பெயர் மற்றும் இமெயில் கொடுத்து உறுப்பினராகலாம்.!

We'll not spam mate! We promise.

Monday, October 13, 2014

சுப்பிரமணியன் சுவாமியிடம் 100 கோடி ரூபாய் இழப்பீடு கோரி மனு தாக்கல்சுப்பிரமணியன் சுவாமியிடம் ரூ. 100 கோடி இழப்பீடு கேட்டு, சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் மீனவர் ஒருவர் மனு தாக்கல் செய்தார்.
 
சென்னை நொச்சிகுப்பத்தைச் சேர்ந்த மீனவர் கே.சி.குப்பன். இவர், எழும்பூரில் உள்ள சென்னை பெருநகர முதன்மை குற்றவியல் நடுவர் மன்றத்தில திங்கள்கிழமை ஒரு மனு தாக்கல் செய்தார்.
 
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
 
"இலங்கை கடற்படை தொடர்ச்சியாக தமிழக மீனவர்களின் படகுகளைச் சேதப்படுத்தியும், கைப்பற்றியும் வருகிறது. இந்த நிலையில், தனியார் தொலைக்காட்சிக்கு ஒன்றுக்கு அண்மையில் பேட்டியளித்த சுப்பிரமணியன் சுவாமி, இலங்கை அரசிடம் தான் கூறிய பின்னர், அந்நாட்டு கடற்படையினர் தமிழக மீனவர்களின் படகுகளைச் சேதப்படுத்துவதாகவும், கைப்பற்றுவதாகவும் தெரிவித்தார்.
 
எனவே, இலங்கை கடற்படை சேதப்படுத்தி, கைப்பற்றிய 102 தமிழக மீனவர்களின் படகுகளுக்கு இழப்பீடாக ரூ. 100 கோடியை சுப்பிரமணியன் சுவாமி தருவதற்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்'' என்று அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தது.

நன்றி :-http://tamil.webdunia.com/

Socializer Widget By Blogger Yard
SOCIALIZE IT →
FOLLOW US →
SHARE IT →

0 comments:

Post a Comment