பெயர் மற்றும் இமெயில் கொடுத்து உறுப்பினராகலாம்.!

We'll not spam mate! We promise.

Tuesday, September 30, 2014

உலகைச் சுற்றி...* போர்ச்சுக்கல் நாட்டில் வசித்துவரும் இந்தியர் ஆன்டனியோ கோஸ்டா (வயது 52). இவரது பூர்வீகம் கோவா. இவர் ‘லிஸ்பன் காந்தி’ என்று அழைக்கப்படுகிறார். அங்கு அடுத்த ஆண்டு நடக்கவுள்ள பாராளுமன்ற தேர்தலில், இவர் பிரதமர் வேட்பாளராக எதிர்க்கட்சியான சோஷலிஸ்டு கட்சியின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தற்போது இவர் லிஸ்பன் நகர மேயராக பணியாற்றி வருகிறார்.


* சிரியாவில் நேற்று முன்தினம் இரவு அமெரிக்க போர் விமானங்கள், ஐ.எஸ். தீவிரவாதிகளின் இலக்குகளை குறிவைத்து குண்டு மழை பொழிந்தன. இதில் தீவிரவாதிகளுடன் அப்பாவி பொதுமக்களும் கொல்லப்பட்டதாக மனித உரிமைக்கான சிரிய அமைப்பு கூறுகிறது. ஆனால் அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டதற்கு ஆதாரம் இல்லை என்று அமெரிக்கா சொல்கிறது.* உள்நாட்டுப்போர் நடந்து வரும் சிரியாவில் பிணைக்கைதிகளை கிளர்ச்சியாளர்களிடம் இருந்து விடுவிப்பதில், சமரசப்பேச்சு நடத்தியதை கத்தார் நாடு நியாயப்படுத்தி உள்ளது. அதே நேரத்தில் பிணைத்தொகை வழங்கப்பட்டதாக எழுந்துள்ள புகாரை அந்த நாட்டின் வெளியுறவு மந்திரி கலீத் அல் அட்டியா மறுத்துள்ளார்.* ஜப்பானில் மவுண்ட் ஆன்டேக் எரிமலை சீற்றத்தின் போது வெளிப்பட்ட சாம்பல் மழை, பாறைகளுக்குள் 2 டஜனுக்கும் மேற்பட்டவர்கள் சிக்கியுள்ளனர். அவர்களை தேடும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அந்த எரிமலை மீண்டும் குழம்பினை கக்கும் வாய்ப்பு உள்ளதே இதற்கு காரணம்.

நன்றி : தினத்தந்தி

Socializer Widget By Blogger Yard
SOCIALIZE IT →
FOLLOW US →
SHARE IT →

0 comments:

Post a Comment