பெயர் மற்றும் இமெயில் கொடுத்து உறுப்பினராகலாம்.!

We'll not spam mate! We promise.

Tuesday, September 9, 2014

வல்லினம் மிகுதலும் மிகாமையும் - திருக்குறள்மணி புலவர் இறைக்குருவனார் பகுதி IV17. நம்பி தம்பி


நம்பிக்குத் தம்பி என்னும் தொடர் நம்பி தம்பி எனத் தொகையாக நிற்கிறது. இது நான்காம் வேற்றுமைத் தொகை.

தம்பி முதலிய முறைப் பெயர்களெல்லாம் நான்காம் வேற்றுமையாகும். ஆறாம் வேற்றுமையாகக் கொள்ளக் கூடாது.

நம்பி என்பது உயர்திணை ஆண்பாற் பெயர்.

உயர்திணை நான்காம் வேற்றுமைத் தொகையில் வல்லெழுத்து மிகாது.

எடுத்துக்காட்டு :- 

பொன்னி கணவன்

வள்ளி கேள்வன்

தம்பி துணைவி

அத்தை பிள்ளை

நங்கை கொழுநன்

அத்தாச்சி கணவர்

முத்துமணி கொழுந்தி


18. முதியோர் கல்வி

முதியோருக்குப் பயிற்றுவிக்கப்படும் கல்வி என்பதே முதியோர் கல்வி எனப்படுகின்றது.

‘முதியோர் கல்வி’ யில் ‘கு’ உருபும் பொருட் பயனும் சேர்ந்து மறைந்துள்ளன.

நான்காம் வேற்றுமை உருபும் ப்யனும் உடன் தொக்க தொகையில் வலி மிகாது.

எடுத்துக்காட்டு :- 

நீத்தார் கடன்

அரசர் பணிவிடை

அடியார் தொண்டு

தென்புலத்தார் கடன்

குருகாணிக்கை

மூத்தோர் சலுகை

காக்கைச் சோறூ


19. மேனின்று சுரக்கும்

இருந்து, நின்று என்பன ஐந்தாம் வேற்றுமைக்குரிய சொல்லுருபுகள் எனப்படும்.

மேனின்று சுரக்கும் என்பது ஐந்தாம் வேற்றுமை விரி.

சுரக்கும் என்னும் வருமொழி நோக்கி மேனின்றூ என்பதன் பின் வல்லெழுத்து மிகவில்லை.

ஐந்தாம் வேற்றுமைச் சொல்லுருபுகளாகிய இருந்து, நின்று என்பனவற்ரின் பின் வலி மிகாது.

எடுத்துக்காட்டு :- 

வில்லிலிருந்து புறப்பட்டது.

மரத்தினின்று குதித்தான்.

நீரிலிருந்து கரையேறினான்.

பாறையினின்று சரிந்தான்.

20. எமது கொள்கை

யாம் என்பது தன்மைப் பெயர்; பன்மைப் பெயரும் ஆகும்.

இப் பெயர்ச்சொல் வேற்றுமையை ஏற்கும் பொருட்டு ‘எம்’ என்று திரிந்துள்ளது.

‘அது’ என்பது உடைமைப் பொருளைக் குறிக்கும் ஆறாம் வேற்றுமை உருபு.. அது எம் என்னும் பெயரோடு சேர்ந்து எமது என்று நிற்கின்றது.

கொள்கை என்னும் வருமொழியை நோக்கி எமது என்பதன்பின் வல்லெழுத்து மிகவில்லை.

ஆறாம் வேற்றுமை விரியில் அது, அ என்னும் உருபுகளின் பின்னும், உடைய என்னும் சொல்லுருபின் பின்னும் வல்லெழுத்துக்கள் மிகா.

எடுத்துக்காட்டு :-

நமது கணிப்பொறி

உனது சட்டை

எனது துமுக்கி ( துப்பாக்கி )

அவனது பார்வை

என கண்கள்

நின சுவடிகள்

எம தூவல்கள்

தம பாடல்கள்

குறிப்பு : ஆறாம் வேற்றுமை உடைமைப் பொருள் ஒருமையாயின் ‘அது’ என்றும், பன்மையாயின் ‘அ’ என்றும் வழங்கி வந்தது.

‘அ’ என்னும் பன்மையுருபு இக்காலத்தில் வழக்குக் குன்றியுள்லது. அம்மா


21. புலவர் தொழில்


‘புலவரது தொழில்’ என்று விரித்துச் சொல்லப்பட வேண்டியது ‘புலவர் தொழில்’ எனத் தொகையாகச் சொல்லப்படுகிறது.

