பெயர் மற்றும் இமெயில் கொடுத்து உறுப்பினராகலாம்.!

We'll not spam mate! We promise.

Wednesday, September 10, 2014

வல்லினம் மிகுதலும் மிகாமையும் - திருக்குறள்மணி புலவர் இறைக்குருவனார் பகுதி V I33. ஆடிய பாதம்

டிய’ என்பது வினைச் சொல். ஆடியவன்,, ஆடியவள் என்பவற்றைப் போல் இச்சொல் முற்றுப் பெறாமல் குறைபட நிற்றலால் இது எச்ச வினையாகும்.

‘பாதம்’ என்பது பெயர்ச்சொல். ஆடிய என்னும் எச்சவினை பாதம் என்னும் பெயரைத் தழுவுகிறது. ஆகவே, ஆடிய என்பது பெயரெச்ச வினையாகும்.

பெயரெச்சத்தின் பின் வல்லெழுத்து மிகாது.

( தெரிநிலை குறிப்பு இரண்டும் அடங்கும் )

எடுத்துக்காட்டு :-

ஓடிய குதிரை

படிக்கிற பையன்

நல்ல பாம்பு

இன்றைய செய்தி

உறங்கிய சிறுவன்

எடுப்பான தோற்றம்

கரிய குதிரை

வராத பையன்


அற்றைச் செய்தி, பண்டைப் பெருமை என்பன போல ஐகார ஈற்றுச் சொற்களில் வலி மிகும்.

சில, பல என்னுஞ் சொற்களின் பின் வலி மிகாது.

எடுத்துக்காட்டு :- 

சில சொற்கள்

சில பக்கங்கள்

பல பாக்கள்

பல சட்டங்கள்


34. செல்லாக் காசு


சென்றான்’ என்பது போல ஒரு செயலின் நிகழ் நிலையைக் குறிப்பது உடன்பாட்டு வினை.

‘சென்றிலன்’ என்பது போல நிகழாமையைக் குறிப்பது எதிர்மறை வினை.

‘சென்ற’ என்பது உடன்பாட்டுப் பெயயரெச்சமும், ‘செல்லாத’ என்பது எதிர்மறைப் பெயரெச்சமும் ஆகும்.

எதிமறைப் பெயரெச்சம் பெயரைக் கொள்லும்போது ‘செல்லாத காசு’ செல்லா - காசு என்பது போல அப்பெயரெச்சத்தின் இறுதி எழுத்து மறைந்துவிடுதலும் உண்டு. இதுவே ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்.

‘’ஈறு’ என்பது இறுதி எழுத்தையும், கெட்ட என்பது மறைந்த அல்லது நீங்கிய நிலையையும் குறிக்கும்.

ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சத்தின் பின் வல்லெழுத்து மிகும்.

எடுத்துக்காட்டு :- 

விடாக் கண்டன்

உழாக் கலப்பை

கேளாச் செவி

வணங்காத் தலை

எய்தாப் பழி

அழியாப் புகழ்

ஏசாச் சிறப்பு

அணையாத் தீ

35. எண்ணித் துணிக

ண்ணி’ என்பது வினைச் சொல். எண்ணினான், எண்ணினாள் என்பவற்ரைப் போல் நிறைவு பெறாமல் குறைபட நிற்கிறது.

ஆகவே, முற்றுப் பெறாத இவ்வினையை எச்சவினை எனல் வேண்டும்.

எண்ணி என்னும் எச்சம் துணிக என்னும் வினைமுற்ரை ( வியங்கோள் வினைமுற்ரை )த் தழுவுவதால் வினையெச்சம் எனப்படும்.

‘எண்ணித் துணிக !/ என்பது போல வினையெச்சத்தின் பின் வல்லெழுத்து மிகும்.

எடுத்துக்காட்டு :- 

அள்ளிக் கொடுத்தான்

போய்ச் சேர்வான்

தேடித் திரிந்தான்

படித்துப் பார்

இனிக்கப் பேசுகிறான்

திரும்பிப் பார்

நயமாய்க் கண்டித்தார்

நயமுறச் சொன்னார்

நயம்படப் பேசினார்.


36. பறந்தன கிளிகள்

றந்தன/’ என்பது வினைச்சொல். இதில் எச்சம் இல்லாமல் வினை முற்றுப் பெற்ரு நிற்க, கிளிகள் என்னும் எழுவாய் பின்னால் வருகிறது. ஆகவே, இது வினைமுற்ருத் தொடராகும்.

கிளிகள் என்னும் வருமொழி நோக்கிப் பறந்தன என்பதன் பின் வல்லெழுத்து மிகவில்லை.

வினைமுற்ரின் பின் வல்லெழுத்து மிகாது.

( தெரிநிலை வினை முற்று, குறிப்பு வினை முற்று இரண்டிற்கும் இது பொருந்தும் )


எடுத்துக்காட்டு :- 

கண்டனர் கற்றோர்

என்மனார் புலவர்

கூறுப சான்றோர்

அழகிது பாவை

காண்மார் கூட்டத்தார்

வந்தது குதிரை

பாய்ந்தன புலிகள்

நல்லன பூக்கள்

எதிறை வினைமுற்றின் பின்னும் வல்லெழுத்து மிகாது.

