குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த போர்பந்தர் தொகுதி பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் வித்தல் ரடாடியா, தனது விதவை மருமகளுக்கு நடந்த மறுமணத்துக்கு ரூ.100 கோடி மதிப்பிலான சொத்துக்களை பரிசாக வழங்கியுள்ளார்.
வித்தல் ரடாடியாவின் மகன் கல்பேஷ் கடந்த ஜனவரி மாதம் மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவருக்கு மணிஷா என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
இதனால் இளம் வயதிலேயே விதவையான அவரது மனைவி மணிஷாவுக்கு மறுமணம் செய்து வைக்க அவரது பெற்றோர் விரும்பினர். இதற்கு கல்பேஷின் பெற்றோரும் சம்மதம் தெரிவித்தனர்.
இந்த நிலையில், கல்பேஷின் நெருங்கிய நண்பரான ஹார்டிக் கோவாடியாவுக்கும் மணிஷாவுக்கும் எளிய முறையில் திருமணம் நடைபெற்றது.
இந்த திருமணத்தின் போது, எம்.பி. வித்தல் ரடாடியா, தனது மருமகள் பெயரில் ரூ.100 கோடி மதிப்பிலான சொத்துகளை எழுதி வைத்தார். மேலும், மணிஷாவுக்கு தனது மகனின் நண்பரையே மாப்பிள்ளையாக தேர்வு செய்ததும் வித்தல் ரடாடியாதான் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவர், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, காங்கிரஸ் எம்.பி.யாக இருந்த போது, தனது வாகனத்தை நிறுத்திய சுங்க கட்டண ஊழியர்களை துப்பாக்கிக் காட்டி மிரட்டி சர்ச்சையில் சிக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி : தினமணி
![]() |
0 comments:
Post a Comment