பெயர் மற்றும் இமெயில் கொடுத்து உறுப்பினராகலாம்.!

We'll not spam mate! We promise.

Wednesday, September 10, 2014

வல்லினம் மிகுதலும் மிகாமையும் - திருக்குறள்மணி புலவர் இறைக்குருவனார் பகுதி VII


41. குற்றியலுகரம்

’உ’ என்னும் எழுத்தே உகரம்.

இயல்பாக உகரம் ஒலிக்கும் கால அளவு ஒரு மாத்திரையாகும், அவ்வாறன்றி உகரம் அரை மாத்திரையளவாக ஒலிப்பதும் உண்டு. அதுவே குற்ரியலுகரம். எனப்படும்..

மாத்திரை = கண்ணிமைக்கும் நேரம்.

தனிக் குற்றெழுத்து அல்லாது  ஏனைய எழுத்துக்களால் ( நெட்டெழுத்தாலோ, பல எழுத்துக்களாலோ  தொடரப்பட்டுச் சொல்லின்  இறுதியில் வல்லினமெய்கள் ஆறின் மேலும் ஏறி ) கு, சு, டு, து, பு, று என ) வருகின்ற உகரம் அரை மாத்திரை அளவே ஒலிக்கும். அதுவே  குற்றியலுகரம் ஆகும்.

இறுதி எழுத்துன் முன்னர் இடம் பெற்றுள்ள  எழுத்தைப் பொறுத்துக் குற்றியலுகரம் ஆறு வகைப்படும்.

01. சாறு       : நெடிற்றொடர்க் குற்றியலுகரச்ம்.

02. பட்டு        : வன்றொடர்க் குற்றியலுகரம்

03. மஞ்சு       :மென்றொடர்க் குற்றியலுகரம்

04. சார்பு        : இடைத்தொடர்க் குற்றியலுகரம் 

05. வலிது     : உயிர்த் தொடர்க்குற்றியலுகரம்

07. எஃகு         : ஆய்தத்ப் தொடர்க் குற்றியலுகரம்

குறிப்பு : உகரத்தில் முடியினும் குற்றியலுகரம் அல்லாதனவெல்லாம் முற்றியலுகரம் எனப்படும்..

எடுத்துக்காட்டு :- கடு , கதவு


42. பாட்டுப் பாடு !


பாட்டு’ என்பது வன்றொடர்க் குற்றியலுகரம்.

பாடு என்னும் வருமொழியை  நோக்கிப் பாட்டு என்பதன் பி வல்லெழுத்து வந்துள்ளது,

வன்றொடர்க் குற்றியலுகரத்தின் பின் வல்லெழுத்து மிகும்.. 

எடுத்துக்காட்டு :

பற்றுப் போடு

தீட்டுப் படுமா ?

மட்டுப் படுத்து.

சாக்குச் சொன்னான்

நாக்குஇப் புண்

கட்டுக் கட்டு

பாக்குக் கொடு

சீட்டுப் பிடி

போக்குக் காட்டினான்

தேக்குக் கட்டில்



..43. கூட்டுப் புழு

நெடிற்றொடர்க் குற்றியலுகரமும் உயிர்த்தொடர்க் குற்றியலுகரமும் வருமொழிநோக்கி  இரட்டித்து வன்ரொடர்க் குற்ரியலுகரம் ஆதலும் உண்டு. அவையும் ம்மேற்கண்டவாறே புணரும்.

எடுத்துக்காட்டு :-

ஆறு      + பாசனம்       = ஆற்றுப்பாசனம்

அசடு     + பையல்        = அசட்டுப் பையல்

நாடு        + பாடல்           = நாட்டுப் பாடல்

காடு         + பூனை          = காட்டுப் பூனை

ஏடு            + படிப்பு            = ஏட்டுப்படிப்பு 

ஆறு          + படுகை         = ஆற்றுப்படுகை

44. மருந்துக் கடை 

மருந்து  என்பது மென்றொடர்க் குற்றியலுகரம். 

கடை என்னும் வருமொழி  நோக்கி மருந்து என்பதன்பின் வல்லெழுத்து . மிகுந்துள்ளது.

மென்றொடர்க் குற்றியலுகரத்தின் பின்னும் வல்லெழுத்து மிகும்.

எடுத்துக்காட்டு :

நண்டுக் கால்

பஞ்சுப் பொதி

குண்டுக் கல்

அன்புத் தளை

குரங்குக் கை

கன்றுக் குட்டி

குறிப்பு :- 

வன்றொடர்க் குற்ரியலுகரத்தின் பின்னும் சிறுபான்மை மென்றோடர்க் குற்றியலுகரத்தின் பின்னும் தவிடப் பிற குற்றியலுகரத்தின் பின் வல்லினம் மிகாது.

