
விழுப்புரத்தில், தினமணி மற்றும் இ.எஸ். கல்விக் குழுமம் இணைந்து நடத்தும் 7 நாள் புத்தகத் திருவிழா, சனிக்கிழமை (செப்டம்பர் 27ஆம் தேதி) தொடங்குகிறது.
விழுப்புரம், ரெட்டியார் மில், ஜெயசக்தி திருமண மண்டபத்தில் தொடங்கும் இவ் விழாவை மாவட்ட ஆட்சியர் வா.சம்பத் தொடங்கி வைக்கிறார். எக்ஸ்பிரஸ் குழும பதிப்புகள் உதவிப் பொது மேலாளர் (தமிழ்நாடு) சித்தார்த் சொந்தாலியா தலைமை வகிக்கிறார்.
விழுப்புரம் மாவட்ட வருவாய் அலுவலர் ஆர்.பிருந்தாதேவி, நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் பொது மேலாளர் (மக்கள் தொடர்பு) எஸ்.ஸ்ரீதர், விழுப்புரம் இ.எஸ். பொறியியல்கல்லூரித் தலைவர் எஸ்.செல்வமணி உள்ளிட்டோர்பங்கேற்கின்றனர்.
இப் புத்தகத் திருவிழா வரும் அக்டோபர் 3 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இவ் விழாவில் மாணவப் பருவத்தின் வாசிப்பு பழக்கம் குறித்த கருத்தரங்கம், புத்தகமும் நானும் என்ற தலைப்பில் பேச்சுப் போட்டி, சிறப்புச் சொற்பொழிவுகள், புத்தகம்-இன்னொரு போதிமரம் என்ற தலைப்பில் கவிதைப் போட்டி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
விழாவில் 50-க்கும் மேற்பட்ட புத்தக அரங்குகள் அமைக்கப்படுகின்றன. பள்ளி, கல்லூரி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. நிறைவு நாளான அக்டோபர் 3 ஆம் தேதி பரிசளிப்பு விழா நடைபெறுகிறது.
இப் புத்தகத் திருவிழாவுக்காக விழுப்புரம் பேருந்து நிலையத்தில் இருந்து இலவச வாகன வசதி செய்யப்பட்டுள்ளது.
நன்றி :-தினமணி
0 comments:
Post a Comment