பெயர் மற்றும் இமெயில் கொடுத்து உறுப்பினராகலாம்.!

We'll not spam mate! We promise.

Tuesday, September 30, 2014

அரசு இணையதளங்களில் ஜெயலலிதா படம் நீக்கம்


 புதிய முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்றதையடுத்து அரசு இணையதளத்தில் ஜெயலலிதா படம் நீக்கப்பட்டது. 

அதேபோன்று அரசு அலுவலகங்களில் உள்ள ஜெயலலிதா படங்கள் அகற்றப்பட்டு பன்னீர்செல்வம் படம் வைக்கப்படுகிறது. 

சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று ஜெயலலிதா பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டார்.  

ஜெயலலிதா அமைச்சரவையில் 2வது இடத்தில் இருந்த நிதி அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தமிழகத்தின் புதிய முதல்வராக நேற்று பிற்பகல் பதவியேற்றார். 

அவருடன் ஏற்கனவே ஜெயலலிதா அமைச்சரவையில் இருந்த 30 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர். 

புதிய முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் அவர் ஏற்கனவே வகித்து வந்த நிதி, பொதுப்பணித்துறையுடன் ஜெயலலிதா வகித்து வந்த இலாகாக்கள் அனைத்தும் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளன. 


ஓ.பன்னீர்செல்வம் முதல்வரின் அறையில் பொறுப்பேற்காமல், தனது பழைய அறையிலேயே நேற்று மாலை 4 மணிக்கு சென்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

புதிய முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்றுக் கொண்டதைத் தொடர்ந்து, தமிழகத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் உள்ள ஜெயலலிதா படம் நேற்று இரவு நீக்கப்பட்டது. அதற்குப் பதில் ஓ.பன்னீர்செல்வம் படம் வைக்கப்பட்டுள்ளது. 



அதேபோன்று, தலைமைச் செயலகம், எழிலகம், மாவட்டக் கலெக்டர் அலுவலகம், எழிலகம், மாநகராட்சி மற்றும் நகராட்சி உள்ளிட்ட அனைத்து அரசு அலுவலகங்களில் வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா படங்களை அகற்றி விட்டு புதிய முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் படத்தை வைக்க வேண்டும் என்று பொதுத்துறை அலுவலகம் சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 

இதையடுத்து பல அரசு அதிகாரிகள் தங்களது அறையில் இருந்து ஜெயலலிதா படத்தை இன்று அகற்றி விட்டனர். மற்ற அரசு அதிகாரிகளிலும் இன்னும் ஒரு சில நாட்களில் ஜெயலலிதா படத்தை அகற்றி விட்டு ஓ.பன்னீர்செல்வம் படத்தை மாட்டுவார்கள் என்று கூறப்படுகிறது. 


இதேபோன்று அரசு டைரி, அரசு காலண்டர் உள்ளிட்ட அனைத்து அரசு சார்ந்த இடங்களிலும் புதிய முதல்வர் படம் விரைவில் இடம்பெற உள்ளது.

Socializer Widget By Blogger Yard
SOCIALIZE IT →
FOLLOW US →
SHARE IT →

0 comments:

Post a Comment