45. எழுத்துகள் 

எழுத்து என்பது வன்றொடர்க் குற்றியலுகரம். ’கள்’ என்பது பன்மை குறித்த இறுதிநிலை, தனிச் சொல்லன்று.

ஆகவே, எழுத்துகள் என்று வல்லெழுத்து மிகுக்காமல் இயல்பாகச் சொல்வதே நன்று,.

மேல் கூறியாங்கு எழுத்து என்பது வன்றொடர்க் குற்றியலுகரம். ஆதலால் அதன் பின் வ்பல்லெழுத்தை ‘மிகுத்து ’எழுத்துக்கள்’ என்று எழுதுகின்றனர் பலர்.

அவ்வாறு கொண்டால் பாக்குகள், தோப்புக்கள், என்றெல்லாம் வழங்குவது  இயற்கைக்கு மாறாக உள்ளது.. பேச்சு வழக்கிலும் இல்லை,

ஆகவே, வன்றோடர்க் குற்றியலுகரமேயாயினும், ‘கள்’ என்னும் இறுதி நிலைக்கு முன் வல்லெழுத்து மிகாமையையே கடைப்பிடித்தல் வேண்டும்.

எடுத்துக்காட்டு :- 

தேக்குகள்

மூச்சுகள்

பூட்டுகள்

சீப்புகள்

போத்துகள்

குத்துகள்

குத்துகள்

பற்றுகள்

மெட்டுகள்.

கோப்புகள் 

கீற்றுகள்

46. திருக்குறள்

’திருஎன்பது  குறள் நூலுக்கு சிறப்புப் பற்றிய அடைமொழியாக முன்னிற்கிறது. 

வருமொழிக் கேற்பத் ‘திரு’வின் பின் வல்லெழுத்து மிகுந்து திருக்குறலாக விளங்குகின்றது.

திரு என்னும் அடைமொழிகள் பின் வல்லெழுத்து மிகும்.

எடுத்துக்காட்டு :- 

திருக்குமரன்

திருப்பாணாழ்வார்

திருத்தக்கதேவர்

திருக்கண்ணப்பர்

குறிப்பு :-  இக்காலத்தில் மக்கட் பெயருக்கு முன் மதிப்பு  அடைமொழியாக வழங்கப்படும் திரு, உயர்திரு, தவத்திரு, தமிழ்த் திரு முதலான அடைமொழிகளின் பின் புள்ளி வைத்தும், வல்லெழுத்து மிகுக்காமலும் எழுதுவது பெருவழக்காகிவிட்டது. 

எடுத்துக்காட்டு :- 

திரு தமிழ்வாணன், உயர்திரு தமிழ்ச் செம்மல்,தமிழ்த்திரு தேவநேயர்,

தவத்திரு. குன்றக்குடி அடிகளார் 

திருவாளான், திருவாட்டி,  திருவாளார் , திருச் செல்வன் , திருச் செல்வி , என்பனவற்ருள் ஒன்றன் சுருக்கம் என்னும் பொருளிலேயே திரு என்பதன் பின் புள்ளி வைக்கப்படுகின்றது., 


47. நேசமணி பதிப்பகம்

நேசமணி அம்மையார் பெயரைத் தாங்கிய நிறுவனம்’நேசமணி பதிப்பகம்’. இதில் நிலை மொழிக்கும் இடையில் வல்லொற்று மிகவில்லை.

இவ்வாறு நிறுவனங்கள் உள்ளிட்ட அமைப்புக்களுக்கும் இடங்க்லளுக்கும் பிறவற்றிற்கும் சூட்டப்படும் சிறப்புப் பெயர்கலை அடுத்து வல்லொற்ரு மிகாது.

எடுத்துக்காட்டு :-

திருவள்ளுவர் கழகம்

வள்ளியம்மை பாடசாலை

கலைவாணர் தெரு

பொதிகை கல்வியகம்

செஞ்சோலை காப்பகம்

மறைமறை கலைக்கூடம்

தையல்நாயகி பற்றவைப்பு நிலையம்

யாழ் கணினியகம்

பொதினி திருமண மண்டம்

தாளமுத்து பாலம்

காவேரி சிறப்பங்காடி

48. மேலுஞ் சில

னி நடு, முன்னர், பின்னர், மற்ரை, மற்று, குறித்து, பொருட்டு, பற்றி, தவிர, விட, கூட என்பனவும் இத்தகைய பிறவுமான பல்வகைச் சொற்களின் பின்னும் வல்லொற்று மிகும் 

எடுத்துக்காட்டு :-, 

இனிப்பார்ப்போம்

முன்னர்க் கூறினோம்

மற்றைப் பொருட்கள்

மற்றுச் சொல்வது என்ன ?

