பெயர் மற்றும் இமெயில் கொடுத்து உறுப்பினராகலாம்.!

We'll not spam mate! We promise.

Thursday, October 2, 2014

முதலில் அச்சேறிய தமிழ் நூல்கள் - சேவியர் தனிநாயகம் அடிகள்


சேவியர் தனிநாயகம் அடிகள்

-1954 -ஆம்  ஆண்டு  போர்ச்சுக்கல்  நாட்டின்  லிஸ்பன்  நகருக்குச்  சென்ற  தனிநாயகம்  அடிகள்,  அங்குள்ள  பொருட்காட்சி  சாலையில்  1554-ல்  அச்சிடப்பட்ட  தமிழ்நூலைக்  கண்டதாகக்  கூறியுள்ளார்.  இந்நூலின் பெயரைக்  குறிப்பிடவில்லை.  நிந்நூல்  தமிழ்  மற்றும்  போர்த்துக்கீசிய  மொழிகளில்  அச்சிடப்பட்டுள்ளன.  அதேசமயம்  இந்ந்நூலின்  நான்காம்  பக்கத்தில்  தமிழ்  ஒலி  வடிவைக்  குறிப்பதற்குத்  தமிழ்  வரிவடிவைக்  கையாளாது  உரோம  எழுத்துக்களைக்  கொண்டு  அச்சிட்டுள்ளனர்.  இதுவே  கிடைத்த  தரவுகளில்  தமிழில்  அச்சேறிய  முதல்நூலாகக்  கருதப்படுகிறது.  இதனை  மூன்றாவது  சுவாம்  என்னும்  போர்த்துக்கல்  மன்னனின்  ஆணைப்படி  அச்சிடப்பெற்றது  என்றும்,  ‘இதிலிருக்கும்  செபங்களையும்  மந்திரங்களையும்  தமிழ்மொழியில்  பெயர்த்தவர்கள்  லிஸ்பனில்  அக்காலத்தில்  வாழ்ந்துவந்த  தமிழர்கள்  என்றும்  குறிப்பிடுகிறார்.  இந்நூல்  38  பக்கங்களைக்  கொண்டது.

- 1577 -ஆம்  ஆண்டு  கொல்லத்தில்  அச்சிடப்பட்ட  நூல்  ‘தம்பிரான்  வணக்கம்’  என்பதாகும்.  இந்நூல்  ’இந்தியநாட்டில்  முதல்  அச்சுக்கண்ட  தமிழ்நூல்’  என்று  குறிப்பிடுகிறார்.  இந்நூல்  அமெரிக்காவின்  ஹார்வர்ட்  பல்கலைக்கழக  நூலகத்தில்  இருந்துள்ளது.  16  பக்கங்களைக்  கொண்டது.  

- 1579-ஆம்  ஆண்டு  கொச்சியில்  அச்சிடப்பட்டது  ‘கிரீசித்தயானி  வணக்கம்’  என்னும்  நூலாகும்.  இந்நூல்  மேற்குறிக்கப்பெற்ற  தம்பிரான்  வணக்கம்  என்ற நூலில்  உள்ள  செபங்களையும்  கோட்பாடுகளையும்  விரிவாக  எழுதி  112-  பக்கங்களாக  வெளியிடப்பட்டது.

- 1586 - ஆம்  ஆண்டு  அச்சிடப்பட்டது  ‘பிலோசந்தரும்’  ( FLOS  SANCTORUM )  என்ற  நூலாகும்.  இந்நூல்  1554-இல்  அடிகளார்  உரோம்  நகர்  சென்றபோது  அங்குள்ள  வத்திக்கான்  நூற்கூடத்தில்  பார்த்ததாகக்  குறிப்பிடுகிறார்.  666  பக்கங்கள்  கொண்ட  இந்நூலின்  ஆசிரியர்  என்றிக்கஸ்  பாதிரியார்  என்றும்  தென்னிந்திய  தமிழ்  அச்சகத்தில்  பதிப்பிக்கப்பெற்றது  என்றும்  குறிப்பிட்டுள்ளார்.

- 1577-இல்  அச்சிடப்பட்ட  தமிபிரான்  வணக்கம்  என்ற  நூலை  1552-இல்  ஹாவர்ட்  பல்கலைகழக  நூலகத்தாரிடமிருந்து  அதன்  நிழற்படியை  அடிகள்  பெற்றுள்ளார்.  அதே  போன்று  ‘லிரீத்தயானி  வணக்கம்’  என்ற  நூலினையும்  பாரிஸ்  மாநகரப்  பல்ககலைக்கழகத்திலிருந்து  1929-இல்  நிழற்படி  எடுத்து  வைத்திருந்துள்ளார்.  ப்ன்னாளில்  அந்நூல்  காணப்படாமையால்  அடிகளின்  பிரதி  மூலம்  காப்பாற்றப்பட்டதாகவும்  குறிப்பிடுகிறார்.  மேலும்  இந்நிழற்படியினை  அறிஞர்கள்  பலரும்  பிரதி  எடுத்துக்கொண்டதாகவும்  கூறியுள்ளார்.  தற்போது  தமிழில்  புழக்கத்தில்  இருக்கும்  இவ்விரு  நூல்களும்  அடிகளின்  பிரதி  வழியாக உருப்பெற்றவையாக  இருக்கலாம்.

இவ்வாறாக  16-ஆம்  நூற்றாண்டில்  அச்சிடப்பட்ட  (  தமிழ்  ஒலி -  வரிவடிவத்தைக் கொண்ட )  நூல்களைப்பற்றிய  மிக  விரிவான  பதிவைத்  தந்துள்ளார்.  குறிப்பாக  நூலின்  வரிவடிவத்தைப்பற்றிக்  குறிப்பிடப்பட்டுள்ளவை  1554-இல்  அச்சிடப்பட்ட  நூலில்  ‘இந்நூல்  தமிழ்  ஒலி  வடிவைக்  குறிப்பதற்குத்  தமிழ்  வரிவடிவைக்  கையாளாது  உரோம  எழுத்துக்களையே  கையாண்டது’  ( கல்கி  தீபாவளி  மலர்  188- ஆம் பக்கம்  )  எனக்  குறிப்பிடுகிறார்.  இது  நாம்  தற்போது  PHONETIC  முறையில்  குறிப்பிடுவதுபோன்று,  அதாவது  நாம்  தமிழில்  “அம்மா”  என்ற  வார்த்தையை  ஆங்கிலத்திலும்   "AMMA"   என்று  தட்டச்சு செய்வது  போன்றதே.

நன்றி :-ரோஜா   முத்தையா  ஆராய்ச்சி    நூலகத்தின்   காலாண்டிதழ், 

 ( FREE CIRCULATION   VOL I ISSUE 2 )

சித்திரை / ஏப்ரல்  2014              

Socializer Widget By Blogger Yard
SOCIALIZE IT →
FOLLOW US →
SHARE IT →

0 comments:

Post a Comment