பெயர் மற்றும் இமெயில் கொடுத்து உறுப்பினராகலாம்.!

We'll not spam mate! We promise.

Wednesday, September 17, 2014

5 வயதில் 5 அடி உயரம்: கின்னஸ் உலக சாதனையில் இந்திய சிறுவன்
உத்தர பிரதேசத்தை சேர்ந்த சிறுவன் கரண் சிங்.  இவனுக்கு வயது 5.  பள்ளியில் கே.ஜி. வகுப்பில் சேர உள்ள கரண் 5 அடி உயரத்தில் பெரிய மனிதனின் தோற்றத்தில் இருப்பது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

இது குறித்து கரண் சிங்கின் தந்தை சஞ்சய் சிங் கூறும்போது, அவன் பள்ளிக்கூடத்தில் படிக்க செல்லும்போது கரணை விட வயதில் குறைந்த சிறுவர்கள் அவனை விட்டு தூர ஓடி உள்ளனர்.  அதன்பின்பு சில நாட்கள் சென்றதும் அவனுக்கு நிறைய நண்பர்கள் கிடைத்துள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.  இந்த வயதில் அதிக உயரம் கொண்டவனாக இருப்பதால் கின்னஸ் உலக சாதனையாளர் வரிசையில் கரண் இருக்கிறான்.

இன்னும் சில மாதங்களில் அவனுக்கு 6 வயது ஆக உள்ளது.  தற்பொழுது 5 அடி 7 அங்குல உயரத்தில் காணப்படும் இவனுக்கு ஆதரவாக இருப்பது அவனது தாய் ஷ்வெட்லானா சிங்.  இவருக்கு வயது 25.  ஆனால், இவர் 7 அடி 2 அங்குலம் உயரம் கொண்டவராக உள்ளார்.  அவர் தொடர்ந்து வளர்ந்து கொண்டே இருக்கிறார்.  அதுவும் ஒவ்வொரு 2 வருடத்திற்கும் 4 அங்குலம் என்ற அளவில் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2012ம் ஆண்டு வரை இந்தியாவின் உயரமான பெண்மணி என்ற கின்னஸ் சாதனையாளராக அவர் இருந்தார்.  அதன்பின்னர் மேற்கு வங்காளத்தை சேர்ந்த சித்திகா பர்வீன் என்ற பெண் 8 அடி மற்றும் 2 அங்குலத்துடன் இவரை விட உயரமான பெண் என்ற அந்தஸ்தை தனதாக்கி கொண்டார்.  கரண் சிங்கின் தந்தை சஞ்சய் சிங் ஓர் ஊட்டச்சத்து நிபுணர்.

அவர் கூறும்போது, பெங்களூர் கல்லூரியில் வைத்து தான் அவளை பார்த்தேன்.  இருவரும் காதலித்து கடந்த 2007ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டோம் என்று தெரிவித்துள்ளார்.  6 அடி 6 அங்குலம் உயரம் கொண்ட சஞ்சய் கூறும்போது, நாங்கள் இருவரும் மிக பொருத்தமாக ஒருவருக்கொருவர் உற்ற துணையாக இருக்கிறோம் என்றும் தெரிவித்துள்ளார்.

அதிக அளவிலான இந்த வளர்ச்சி நிலை குறித்து மீரட் நகரை சேர்ந்த மனித வளர்ச்சி குறித்து படித்தவரான மருத்துவர் ஹரீஷ் மோகன் ரஸ்தோகி கூறும்போது, 25 வயது நிறைந்த இளம்பெண் ஒருவர் இந்த வயதிலும் தொடர்ந்து வளர்கிறார் என்பதை கற்பனை செய்து பார்ப்பதற்கே கடினமாக இருக்கிறது.  எலும்புகளின் வளர்ச்சிக்கு உதவும் எபிபிசிஸ் என்ற வளர்ச்சி முறை 21 வயதுடன் நின்று விடும்.

சில நபர்களுக்கு வளர்ச்சி ஹார்மோன் அதிகமாக சுரப்பதால் அவர்கள் 25 வயது வரை உயரமாக வளர்ந்து கொண்டே இருப்பார்கள் என்று தெரிவித்துள்ளார்.  இதில் ஆச்சரியப்படும் வகையில் மற்றொரு விசயம், தாய் மற்றும் மகன் இருவரும் மிக அதிக தொலைவில் எழுப்பப்படும் ஒலியை கேட்கும் திறன் கொண்டவர்களாக இருக்கிறார்கள் என்று சஞ்சய் தெரிவித்துள்ளார்.

நன்றி : மாலைமலர்

Socializer Widget By Blogger Yard
SOCIALIZE IT →
FOLLOW US →
SHARE IT →

0 comments:

Post a Comment