01. திருப்பரங்குன்றம் குமரவேளை மதுரைக் கணக்காயனார் மகனார்
நக்கீரனார் பாடியது
திருமுருகு ஆற்றுப்படை,
திருச் சீர் அலைவாய்,
திரு ஆவினன்குடி
திரு ஏரகம்
குன்றுதோறு ஆடல்
பழமுதிர்ச் சோலை
02. சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக்கண்ணியார் பாடியது
பொருநர் ஆற்றுப்படை
03. ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர்
நத்தத்தனார் பாடியது
சிறுபாண் ஆற்றுப்படை
0-4. தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார்
பாடியது
பெரும்பாண் ஆற்றுப்படை
05. காவிரிப்பூம்பட்டினத்துப் பொன் வணிகனார் மகனார் நப்பூதனார்
பாடியது
முல்லைப் பாட்டு
06. தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை
மாங்குடி மருதனார் பாடியது
மதுரைக் காஞ்சி
07. பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார்
நக்கீரனார் பாடியது
நெடுநல்வாடை
08. ஆரிய அரசன் பிரகத்தத்தனைத் தமிழ் அறிவித்தற்குத் கபிலர் பாடியது
குறிஞ்சிப் பாட்டு
09. சோழன் கரிகாற் பெருவளத்தானைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார்
பாடியது
பட்டினப்பாலை
10. இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கெளசிகனார் பல் குன்றக்
கோட்டத்துச் செங்கண்மாத்து வேள் நன்னன் சேய் நன்னனைப் பாடியது
மலைபடுகடாம்
எட்டுப் புலவர்கள் பாடிய பத்துப் பாடல்களின் தொகுப்பு
பத்துப்பாட்டாகும் இவ்வாறு தொகுத்தோர் சங்கத்துப் புலவர்களே என்பார்
நச்சினார்க்கினியர்.
ஆசிரியப்பா மற்றும் வஞ்சியிடையிட்ட பாவால் அமைந்த செய்யுட்களின்
தொகுப்பு இது.
இப்பத்துப் பாடல்களுள் ஆறு பாடல்கள் புறத்திணைப் பாடல்கள்;
முல்லைப்பாட்டு, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை ஆகிய மூன்றும்
அகத்திணைப் பாட;ல்கள்.
நெடுநல்வாடை அகப்புறப்பாட்டு.
பதம் பிரித்து 41 செம்மொழித்தமிழ் இலக்கியப் பாடல்களை வரி
வடிவங்களில் மட்டும் சூன் 2010-இல் தஞ்சாவூர், தமிழ்ப் பல்கலைக் கழகம்
தக்கோரைக் கொண்டு வெளியிட்டுள்ளது.
பொருளுரை- கருத்துரை கிடையாது. ஆனால் இதில் ஒரு சிறப்பு
என்னவென்றால் 41 செம்மொழி இலக்கியங்களும் ஒருங்கே
பதிப்பிக்கப்பட்டது தமிழ் பதிப்புலகில் இதுதான் முதல் முறையாகும்.
மேலும் ஒரு சிறப்பு :- பிலிப்பன்ஸு நாட்டிலிருந்து தருவிக்கப்பட்ட
எடைகுறைந்த தரமான தாளில் 1.6 கிலோ எடையில் 1500-க்கும் மேற்பட்ட
பக்கங்களில் ரூ300/- விலைக்குத் தரப்படுகின்றது. 30% தள்ளுபடியும் உண்டு.
தமிழராய்ப் பிறந்த ஒவ்வொருவர் வீட்டிலும் இருக்கவேண்டிய
அவசியமான நூல் இதுவாகும்.
புத்திசாலித் தமிழன் பயன்படுத்திக் கொள்வான். வேறேன்ன சொல்ல
முடியும் ?

0 comments:
Post a Comment