பெயர் மற்றும் இமெயில் கொடுத்து உறுப்பினராகலாம்.!

We'll not spam mate! We promise.

Saturday, November 8, 2014

வித்தியாசமான விளம்பரம் இன்றைய தினமணியில் !மக்கள் பணி செய்ய விரும்புவோர் கவனத்திற்கு !


குணம் :-  நேர்மையான  வழியில்  வருமானம்  ஈட்டுதல் -  பிறருக்கு  உதவும் மனப்பான்மை - பிறர்  கூறும்  யோசனைகளுக்கும்  குறைகளுக்கும் குறைகளுக்கும்  செவி  சாய்த்தல் - பாலியல்  விரசம்  -  போதைப் பொருட்களைத்  தவிர்த்தல்


திறன் :-  உடல் - மன  ஆரோக்கியத்தைப்  பேணுதல்  -  மக்கள்  பிரச்னைகளைப் புரிந்துகொண்டு  தீர்வு  காணுதல்  - அநீதிக்கு  எதிராக  காந்தீய  வழியில் போராடுதல்  -  தமிழ்  மொழியில்  தேர்ச்சியும்  பிற  மொழிகளில்  ஆர்வமும் பெற்றிருத்தல்.


கல்வி :-  ஒழுக்கம் - உழைப்பு  -தொழில்  -  அறிவு  - ஆராய்ச்சி  ஆகியவை இணைந்த  கல்வியை  ஆதரித்தல் - தமிழ்  மொழிக்கு  முதன்மையும்  பிற மொழிகளுக்கு  வாய்ப்பும்  வழங்குதல்


சமூக  அக்கறை ;-  ஒதுக்கப்படும்  சிறுபான்மை  சாதி  மற்ரும்  சமயத்தினரின் உரிமைக்காகக்  குரல்  கொடுத்தல்  -  சமூகச்  சச்சரவுகளை  வன்முறை தவிர்த்து  சமாதானமாகப்  பேசித்  தீர்த்தல்  - அனைத்துத்  தரப்பு  மக்களும் ஒற்றுமையாகவும்  அமைதியாகவும்  வாழ  விரும்புதல்


பொருளாதார  நிலைப்பாடு :-  ஆடம்பரம்  தவிர்த்து  எளிமையில்  வாழ்தல்  - இயற்கை  வேளாண்மையை  ஊக்குவித்தல்  -  சிறு  மற்றும் குறுந்தொழில்களை ஆதரித்தல்  -  வறுமை  வாழ்  மக்களின்  வளர்ச்சியில் ஆர்வம்  செலுத்துதல்  -  இயற்கை  வளங்களையும்  சுற்றுச்  சூழலையும் பாதுகாத்தல்

அரசியல்  ஆர்வம்  :-  இன்றைய  அரசியலுக்கு ஒரு  மாற்றுப்பாதையைத் தேடுதல் -  மக்களுக்கே  அதிகாரம்  என்ற  கருத்தினை  வலுப்படுத்தும் செயல்களில்  நம்பிக்கை  இருத்தல்


 மேற்கூறிய  தகுதிகளைக்  கொண்ட  சகோதர  -  சகோதரிகள்  ஒன்றுகூடி கலந்துரையாடி  சேவை  செய்ய  விரும்பினால்  தங்களது  முகவரி , இ மெயில், மற்றும்  தொலைபேசி  எண்ணுடன்  அஞ்சலில்  தொடர்பு  கொள்ள வேண்டுகிறோம்.


டாக்டர். ந.  மார்க்கண்டன்,  முன்னாள்  துணை  வேந்தர்,

5/ 58 , டி.சி.என். வீதி,  தீத்திபாளையம்  அஞ்சல்

பேரூர்  வழி  கோயமுத்தூர்  - 641 010

அலைபேசி  எண்  94433 49227   

நோக்கம் நன்றாக  இருக்கிறது. நாலு  பேருக்குத் தெரியட்டும் என்பதற்காக இந்தப் பதிவு. மெய்ப்பொருள்  காண்பது அறிவு.

    


      


Socializer Widget By Blogger Yard
SOCIALIZE IT →
FOLLOW US →
SHARE IT →

0 comments:

Post a Comment