பெயர் மற்றும் இமெயில் கொடுத்து உறுப்பினராகலாம்.!

We'll not spam mate! We promise.

Sunday, September 21, 2014

சாதனையாளர்கள் கௌரவிப்பு



ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில் சென்னையில் சனிக்கிழமை நடைபெற்ற விழாவில் பல துறைகளைச் சேர்ந்த சாதனையாளர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனர் என்.கே.மகாதேவ ஐயரின் 90- ஆவது பிறந்த நாளை முன்னிட்டு கலை, இசை, நாடகம், மருத்துவம், எழுத்து உள்ளிட்ட பல துறைகளைச் சேர்ந்த மூத்த குடிமக்களை கெளரவிக்கும் வகையில், "சல்யூட் டூ லெஜண்ட்ஸ்' நிகழ்ச்சி மயிலாப்பூரில் நடைபெற்றது.
இதில், உயர்நீதிமன்ற நீதிபதிகள் வெ.ராமசுப்பிரமணியன், ஆர்.எஸ்.ராமநாதன், பி.ராஜேந்திரன், கே.பி.கே.வாசுகி, ஏவிஎம். சரவணன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.
இதைத் தொடர்ந்து சிறப்பு விருந்தினர்கள் 5 பேரும், நீதிபதி எஸ்.ரத்தினவேல் பாண்டியன், மூத்த வழக்குரைஞர் கே. பராசரன், வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன், டாக்டர் கே.வி.திருவேங்கடம், முன்னாள் டிஜிபி வி.ஆர்.லட்சுமிநாராயணன், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி பி.எஸ்.ராகவன், ஆன்மிகச் சொற்பொழிவாளர் சேஷாத்ரி சாஸ்திரிகள், ஓவியர் சிவசங்கரன், நாடக கலைஞர் கூத்தபிரான், இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன், தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன், நடிகர் வி.எஸ்.ராகவன், மூத்த ஜோதிடர் ஏ.எம்.ராஜகோபாலன், முன்னாள் துணைவேந்தர்கள் வா.செ.குழந்தைசாமி, அவ்வை நடராஜன், புல்லாங்குழல் இசைக் கலைஞர் என்.ரமணி, இசைக் கலைஞர் பித்துக்குளி முருகதாஸ், சமூக சேவகர் என்.கே.டி.ஜி.முத்து, ஓய்வுபெற்ற கப்பல் துறை அதிகாரி கே.பி.கோபால் ராவ், மூத்த வழக்குரைஞர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி, தொழிலதிபர் அப்பாசாமி, பிரபல தணிக்கை கணக்காளர் ஜி.நாராயணசுவாமி, சிறுநீரக அறுவைச் சிகிச்சை நிபுணர் டாக்டர் சின்னசாமி, கோவை கங்கா மருத்துவமனையின் தலைவர் டாக்டர் ஜே.ஜி.சண்முகநாதன், திரைப்பட இயக்குநர் எஸ்.பி.முத்துராமன், குடியரசுத் தலைவர் அலுவலக முன்னாள் செயலர் பி.முராரி, இசைக் கலைஞர்கள் சுப்பு ஆறுமுகம், டி.கே.மூர்த்தி, கர்நாடக இசைக் கலைஞர் எஸ்.ஆர்.ஜானகிராமன், இசை வல்லுநர் பி.எஸ்.நாராயணசாமி ஆகிய 30 சாதனையாளர்களைக் கௌரவித்தனர். அப்போது சாதனையாளர்களுக்கு பொன்னாடை அணிவிக்கப்பட்டு விருது வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிர்வாக இயக்குநர் எம்.முரளி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நன்றி : தினமணி

Socializer Widget By Blogger Yard
SOCIALIZE IT →
FOLLOW US →
SHARE IT →

0 comments:

Post a Comment