பெயர் மற்றும் இமெயில் கொடுத்து உறுப்பினராகலாம்.!

We'll not spam mate! We promise.

Monday, November 10, 2014

ஞானப் பொக்கிஷம்ஞானப் பொக்கிஷம் - பி.என்.பரசுராமன்; பக். 232; ரூ.115; விகடன் பிரசுரம், சென்னை 044-4263 4284.

அரிய பழம்பெரும் நூல்கள் பலவற்றை அறிமுகப்படுத்தி அதிலுள்ள ஞானத்தை விவரித்துள்ளது இந்நூல்.
நூலின் தொடக்கத்திலேயே அண்ணன் தாய், தந்தை போன்ற உறவு முறைகளுக்கு, நாம் அறிந்த பொதுவான விளக்கங்களுக்கும் மேலாக விளக்கங்கள் கொடுத்து வியக்க வைக்கும் அறப்பளீசுர சதகம், வாழ்க்கையில் செய்யாமல் நாம் அசிரத்தையாக இருக்கும் சில செயல்கள் எப்படி சுற்றுச் சூழலுக்கே மாசு விளைவிக்கிறது என்பதை எடுத்துக் கூறும் சிறுபஞ்ச மூலம். அறத்தைச் சொல்லும் ஆசாரக் கோவை, அறநெறிச் சாரம், நல்வழி போன்ற ஏராளமான நூல்களில் உள்ள விஷயங்கள் எளிய நடையில் விளக்கப்பட்டுள்ளது.
எளிமையான தமிழ்ச் சொற்களால் அமைந்த தத்துவப் பாடல்கள், இடையிடையே சிறுகதைகள், மகா ஞானிகளின் படங்கள் போன்றவை நூலுக்கு மெருகூட்டுகின்றன. திருவருட்பா, விதுர நீதி, கந்த புராணம், கல்லாடம், விநோத ரச மஞ்சரி, பன்னூற்றிரட்டு முதலிய ஏராளமான பொக்கிஷங்களைப் பற்றிய விஷயங்கள் அனைத்தும் ஒரே நூலில் பொதிந்து கிடப்பது சிறப்பு.
நூலில் இடம்பெற்றுள்ள 46 கட்டுரைகளும் அறிவுக்கு விருந்து.
கிடைப்பதற்கு அரிதான புத்தகங்கள், சில நூற்றாண்டுக்கு முன் பதிப்பிக்கப்பட்ட நூல்களின் விவரங்கள், அது பதிப்பிக்கப்பட்ட முறைகளையும், அதை வெளிக்கொண்டு வர முயற்சி எடுத்தவர்களையும் பற்றி சில விவரங்களையும் எழுதியிருப்பது நன்மதிப்பை ஏற்படுத்துகிறது.
நன்றி ;- தினமணி

Socializer Widget By Blogger Yard
SOCIALIZE IT →
FOLLOW US →
SHARE IT →

0 comments:

Post a Comment