பெயர் மற்றும் இமெயில் கொடுத்து உறுப்பினராகலாம்.!

We'll not spam mate! We promise.

Wednesday, October 1, 2014

அதிமுக போராட்டத்தால் மக்கள் அதிருப்தி: 'வேண்டாமே சோகம்-வேண்டும் விவேகம்'


சிதம்பரத்தில் நடந்த வன்முறையில் சேதமடைந்த அரசு பேருந்து| படம்:டி.சிங்காரவேலு.
சிதம்பரத்தில் நடந்த வன்முறையில் சேதமடைந்த அரசு பேருந்து| படம்:டி.சிங்காரவேலு.
சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா தண்டனை பெற்றதையடுத்து அதிமுகவினரின் சோகமும் அவர்கள் அதை வெளிப்படுத்தும் விதமும் மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக பரவலாக கருத்து எழுந்துள்ளது.

தமிழகத்தின் முதல்வராக இருந்த ஜெயலலிதா, பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டது கட்சித் தொண்டர்களுக்கு மட்டுமல்லாது நடுநிலையாளர்களுக்கும் வருத் தத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அதே சமயம் எந்தவித சோதனை யிலிருந்தும் மீளும் துணிச்சலும் ஆற்றலும் பெற்ற ஜெயலலிதா சிறையில் இயல்பாக இருக்கிறார்.

ஆனால், இங்குள்ள அவரது கட்சியினரோ நிதானம் தவறி நடந்து அவருக்கு பெருத்த ஆபத்தை ஏற்படுத்தி வருகின்றனர்.

உண்ணாவிரதப் பந்தல்களிலும் பத்திரிகைப் பேட்டிகளிலும் இதைப் பொய் வழக்கு என்றும், சட்டம் தெரியாமல் நீதிபதி தீர்ப்பளித் தார் என்றும் கடுமையான வார்த்தை களைப் பயன்படுத்துகின்றனர்.
இது நீதித் துறையில் இருப்பவர் களை சினம் கொள்ளச் செய்யும் வாய்ப்பு உள்ளதாக மக்கள் கருது கின்றனர்.

தமிழகத்தின் நிர்வாகம் செயலி ழந்துவிடக்கூடாது, அரசியல் வெற்றிடம் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதுடன் மத்திய அரசு இடையில் புகுந்து விடக்கூடாது என்பதற்காக ஓ. பன்னீர்செல்வத்தை முதல்வராக பதவியேற்க சொல்லியிருக்கிறார் ஜெயலலிதா. அத்துடன் பெங்களூர் சிறையில் உள்ள சக கைதிகளிடம் சகஜமாக உரையாடியிருக்கிறார். சசிகலா, இளவரசி ஆகியோருக் கும் ஆறுதல் சொல்லி தைரியம் ஊட்டியிருக்கிறார். இதையெல் லாம் அதிமுகவினர் புரிந்து கொள்ள வேண்டும் என்று அவர்களது கருத்துகளாலும் போராட் டங்களாலும் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்கள் கருதுகின்றனர்.

இதுகுறித்து பல்வேறு தரப்பினரும் கூறியதாவது:

நீதித்துறையையும் சம்பந்தமே இல்லாமல் பிற அரசியல் கட்சி களையும் வம்புக்கிழுக்கும் வகை யில் சுவரொட்டிகளை ஒட்டி, ஜெயலலிதா மீது அரசியலுக்கு அப்பாற்பட்டவர்களுக்கு இருக்கும் அனுதாபத்தைக் குலைத்துவிடக் கூடாது. மக்களிடம் இப்போது ஏற்பட்டுள்ள அனுதாபத்தைக் கணக்கில் கொண்டு ஒருவேளை, விரைவிலேயே சட்டப்பேரவைப் பொதுத் தேர்தலை நடத்துவது என்று ஜெயலலிதா முடிவெடுத் தால் அதற்கு உதவும் வகையில் அமைச்சர்களும் கட்சி நிர்வாகி களும் அனைத்து தொகுதிகளின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்துக்கும் இப்போதிலிருந்தே உழைக்க வேண்டும்.

பெங்களூர் செல்ல வேண்டாம்

கார்களில் அணிவகுத்து பெங்களூர் செல்வதை அதிமுகவினர் நிறுத்த வேண்டும். இது நிச்ச யம் கர்நாடக மக்களுக்கு எரிச்சலை ஏற்படுத்துவதுடன் கட்சித் தலை வரையும் கேலிப் பொருளாக்கி விடும். உண்ணாவிரதம் இருப்பது, ஒப்பாரி வைப்பது போன்றவற்றை யும் நிறுத்த வேண்டும். இவற்றால் தமிழக மக்களுக்கு ஏற்பட்ட அனு தாபம் எரிச்சலாகவும் கோபமாகவும் மாறிவிட வாய்ப்பிருக்கிறது.

காந்தி ஜெயந்தியன்று நாடு முழுவதும் துப்புரவு இயக்கம் தொடங்கப்படுகிறது. இந்தியாவுக்கே முன்மாதிரியாகத் தமிழ்நாட்டில் அதை வெற்றிகரமாகச் செய்துமுடிக்க வேண்டும். மக்கள் நலப்பணிகளில் தீவிரம் காட்டுவதால் மக்கள் ஆதரவு தானாகவே திரளும்.

சுவரொட்டிகள் மூலமும் பத்திரிகை விளம்பரங்கள் மூலமும் தங்களுடைய விசுவாசத்தைக் காட்ட வரம்புமீறி பயன்படுத்தும் வாசகங்கள் அவரை நிரந்தரக் கைதியாக்கிவிடும் என்பதை உணர வேண்டும். இவ்வாறு பொதுமக்கள் தெரிவித்தனர்.

மக்கள் அவதி:

ஜெயலலிதா கைதுக்கு கண்டனம் தெரிவித்து தமிழ் திரையுலகினர் சேப்பாக்கத்தில் நேற்று உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். அப்போது பேசிய வர்கள் அதிமுகவினரை மிஞ்சும் வகையில் நீதித் துறையை விமர்சித்து கருத்து தெரிவித்தனர். இதுபோதா தென்று, அந்த பகுதியில் போக்குவரத்தும் தடை செய்யப் பட்டது. மருத்துவமனை, அண்ணா சாலை போன்ற முக்கிய இடங்களுக்கு கடற் கரை சாலையில் இருந்து வருபவர்கள் நீண்ட தூரம் சுற்றி வரவேண்டியிருந்தது. இதில் ஆம்புலன்ஸ் வண்டிகளும் விதிவிலக்கல்ல. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டனர்.


நன்றி ;- தி இந்து 

Socializer Widget By Blogger Yard
SOCIALIZE IT →
FOLLOW US →
SHARE IT →

0 comments:

Post a Comment