பெயர் மற்றும் இமெயில் கொடுத்து உறுப்பினராகலாம்.!

We'll not spam mate! We promise.

Saturday, September 20, 2014

காஷ்மீருக்குச் சொந்தம் கொண்டாடும் பிலாவல் பட்டோ

<a href='http://valaitamil.com' title="Valaitamil"> <img src='http://valaitamil.com/images/logo.gif' alt='Valaitamil Photo Gallery - Articles, Video, FM, Web Tv, Classifieds, Ticket Booking, Tamil Calendar' ></a>

காஷ்மீர் முழுவதும் பாகிஸ்தானுக்கே சொந்தம் என்றும், அதனை பாகிஸ்தானுடன் இணைக்காமல் ஓயப் போவதில்லை என்றும் அந்நாட்டின் முன்னாள் அதிபர் ஆசிஃப் அலி சர்தாரியின் மகனும், பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவருமான பிலாவல் புட்டோ பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் முல்தானில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தனது கட்சிக் கூட்டத்தில், பிலாவல் பேசியதாவது:
காஷ்மீர் பகுதி முழுவதையும் திரும்பக் கைப்பற்றுவேன். காஷ்மீரின் ஓர் அங்குலப் பகுதியைக் கூட விட்டுத்தர மாட்டேன். ஏனெனில், (பாகிஸ்தானில் இருக்கும்) மற்ற மாகாணங்கள் போல, காஷ்மீரும் பாகிஸ்தானுடையதுதான் என்றார் அவர்.
இந்தக் கூட்டத்தில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர்கள் யூசுப் ரஸா கிலானி, ராஜா பர்வேஸ் அஷ்ரஃப் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
பிலாவல் புட்டோவின் தாயார் பேநஸீர் அலி புட்டோ, பாகிஸ்தானின் பிரதமராக 2 முறை பதவி வகித்துள்ளார். அவரது தாத்தா, ஜூல்ஃபிகர் அலி புட்டோ பாகிஸ்தானின் அதிபராக இருந்துள்ளார்.
தந்தை ஆசிஃப் அலி சர்தாரியும், பாகிஸ்தானின் அதிபராக 2008ஆம் ஆண்டு முதல் 2013ஆம் ஆண்டு வரை பதவி வகித்துள்ளார்.
தற்போது பாகிஸ்தான் மக்கள் கட்சித் தலைவராக இருக்கும் பிலாவல் புட்டோ, அந்நாட்டில் 2018ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார். இந்தியாவுடன் நல்லுறவு வைத்துக் கொள்வதையே பாகிஸ்தான் மக்கள் கட்சி பொதுவாக தனது கொள்கையாக வைத்துள்ளது. ஆனால், இதற்கு நேர்மாறாக பிலாவல் புட்டோ பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நன்றி : தினமணி

Socializer Widget By Blogger Yard
SOCIALIZE IT →
FOLLOW US →
SHARE IT →

0 comments:

Post a Comment