பெயர் மற்றும் இமெயில் கொடுத்து உறுப்பினராகலாம்.!

We'll not spam mate! We promise.

Thursday, September 4, 2014

கழிவறைகள் இல்லாத பள்ளிகளுக்கு அங்கீகாரம் கிடையாது ~ கேரள அரசு அறிவிப்பு

Kerala Govt Logo_0கேரளாவில் அடுத்த கல்வியாண்டு முதல் கழிவறை இல்லாத பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்கப்படமாட்டாது என கேரள அரசு அறிவித்திருக்கிறது.
கேரள மாநில அமைச்சரவை கூட்டம் முதல்வர் உம்மன் சாண்டி தலைமையில் புதனன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் உம்மன்சாண்டி, பள்ளிகளில் கட்டாய கழிப்பறை வசதியை செய்ய அமைச்சரவை முடிவு செய்துள்ளது. பள்ளியின் கட்டிடங்களின் பாதுகாப்பை அறிந்து இதுவரையில் பள்ளிகளுக்கு சான்றிதழ் அளிக்கப்பட்டு வந்தது. ஆனால், அடுத்த கல்வி ஆண்டு முதல் கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள் பின்பற்ற முடிவு செய்யப்பட்டிருக்கிறது.
அதன்படி கழிவறை வசதியும் அதில் கட்டாயமாக்கப்படும். இத்தகையை வசதிகள் இல்லாத பள்ளிகளில் அடுத்த கல்வி ஆண்டு மாணவர்கள் சேர்க்கைக்கு அனுமதி அளிக்கப்படாது. அதாவது அப்பள்ளியின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும். இதுவரையில் கேரளாவில் உள்ள 196 அரசு பள்ளிகளில் கழிவறைகள் இல்லை என்பது கண்டறியப்பட்டிருக்கிறது. அடுத்த 100 நாட்களில் அத்தகைய வசதிகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
இதேபோல் மாநிலத்தில் 1011 அரசு உதவிபெறும் பள்ளிகளில் கழிவறை வசதி இல்லை. அடுத்த கல்வி ஆண்டுக்குள் அரசு உதவிபெறும் பள்ளிகளும் கழிவறை வசதிகளை சொந்த செலவில் செய்ய பள்ளி நிர்வாகத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அப்படி கழிவறை வசதியை ஏற்படுத்தி கொள்ளவில்லை என்றால் அந்த பள்ளிகளுக்கு தகுதிச் சான்றிதழ் வழங்கப்படமாட்டாது.

Socializer Widget By Blogger Yard
SOCIALIZE IT →
FOLLOW US →
SHARE IT →

0 comments:

Post a Comment