பெயர் மற்றும் இமெயில் கொடுத்து உறுப்பினராகலாம்.!

We'll not spam mate! We promise.

Sunday, October 19, 2014

பிள்ளையார் சுழி



நாம்  ஏன்  எழுதத்  துவங்குமுன்  ”உ”  போடவேண்டும் ?    தமிழின்  முதல் எழுத்தாகிய  ‘அ’  என்பதையோ,  முதல்  எண்  ஆகிய  ‘க’  என்பதையோ அல்லது  கடவுள்,  கணேசர்,  கணபதி  என்ற  வார்த்தைகளில்  உள்ள  முதல் எழுத்து  ‘க’  வையோ,  ’விநாயகர்’,  ‘விக்னேஸ்வரர்  என்ற  வார்த்தைகளின் முதலெழுத்தான  ‘வி’  என்றோ  போடாமல்,  ’உ’  என்ற  எழுத்தை உபயோகிப்பதன்  மர்மம் என்ன  என்று  பார்ப்போம்.

பழங்காலத்திய  மக்களிடையே  பண்டமாற்று  வழக்கமிருந்தது. தங்களுடைய
தேவைகளைப்  பண்டமாகவும்,  சிறிது  பணமாகவும்  அல்லது  பொன்னையுங் கொடுத்து  வாங்கினர்.  தவிர,  அவர்கள்  காதம்  என்ற  அளவால்  தூரத்தைக் கணக்கிட்டு  வந்தனர்.  விமானக்காலமான  இக்காலத்தைப்  போன்று, தொலைதூரந்  செல்லாதிருந்த  காலம்  அது.  

ஆகவே,  அவர்களுக்கு  நூறுக்குமேல்  எண்ணவேண்டிய  அவசியம் ஏற்படவில்லை.  தமிழர்  மட்டுமல்ல  வடமொழியினருக்கும்  இதே கதைதான்.  தமிழ்  அறிஞர்கள்  சிலர்  இதை  மறுக்கின்றனர்.  

எண்களை  ஒன்று முதல்  நூறுவரை  சொல்லிப்  பாருங்கள்.  அவை  ‘உ’  என்ற ஒலியுடனேயே  முடிவதைக்  காணலாம்.  1  முதல்  10  வரை  மட்டுமே  நாம் எடுத்துகொள்வோம்.  (  பூஜ்ஜியம்  பிற்காலத்தில்  ஏற்படுத்தப்பட்டது. அதுபோலவே,  ஆயிரம்,  இலட்சம்,  கோடி  என்ற  சொற்கள்  அவசியம் ஏற்பட்ட  காலத்திற்  தோன்றியிருக்கலாம். )  அடிப்படை  எண்ககள்  1  முதல்  10 வரை  ‘உ’  என்ற  ஒலியுடனேயே  முடிவதனால்,  எழுதும்போதெல்லாம்  ‘உ’ என்ற  கணித  ஞாபகக்  குறிப்பை  எழுதிவிட்டுத்தான்  எழுதுவது  என்ற பழக்கத்தைக்  கொண்டு,  இடையிடையே  எண்களை  எழுதநேரிடும்போது கவனமாயிருக்கவேண்டுமென்பதை  ஞாபகப்படுத்திக்  கொள்கிறோம்.


இனி,  ‘உ’  என்பதை  ஏன்  ‘பிள்ளையார்  சுழி’  என்கிறோமென்பதைப் பார்ப்போம்.  முற்காலத்தவர்  வணங்கும்  தெய்வங்களின்  பெயர்களாற்  பல கலைகளையும்  கொண்டனர்.  நடனக்  கலைக்குச்  சிவனும்,  இசைக்குச் சரசுவதியும்  அதிதேவதைகளாவர்.  தமிழ்மொழிக்கு  அதிதேவதை முருகனென்றும்,  அகத்தியர்  மூலம்  நமக்குக்  கிடைத்த  தேவமொழி அதுவென்றும்,  நாம்  நினைக்கிறோம்.  அவ்வாறே  கணிதத்த்துக்கு  விநாயகர் அதிதேவதை  எனலாம்.  ஆகையினாற்றான்,  நாம்  ஏதேனும்  எழுத ஆரம்பிப்பதற்கு  முன்பாக,  ஏதேனும்  பிழை  ஏற்படாதபடி  மிகவும் ஜாக்கிரதையுடன்  எண்களைக்  கையாள  வேண்உம்  என்பதை நமக்கு ஞாபகப்படுத்திக்  கொள்ளும்  நோக்குடன்  ஞாபக  அறிகுறியாக,  நாம் கணபதியை  முதலில்  நினைத்து  அவருடைய  கலையையும்,  அதேசமயம் நினைத்துக்கொள்வதற்காக  ,  எண்கள்  முடியும்  ஒலியாகிய  ‘உ’  என்ற எழுத்தைப்  பிள்ளையார்  சுழியாகப்  போட்டு  வருகிறோம்.    

பிள்ளையாரின்  தந்தை  எனவும்,  முழுமுதற்  கடவுளென்றும்  விளங்கும் சிவனையும்,  சகல  சிறப்புக்களுக்குங்  காரணம்மும்  மொழி முதற்கடவுளும்   தகப்பன்சாமி  எனப்  ப்பெயர்  பெற்றவருமான  முருகனையும்,  பொதுவாகக் கலைத்  தெய்வம்  என்று  கொண்டாடப்பெறும்  சரசுவதியையும்  கூட  நாம் பின்னரே  வழிபடுகிறோம். 

கோவில்களிற்கூடப்  பிள்ளையாருக்கே  முதலிற்  பூஜை  நடைபெறக் காண்கிறோம்.  ‘நம்  அன்றாட  வாழ்க்கையில்  நமக்கு  எண்கலைப்  பற்றிய கவனத்தை  அகிக்கடி  ஞாபகப்படுத்தும்  நோக்குடனேயே  நம்  தமிழ்நாட்டில் வழி  எல்லாம்  எண்ணிறந்த  பிள்ளையார்  கோவில்களைக்  காண்கிறோம்.

நன்றி :-  எண்களின்  சிறப்பு , ம.சுடலைமுத்துப்பிள்ளை, திண்டுக்கல். (1979 )

  

Socializer Widget By Blogger Yard
SOCIALIZE IT →
FOLLOW US →
SHARE IT →

0 comments:

Post a Comment