பெயர் மற்றும் இமெயில் கொடுத்து உறுப்பினராகலாம்.!

We'll not spam mate! We promise.

Tuesday, August 26, 2014

தென்மொழி – தூயதமிழ்த் திங்களிதழ்


பத்திரிகை சமுதாயத்திற்கான மாமருந்து எனலாம். இப்போதுள்ள வியாபார காலத்தில் ஒரு சில பத்திரிக்கைகள் பணம் பார்க்க அம் மருந்தை விடமாக்குவது நாம் காண்பதே. பெரும் பத்திரிகைகளில் பெரும்பாலானவை பணம் தேடும் தொழிலாக மட்டுமே மாற்றப்பட்டுவிட்டன. இது போன்ற சூழ்நிலைகளிலும் சிறு பத்திரிகைகள், சமூக அவலங்களுக்கும் அநீதிகளுக்கும் எதிராக தொடர்ந்து ஒலித்துக் கொண்டேதானிருக்கின்றன.
அந்த வகையில் தமிழர்களுக்கு கிடைத்த மாபெரும் சிந்தனையாளர் அய்யா பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களால் 1959-ல் (தி.பி. ககூகூ0) உருவாக்கப்பட்ட “தென்மொழி” சிற்றிதழ் இன்றும் தன் தொன்மை மாறாமல் ஒலித்துக் கொண்டிருக்கிறது. “தென்மொழி” தூயதமிழ்த் திங்களிதழாக சென்னையில் இருந்து வெளிவந்து கொண்டிருக்கிறது.
இதழின் நோக்கம் முதல் பக்கத்திலேயே புலனாகின்றது.
“இந்தியா ஒன்று இருக்கும் வரை இந்து மதம் இருக்கும். இந்து மதம் இருக்கும் வரை தமிழர்களும் இந்துவாகவே இருக்க வேண்டும். தமிழர்கள் இந்துவாக இருக்கும் வரை மதப்பூசல்களும் குலக் கொடுமைகளும் அவர்களை விட்டு விலகவே முடியாது; மதப்பூசல்களும் குலக் கொடுமைகளும் அவர்களை விட்டு விலகாதவரை ஆரியப் பார்ப்பனரின் வஞ்சகத்திலிருந்தும் மேலாளுமையினின்றும் தமிழன் மீளவே முடியாது. அத்தகைய பார்ப்பனிய பிடிப்புகளிலிருந்து தமிழன் மீளாத வரை, தமிழ் மொழி தூய்மையுறாது; தமிழினம் தலை தூக்காது, தமிழ்நாடு தன்னிறைவு அடைய முடியாது. எனவே, இந்து மதத்தினின்றும், மதப் பூசல்களினின்றும், ஆரியப் பார்ப்பனியத்தினின்றும் விடுபட வேண்டுமானால், நாம் இந்திய அரசியல் பிடியினின்றும் விடுபட்டேயாகல் வேண்டும். ஆகவே தமிழக விடுதலைதான் நம் மூச்சு, ஊக்கம், கொள்கை, முயற்சி என்று தமிழர் ஒவ்வொருவரும் உணர்தல் வேண்டும்.” என இதழின் கொள்கையினை வெளிப்படுத்தியுள்ளனர்.

தூயதமிழ்த் திங்களிதழ் என்ற அடையாளத்திற்கு சற்றும் வேறுபடாது, பிற மொழிச் சொற்கள் இல்லாத கட்டுரைகளும் கவிதைகளும் செய்திகளுமாக நிறைந்துள்ளது தென்மொழி. பிற மொழிச் சொற்களை வெளியிட வேண்டிய இடங்களில் அச்சொற்களை அடைப்புக்குறிகளுக்குள்ளும், அதற்கு இணையான தூயதமிழ்ச் சொற்களை வாங்கியங்களில் தொடர்ச்சியாக இட்டும் வெளியிடப்படுவது இந்த இதழின் தனிச்சிறப்பு. இதன் மூலம் நாம் வழக்கில் பழகிப்போன பிற மொழிச் சொற்களுக்கு இணையான தூய தமிழ்ச் சொற்களை அறிந்து கொள்ள சிறந்த தமிழ் அகராதி போலவும் விளங்குகின்றது இவ்விதழ்.

இளைஞர்கள் மாணவர்களுக்காக குறுக்குச் சொல் போட்டி மாதாமாதம் வெளிவருகின்றது. முதல் மூன்று வெற்றியாளர்களுக்கு பரிசுகளும் வழங்கப்படுகின்றது.
தமிழ் மொழி இன நாட்டு நலத் தொடர்பாகவும், அரிய தமிழ் ஆய்வுகள் தொடர்பாகவும் நடைபெறும் கருத்தரங்குகள், கூட்டங்கள், மாநாடுகள், போராட்டங்கள், தமிழறிஞர்களைச் சிறப்பு செய்யும் நிகழ்ச்சிகள் கலந்துரையாடல்கள் ஆகியவற்றின் செய்திகளை படங்களுடன் தென்மொழியில் வெளியிட ஏதுவாக அஞ்சல் வழியாகவோ, மின்னஞ்சல் மூலமாகவோ அனுப்பலாம்.
—-
ஆண்டுக்கட்டணம்: உரு.120.00
வாழ்நாள் கட்டணம்: உரு.1000.00 (பத்து ஆண்டுகள்)
தனி இதழ் உரு.10.00
வெளிநாடு ஆண்டுக்கட்டணம்: உரு.1000.00

அலுவலக முகவரி:

தென்மொழி,
மேடவாக்கம் கூட்டுச் சாலை,
சென்னை – 600100.
பேசி: 94444 40449, 94438 10662
இணைய அஞ்சல்: thamizhnilam@gmail.com

Socializer Widget By Blogger Yard
SOCIALIZE IT →
FOLLOW US →
SHARE IT →

0 comments:

Post a Comment