பெயர் மற்றும் இமெயில் கொடுத்து உறுப்பினராகலாம்.!

We'll not spam mate! We promise.

Monday, September 1, 2014

விவேக் எக்ஸ்பிரஸ் ரயில் பயணிக்கும்தூரம் : 4273 கி.மீ : நேரம் : 84 மணி 45 நிமிடங்கள் : .

இரண்டு ரயில்களில் பயணித்தால் அதன் திருப்தியே அலாதி என்றார் நண்பர். 
 எப்படி என்றேன்?
 ஆமாம்... கன்னியாகுமரி - ஜம்முதாவியில் பயணம் செய்தால்... நாலு சீசன்களையும் பயணத்திலேயே அனுபவித்து விடலாம்.
 அதேசமயம் கன்னியாகுமரி - திப்ரூகர் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்தால்... சீதோஷ்ண நிலை இடத்திற்கு இடம் மாறிக் கொண்டேயிருப்பதை ரசிக்கலாம் என்றார்.
 இதில் கன்னியாகுமரி - திப்ரூகர் எக்ஸ்பிரஸ் ரயில் வாராந்தர ரயில். (விவேக் எக்ஸ்பிரஸ்)  2011இல் விவேகானந்தரின் 150ஆவது பிறந்தநாளையொட்டி விடப்பட்ட ரயில் ஆகும்.
 இந்த ரயிலில் கன்னியாகுமரி - திப்ரூகருக்கு முன்பதிவு செய்யாத பெட்டி கட்டணம் 550 ரூபாய்.
 இந்த ரயிலில் மொத்தம் 22 பெட்டிகள். இதில் மூன்று குளிர்சாதனப் பெட்டிகள் மற்றும் பதினான்கு முன்பதிவு பெட்டிகள் - நான்கு முன்பதிவு இல்லாத பெட்டிகள், ஒரு சமையல் அறை பெட்டி.
 ரிசர்வ் செய்யப்படாத பெட்டி ஒவ்வொன்றும் 72 இருக்கை கொண்டவை. இதில் 200 - 300 பயணிகள் இருப்பர். இதில் பெண்களும், குழந்தைகளும் அடக்கம்.
 டிரைவர்... கார்டு.. டிக்கெட் பரிசோதகர் 

ஒவ்வொருவரும் 8-10 மணி நேரம் (300 - 500 கி.மீ) பயணித்துவிட்டு மாறுவர்.
 ஆனால் ஏ.சி மெக்கானிக் மட்டும் கடைசிவரை வருவார். தலையணை; போர்வைகள் வழங்கப்படும்.
 திப்ரூகரிலிருந்து வரும் ரயிலில் பெரும்பாலோர் கேரளாவில் இறங்குவர். காரணம் ஏராளமான அஸ்ஸôமியர் கேரளா வந்து வேலை செய்வதுதான்.

 உதாரணமாக, வடகிழக்கு மாநிலங்களிலிருந்து 15 லட்சம் பேர் கேரளாவில் உள்ளனர். இவர்களில் 8 லட்சம் பேர் அஸ்ஸாமியர்.
 விவேக் எக்ஸ்பிரஸ் 4273 கி.மீ. பயணிக்கிறது.
 அசாம், நாகாலாந்து, மேற்கு வங்காளம், பிகார், ஒடிசா, ஆந்திரா, கேரளா, தமிழ்நாடு என இவ்வளவு மாநிலங்களை இது தொட்டு வருகிறது.


 மொத்தம் 55 ரயில் நிலையங்களில் இந்த வண்டி நிற்கிறது.

 திப்ரூகர் - திமாபூர் - கௌஹாத்தி - நியூ ஜல்பைகூரி -மால்டா டவுன் - துர்காபூர் - மிதான் பூர் - பாலேகர் - கட்டாக் - புவனேஸ்வர் - விஜயநகரம் - விசாகப்பட்டினம் - ராஜமுந்திரி, விஜயவாடா- நெல்லூர் - ரேணிகுண்டா - காட்பாடி- சேலம் - ஈரோடு - கோயம்புத்தூர் - பாலக்காடு - திருச்சூர் - எர்ணாகுளம் - கோட்டயம் - கொல்லம் - திருவனந்தபுரம் - நாகர்கோயில் - கன்னியாகுமரி முக்கிய ரயில் நிலையங்கள்.
 மொத்த நேரம் 84 மணி 45 நிமிடங்கள்!

 துர்க்காபூரில் எஞ்சின் மாற்றி திசையும் மாறும். அத்துடன் ஒரு மிலிட்டரி பெட்டி ஒன்றும் சேர்க்கப்படும். இதில் சி.ஆர்.பி.எப். மற்றும் அசாம் ரைஃபில்ûஸ சேர்ந்தவர்கள் பயணிப்பர். இவர்களை எஞ்சினுக்கு அடுத்து கோர்த்துவிடுவார்கள். பல நேரங்களில் எஞ்சின் ஸ்டேஷன் பிளாட்பாரமை விட்டு வெளியே நிற்கும். ஆக, இவர்களுக்கு பல இடங்களில் சாப்பிடவே ஒன்றும் கிடைக்காதாம். திரும்பிச் செல்லும்போது இந்த கோச்... ஜெனரல் ரிசர்வ்ட் கோச்சாகச் செல்லுமாம்.

 பயண விவரம்: கிளம்புவது - சனிக்கிழமை, 

 பயண முடிவு -  புதன். (15905) - 

கன்னியாகுமரி 14-45 - திப்ரூகர் 03-30. (15906) - 

திப்ரூகர் 23-45 - கன்னியாகுமரி 10-00.

ராஜிராதா

நன்றி : கொண்டாட்டம், தினமணி

Socializer Widget By Blogger Yard
SOCIALIZE IT →
FOLLOW US →
SHARE IT →

0 comments:

Post a Comment