அதுபற்றிப் பேசாதே

மிகுதியே தவிரக் குறைவில்லை

அது குறித்துக் கூறு

அதன்பொருட்டுத் தந்தார்

என்பதுகூடத் தவறு

ற்ற என்னுஞ்சொல் வல்லொற்று மிக்கு வருதலே கடைப்பிடியாக உள்ளது.

எடுத்துக்காட்டு :-  

மற்றக் கருத்துகள்

பிற என்னும் சொல்லின் முன் ந்வல்லினம் மிகாது.

எடுத்துக் காட்டு :- 

பிற சொற்கள், பிற படங்கள்


பல சொற்கள் பிறமொழிச் சொற்கள் என்று கூறப்பட்டமையாலும், பிறமொழிச் சொல் கலந்து வருமிடங்களில் புணர்ச்சி இலக்கணம் கடைப்பிடிக்கத் தேவையில்லை என்று சிலர் கூறியமையாலும் பல சொற்களில் புணர்ச்சி முறை கை விடப்பட்டுள்ளது.

வடசொல் என்று கூறப்பட்ட உலகம், காலம், தெய்வம், பூதம் போன்ற பல சொற்கள் தூய தமிழ்ச் சொற்கள் என்று நிறுவப்பட்டுள்ளன. அன்றியும் பிறமொழிச் சொற்கள் பெயரளவில் தமிழில் கலந்தாலும் அவை தமிழ் ஒலி வடிவம் பெற்றே வரவேண்டும்,. ஆதலால் புணர்ச்சி முறை கடைப்பிடிக்கப்படுதலே நன்று.

எடுத்துக்காட்டு :- 

ஆண்டு காலம்

குலம் தெய்வம்

காலம் கட்டம்

ஆண்டுக்காலம்

குலத்தெய்வம்

காலக்கட்டம்


படி என்னுஞ்சொல் அப்படி, இப்படி எனச் சுட்டெழுத்துக்களையொட்டியும், எப்படி என வினா எழுத்தையொட்டியும் நிற்கிற இடங்களில் மட்டுமே இவற்றின் பின் வல்லொற்று மிகும்.

  
எடுத்துக்காட்டு :-

அப்படிக் கேள், இப்படித் திரும்பு, அப்படிப் போடு, எப்படிச் சொல்வாய் ? 

அப்படி, இப்படி , எப்படி என்பனவற்றைத் தவிர வேறு எப்படியின் பின்னும் வல்லொற்று மிகாது.

எடுத்துக்காட்டு : 

சொல்கிறபடி செய், நின்றபடி பாடு, அதிரும்படி தட்டு, எட்டாதபடி கட்டு


அடுக்குத் தொடரில் வல்லெழுத்து மிகுதலே பெரு வழக்கு.

எடுத்துக்காட்டு :- 

தனித்தனி, பாடிப்பாடி, பன்னிப்பன்னி, பார்த்துப்பார்த்து

பேசுவோன் குறிப்பைப் பொறுத்து வல்லொற்று மிகாமையும் உண்டு.

எடுத்துக்காட்டு :- 

படி படி - விளையாடாதே

பார்த்து பார்த்து - வழுக்குமிடம்

இரட்டைக் கிளவியில் வல்லெழுத்து மிகாது.

எடுத்துக்காட்டு :- 

சலசலப்பு, படபடவென, கிலுகிலுப்பை, குளுகுளுவென

நன்றி :

வல்லினம் மிகுதலும் மிகாமையும்

திருக்குறள்மணி புலவர் இறைக்குருவனார்

இறையகம்

5 / 731 , நடுவண் புலனாய்வுத் துறைக்காவல் அலுவலர் குடியிருப்பு

( C.B.I. POLICE OFFICER"S COLONY )

மேடவாக்கம், சென்னை - 600 100

விலை : உரு.10/-

முற்றியது.

தாய்த்தமிழில் சந்திப் பிழைகளின்றி எழுதுவோம். 















  

Socializer Widget By Blogger Yard
SOCIALIZE IT →
FOLLOW US →
SHARE IT →

0 comments:

Post a Comment