‘அது’ என்பது ஆறாம் வேற்றுமை உருபு. அது மறைந்து நிற்பதால் ‘புலவர் தொழில்’ என்பது ஆறாம் வேற்றுமைத் தொகை.

புலவர் என்பது உயர்திணை.

உயர்திணை ஆறாம் வேற்றுமைத் தொகையின்கண் வல்லெழுத்து மிகாது.

எடுத்துக்காட்டு :- 

நம்பி புத்தகம்

காளி கோட்டம்

ஆசிரியர் கூற்று

அறவோர் பள்ளி

தலைவி பெருமை

ஐயனார் கோவில்

கண்ணகி சிலம்பு

முதல்வர் பேச்சு

சான்ரோர் செயல் 

முனிவர் சீற்றம்

22. கிளிச் சிறகு

கிளியது சிறகு - கிளியினது சிறகு என்று விரிவாகச் சொல்வதனையே கிளிச்சிறகு என்று சுருக்கிச் சொல்கிறோம்.

‘அது’ என்பது ஆறாம் வேற்றுமை உருபு.

கிளிச்சிறகு என்பது போல ‘அது’ மறைந்து நின்று பொருள் கொடுப்பது ஆறாம் வேற்றுமைத் தொகையாகும்.

கிளி என்பது அஃறிணை. 

அஃறிணை ஆறாம் வேற்றுமைத் தொகையில் வல்லெழுத்து மிகும்.

எடுத்துக்காட்டு :- 

நரிப்பல்

தேர்த்தட்டு

யானைக்கொம்பு

வாழைக்கன்று

அத்திக்கிளை

கலைக்கோடு

பாம்புச்சட்டை

புலித்தோல்


23. குடிப்பிறந்தார்

குடிக்கண் அல்லது குடியின்கண் பிறந்தார் என்னும் விரிவான தொடர் குடிப்பிறந்தார் எனத் தொகையாக உள்ளது.

கண் என்பது இடப்பொருளை உணர்த்தும் ஏழாம் வேற்றுமை உருபு. ( இன் என்பது சாரியை. அதாவது சொல்லமைப்புக்காக வரும் ஓர் ஒட்டு )

கால், தலை, இடை, கடை, முகம், வாய் முதலியனவும் ஏழன் உருபுக்களே.

ஏழாம் வேற்றுமை உருபு மறைந்து நிற்பதுஏழாம் வேற்ருமைத் தொகை.

ஏழாம் வேற்றுமைத் தொகையில் வல்லெழுத்து மிகும்.

எடுத்துக்காட்டு :- 

மனைப் புகுந்தார்

குடிப் பிறந்தார்

வலைப்பட்டார்

( மடி ) மடிக்கொண்டு

24. கூண்டுக் கிளி

‘கூண்டில் வாழும் கிளி’ என்பதன் தொகை நிலைத் தொடரே கூண்டுக்கிளி என்பது.

இல் என்னும் ஏழாம் வேற்றுமை உருபும் வாழும் என்னும் பொருட்பயனும் சேர்ந்து மறைந்து ‘கூண்டுக் கிளி’ என நிற்பதால் இஃது ஏழாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகையாகும்.

கூண்டு என்பதன்பின் கிளி என்னும் வருமொழி நோக்கி வல்லெழுத்து மிகுந்துள்ளது.

ஏழாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகையிலும் வல்லெழுத்து மிகும்.

எடுத்துக்காட்டு :- 

மனைக் கிணறு

நீர்க் கோழி

வேர்க்கடலை 

தரைப்படை

சந்தைக் ம்கூச்சல்

மலைப் பாம்பு

அரைக் கச்சு

நிலக்கடலை

வழிச் செலவு

வழிப்பறி


நன்றி :

வல்லினம் மிகுதலும் மிகாமையும்

திருக்குறள்மணி புலவர் இறைக்குருவனார்

இறையகம்

5 / 731 , நடுவண் புலனாய்வுத் துறைக்காவல் அலுவலர் குடியிருப்பு

( C.B.I. POLICE OFFICER"S COLONY )

மேடவாக்கம், சென்னை - 600 100

விலை : உரு.10/-

 ( இன்னும் வரும் )Socializer Widget By Blogger Yard
SOCIALIZE IT →
FOLLOW US →
SHARE IT →

0 comments:

Post a Comment