளித்துள்ளது.
இதுகுறித்து, அக்கட்சி வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், ""363 உறுப்பினர்களை உள்ளடக்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்நிலைக் குழு, ஹாங்காங்கில் "ஒரே நாடு, இரண்டு ஆட்சி முறைகள்' என்ற கொள்கைக்கு செயல் வடிவம் அளிப்பதில் உறுதியாக உள்ளது'' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்சியின் அதிகாரபூர்வ அறிக்கையில் இவ்வாறு குறிப்பிடப்பட்டிருப்பது, ஹாங்காக்குக்கு சுய அதிகாரத்தையும், ஹாங்காங்கின் நீதித் துறைக்கு சீன அரசின் கட்டுப்பாடு இல்லாத சுதந்திரத்தையும் வழங்குவதையே குறிப்பதாகக் கூறப்படுகிறது.
அதிபர் ஜீ ஜின்பிங் பதவியேற்ற பின்பு, முதல் முறையாக கூடிய சீன கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்நிலைக் குழுவில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஹாங்காங் ஆட்சித் தலைவர் தேர்தலிலும், நீதித் துறையிலும் சீன அரசின் கட்டுப்பாட்டை விலக்கி, முழுமையான ஜனநாயகத்தை அமல்படுத்த வலியுறுத்தி, அந்த நகரில் மூன்று வாரங்களுக்கும் மேல் மாணவர் குழுக்களும், ஜனநாயக அமைப்புகளும் போராடி வருகின்றன.
ஜனநாயகவாதிகள் நடத்திய முற்றுகைப் போராட்டத்தினால் ஹாங்காங்கின் பல பகுதிகள் முடங்கிப் போயின.
இந்தப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வரும் முயற்சியாக, சீன கம்யூனிஸ்ட் கட்சி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
நன்றி :- தினமணி
0 comments:
Post a Comment