எடுத்துக்காட்டு :- 

வாரா குதிரைகள், நில்லாது செல்வம்

37. பார் தெரியும்

பார்’ என்பது ஒருவரைப் பார்த்துச் சொல்லுங் கட்டளைச் சொல். இஃது ஏவல் வினை எனப்படும்.

ஏவல் வினைமுற்று எடு, கொடு, செல், நி, வா, போ என்பன போல வினைப் பகுதிகளாக இருக்கும்.

அன்றியும், ஒருமையில் ஐ, ஆய், இ, ஏ ஆகியவற்றையும், பன்மையில் இர், ஈர் முதலியவற்றையும் ஏவல் வினைமுற்று ஈறுகளாகப் பெற்றும் வரும்.

எவ்வகை ஏவல் வினைமுற்றின் பின்னும் வல்லெழுத்து மிகாது.

எடுத்துக்காட்டு :- 

எடு பணத்தை !

கூறு செய்தியை !

கட்டு பார்க்கலாம் !

வருவாய் காலையில் !

காணுதிர் காட்சியை !

உண்பீர் சோற்ரை !

சொல்லாதே போ !

வருதி தனியே !


38. வெல்க தமிழினம் !


வாழ்த்துதல், வைதல், வேண்டிக் கொள்ளுதல், கண்ணியமாக ஏவுதல் ஆகிய பொருள்களில் வரும் வினை வியங்கோள் வினைமுற்று எனப்படும்.

‘வெல்க’ என்பதில் ‘வெல்’ என்னும் முதனிலையோடு ‘க’ என்னும் இறுதிநிலை சேர்ந்து வியங்கோட் பொருளைத் தருகின்றது.

க, அ, இ, இய, இயர் ஆகியனவும் பிறவும் வியங்கோள் வினைமுற்ரு ஈறுகள் ஆகும்.

வியங்கோள் வினைமுற்றின் பின் வல்லெழுத்து மிகாது.

எடுத்துக்காட்டு :- 

செய்க பொருளை !

வாழி பல்லாண்டு !

வாழிய செந்தமிழ் !

வாழியர் பெரிதே !

ஆழ்க தீயவை !

போற்ரி பெரும !

சொல்லுக சொல்லை !

ஓங்க தமிழறம் !

ஒழிக துன்ப்பம் !

எழுக கடிது !


39. ஒன்றே குலம்

ன்று என்னுஞ் சொல்லோடு ‘ஏ’ என்னும் எழுத்துச் சேர்ந்து ஒன்றே என நிற்கிறது.

‘ஏ’ என்பது ஓர் எழுத்தாக இருந்தாலும் ஒன்று என்னும் சொல்லைத் தெளிவுறுத்தி நிற்பதால் அஃது ஓர் இடைச் சொல்லாகும்.

ஒன்றே குலம் என்பதன் இடையில் வல்லெழுத்து மிகவில்லை.

ஏகார இடைச் சொல்லின் பின் வல்லெழுத்து மிகாது.

எடுத்துக்காட்டு :- 

யானே கள்வன்

பாரியே சிறந்தவன்

இன்றே புறப்படு

கடையரே கல்லாதவர்

வென்றே திரும்புவேன்

ஒருவனே தேவன்

எனக்கே பிடிக்கும்

தாயே பெரியவள்

ஊரே கூடியது

நேற்றே சொன்னேன்


40. நன்றோ சொல்வீர் !

‘நன்று’ என்னும் சொல்லோடு ‘ஓ’ என்னும் எழுத்துச் சேர்ந்து நன்றோ என்று நிற்கிறது.

‘ஓ’ என்பது எதிர்மறைப் பொருளைக் குறிப்பதால் இஃது இடைச்சொல்.

ஓகார இடைச் சொல்லின் பின்னும் வல்லெழுத்து மிகாது.

எடுத்துக்காட்டு :- 

யானோ காவலன்

மேடோ காடோ

எளிதோ செய்வது

காதோ கேளாது

எதுவோ செய்

ஏதோ தேரியவில்லை

அதுவன்ரோ பிழை

நல்லதோ கெட்டதோ

கண்னோ தெரியாது

வருமானமோ குறைவு

நன்றி :

வல்லினம் மிகுதலும் மிகாமையும்

திருக்குறள்மணி புலவர் இறைக்குருவனார்

இறையகம்

5 / 731 , நடுவண் புலனாய்வுத் துறைக்காவல் அலுவலர் குடியிருப்பு

( C.B.I. POLICE OFFICER"S COLONY )

மேடவாக்கம், சென்னை - 600 100

விலை : உரு.10/-

 ( இன்னும் வரும் )
-

Socializer Widget By Blogger Yard
SOCIALIZE IT →
FOLLOW US →
SHARE IT →

0 comments:

Post a Comment