பெயர் மற்றும் இமெயில் கொடுத்து உறுப்பினராகலாம்.!

We'll not spam mate! We promise.

Saturday, September 27, 2014

சி.பா.ஆதித்தனார் இலக்கிய பரிசளிப்பு விழா தள்ளிவைப்பு வாசிக்கப்பட்டது

சென்னையில் நேற்று நடைபெறுவதாக இருந்த சி.பா.ஆதித்தனார் இலக்கிய பரிசளிப்பு விழா தள்ளிவைக்கப்பட்டு உள்ளது.

இலக்கியப்பரிசு 

‘தினத்தந்தி’ நிறுவனர் ‘தமிழர் தந்தை’ சி.பா.ஆதித்தனார் நினைவாக ஆண்டுதோறும் அவரது பிறந்தநாளையொட்டி இலக்கியப்பரிசு வழங்கப்படுகிறது. மூத்த தமிழறிஞருக்கு ரூ.3 லட்சமும், சிறந்த இலக்கிய நூலுக்கு ரூ.2 லட்சமும் ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது.

இந்த ஆண்டுக்கான ‘சி.பா.ஆதித்தனார் மூத்த தமிழறிஞர் விருது’ முனைவர் அவ்வை நடராசனுக்கும், சி.பா.ஆதித்தனார் இலக்கியப்பரிசு முனைவர் ஜி.பாலனுக்கும் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

விழா தள்ளிவைப்பு 

சி.பா.ஆதித்தனாரின் 110–வது பிறந்தநாளான நேற்று மாலை 6 மணிக்கு சென்னை அண்ணா சாலையில் உள்ள ராணி சீதை மன்றத்தில் இலக்கிய பரிசளிப்பு விழா நடைபெறுவதாக இருந்தது.

தமிழ்நாட்டில் தற்போதுள்ள அரசியல் சூழ்நிலைகள் காரணமாக, இந்த விழா தள்ளிவைக்கப்பட்டு உள்ளது. விழா நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

நன்றி :- தினத்தந்தி

Socializer Widget By Blogger Yard
SOCIALIZE IT →
FOLLOW US →
SHARE IT →

0 comments:

Post a Comment