பெயர் மற்றும் இமெயில் கொடுத்து உறுப்பினராகலாம்.!

We'll not spam mate! We promise.

Thursday, September 25, 2014

காலம் - ராஜம் கிருஷ்ணன்


சேகர் பதிப்பகம், விலை ரூ.100/-


தமிழ் இலக்கிய உலகின் கௌரவத்துக்குரிய எழுத்தாளர்களில் ஒருவர் ராஜம் கிருஷ்ணன். 1925ல் முசிறியில் பிறந்த ராஜம் கிருஷ்ணன் 50 மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். அவர் எழுதிய வேருக்கு நீர் என்னும் நாவலுக்கு 1973ல் சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது.

அவரது நூல்கள் நாட்டுடமையாக்கப்பட்டுள்ளன. கணவர் கிருஷ்ணன் மறைவுக்குப் பின்னர் தனியே வாழ்ந்து வந்த ராஜம் கிருஷ்ணன் உடல்நலக் குறைவு காரணமாகக் கடந்த நான்கைந்து ஆண்டுகளாகச் சென்னையில் தனியார் மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்றுவருகிறார்.

தனது வாழ்வில் கடந்துபோன பல சம்பவங்களையும் நிகழ்ச்சிகளையும் நினைவிலிருந்து இறக்கி, மூன்று கட்டுரைகளாக ராஜம் கிருஷ்ணன் எழுதியுள்ளார். முன்னும் பின்னும் நகர்ந்து செல்லும் சம்பவங்கள் வழியாக ஓர் எழுத்தாளரின் வாழ்க்கைச் சித்திரம் இந்நூலில் பதிவாகியுள்ளது.

எழுத்துப் பயணத்தின் ஏராளமான அனுபவங்கள் மனதை அழுத்த அவற்றை எல்லாம் முதுமையின் துயரத்தைப் பொருட்படுத்தாது எழுத்தில் இறக்கிவைத்து ஆசுவாசமடைய முயல்கிறார் ராஜம் கிருஷ்ணன்.

புதிதாய் எழுத வருபவர்கள் படிக்க வேண்டிய பல செய்திகளை உள்ளடக்கிய இந்நூல் கவனிக்கத்தக்கது.

நன்றி : தி இந்து , 26-07-2014


டயல் ஃபார் புக்ஸ், 044- 4286 8126

Socializer Widget By Blogger Yard
SOCIALIZE IT →
FOLLOW US →
SHARE IT →

0 comments:

Post a Comment