வணக்கம்!
தமிழர்களின் சித்த அறிவியல் முறைகளை தற்கால முறைகளின்படி ஆராய்ந்து உலகிற்குப் பரப்ப வேண்டும். இதன் ஒரு படியாக, அமெரிக்காவில் தென் கரோலின மருத்துவப் பல்கலைக்கழகத்தில் ஒரு ஆராய்ச்சி செய்யப்பட்டுள்ளது. திருமூலர் எழுதிய பாடல்களை ஆராய்ந்ததில் (பாடல் எண்கள்: 568 மற்றும் 573) இப்பாடல்களில் மூச்சுப்பயிற்சியைச் செய்வதற்கு ஒரு சூத்திரம் தரப்பட்டிருப்பது தெரிந்தது. இந்தச்சூத்திரத்தின்படி மூச்சுப் பயிற்சியைச் செய்தால், இதைச் செய்பவர்களின் உமிழ்நீரில் பல புரதங்கள் உற்பத்தியாவது தெரிந்தது. இவற்றுள் முக்கியமான ஒரு புரதம் நரம்பு வளர்ச்சிக் காரணி (Nerve Growth Factor) ஆகும். இப்புரதம் அல்சைமர் நோயாளிகளின் நரம்பு மண்டலத்தில் குறைவாக இருக்கிறது. திருமூலரின் மூச்சுப்பயிற்சியைச் செய்வதால் அல்சைமர் போன்ற நோய்களைக்குணமாக்கிக்கொள்ளும் வாய்ப்பு இருக்கலாம் என இந்த ஆராய்ச்சி தெரிவிக்கிறது.
தமிழர்களின் பழங்கால இலக்கியம் ஒன்றிலிருந்து பாடலை ஆராய்ந்து அதனை அறிவியல் முறைகளின் வாயிலாக சோதித்தது ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்வு. இவற்றைப் போன்ற ஆய்வுகள் பெருகி, தமிழர்களின் தொன்மையான அறிவியலின் பெருமையை உலகில் பரப்பி அனைவரையும் நலமாய் வாழச்செய்யட்டும். இதனைப் பகிர்வதில் மகிழ்கிறேன்.

தொலைக்காட்சிச் செய்தி:
http://www.live5news.com/story/26598888/form-of-yoga-may-ward-off-alzheimers-disease
http://www.live5news.
நன்றி, பா. சுந்தரவடிவேல், sundara@gmail.com
0 comments:
Post a Comment