பெயர் மற்றும் இமெயில் கொடுத்து உறுப்பினராகலாம்.!

We'll not spam mate! We promise.

Friday, October 17, 2014

17 - 10 - 2014 ஒரு நிமிட வாசிப்பு - தி இந்து


October 17, 2014

11:56 ராமநாதபுரம் சம்பவம் குறித்து மனித உரிமை ஆணையத்தில் புகார்

ராமநாதபுரம் சம்பவத்தில் நடந்துள்ள மனித உரிமை மீறல் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று மனித உரிமை ஆணையத்தில் புகார். »

11:43 ஆன்லைன் வர்த்தகத்தை எதிர்த்து அக். 31-ல் ஆர்ப்பாட்டம்

ஆன்லைன் வர்த்தகத்தை தடை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வரும் 31-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளது. »

11:42 கட்சி மேலிட ஆணை: உச்ச நீதிமன்ற வளாகத்தில் அதிமுகவினர் ஆப்சென்ட்

பெங்களூர் சிறப்பு நீதிமன்றம், கர்நாடக உயர் நீதிமன்றம் முன்பு அதிமுகவினர் குழுமியிருந்தது போல் உச்ச நீதிமன்ற வளாகத்தில் இன்று அதிமுகவினர் இல்லை. »

11:38 காஷ்மீரில் லஷ்கர் பயங்கரவாதி கைது

காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதி கைது செய்யப்பட்டார். »

10:37 எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் அத்துமீறல்

எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது. »
கூட்டத்தில் பங்கேற்ற ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, பார்தி ஏர்டெல் நிர்வாக இயக்குநர் சுனில் பார்தி மிட்டல்.

10:21 தொலைத்தொடர்பு நிறுவனங்களை கடிந்து கொண்ட சந்திரபாபு நாயுடு

"தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வணிக நோக்கத்தோடு மட்டுமே செயல்படுகின்றன. மக்கள் நலனில் அக்கறை இருப்பதாகத் தெரியவில்லை" »

10:18 எஸ்.ஐ. காளிதாஸ் சஸ்பெண்ட் உத்தரவை வாபஸ் பெற எச்.ராஜா வலியுறுத்தல்

எஸ்.ஐ. காளிதாஸ் மீதான சஸ்பெண்ட் உத்தரவை வாபஸ் பெற வேண்டும் என பாரதிய ஜனதா கட்சி பொதுச் செயலாளர் எச். ராஜா வலியுறுத்தியுள்ளார். »

10:17 அமைச்சர் உறவினர் கொலை: 4 பேர் சரண்

பால்வளத்துறை அமைச்சர் ரமணாவின் சித்தப்பா மகனான ரவி என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில், 4 பேர் சரணடைந்தனர். »

10:13 சென்னையில் கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்ட கும்பல் தலைவன் கைது

சென்னையில் கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்ட கும்பல் தலைவனை மேற்கு வங்கத்தில் வைத்து சிபிசிஐடி போலீஸார் கைது செய்தனர். »

10:12 'தூய்மை இந்தியா' பிரச்சாரம்: சாலைகளை சுத்தப்படுத்தினார் சானியா

பிரதமரின் அழைப்பை ஏற்ற டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸா, நேற்று ஹைதராபாத்தில் பிராஷன் நகர் பகுதி சாலைகளை சுத்தப்படுத்தினார். »

10:10 ஆட்டோ திருடனை விரட்டி பிடித்த போலீஸார்

ஆட்டோவை விரட்டி பிடித்த உதவி ஆய்வாளர் ஏழுமலை, ஊர்க்காவல் படை வீரர் சரவணன் ஆகியோரை கூடுதல் ஆணையர் கருணாசாகர் பாராட்டினார். »

10:08 ஆசிரியர் நியமனத்தில் 3-வது தேர்வு பட்டியல் வெளியீடு

ஆசிரியர் நியமனத்தின் 3-வது தேர்வு பட்டி யல் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் (www.trb.tn.nic.in) நேற்று வெளியிடப்பட்டது. »

10:07 தீபாவளிக்கு இன்று முதல் சிறப்பு பஸ்கள் இயக்கம்

தீபாவளி பண்டிகையையொட்டி தமிழக அரசு அறிவித்த சிறப்பு பஸ்கள் இன்று முதல் இயக்கப்படுகின்றன. »

10:05 அரசு பணியாளர்களுக்கு தொகுப்பூதியம் உயர்வு

ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களுக்கான தனிப்பட்ட நிலுவைத் தொகை உடனடியாக ரொக்கமாக வழங்கப்படும். »
October 16, 2014
அரவிந்த் சுப்ரமணியம் | கோப்புப் படம்

22:11 தலைமை பொருளாதார ஆலோசகராக அர்விந்த் சுப்ரமணியம் நியமனம்

மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகராக அர்விந்த் சுப்ரமணியம் நியமிக்கப்பட்டுள்ளார். »
அரவிந்த் சுப்ரமணியம் | கோப்புப் படம்

16:48 காஷ்மீரில் 'தர்பார்' நடைமுறை: ஜம்முவுக்கு மாறுகிறது தலைமைச் செயலகம்

கடந்த ஆறு மாதங்களாக ஸ்ரீநகரில் இயங்கி வந்த மாநிலத் தலைமைச் செயலகம் மாநிலத்தின் இன்னொரு தலைநகரான ஜம்முவுக்கு இடம்பெயர இருக்கிறது. »
அரவிந்த் சுப்ரமணியம் | கோப்புப் படம்

16:17 வீணாகும் வக்பு வாரிய சொத்துகள்: மதிப்பீட்டுக் குழு அறிக்கையில் தகவல்

"நாடு முழுவதும் வக்பு வாரிய சொத்துகள் வீணாகப் போய் கொண்டிருப்பதாகவும், அதை முறையாகப் பயன்படுத்தினால் கோடிக்கணக்கான ரூபாய் லாபம் கிடைக்கும்" »
ஒடிஸாவில் ஹுத்ஹுத் புயலின் தாக்கத்தால் வேருடன் சாய்ந்த மரம்.| கோப்புப் படம்: பி.டி.ஐ.

15:40 ஹுத்ஹுத் புயல் பாதிப்பு: ஒடிஸாவில் 5,000 மரங்கள் அழிந்தன

ஹுத்ஹுத் புயல் பாதிப்பால் ஒடிஸாவில் விலைமதிப்பற்ற 5000-த்துக்கும் அதிகமான தேக்கு, சால் போன்ற அரிய வகை மரங்கள் அழிந்து நாசமாகின. »
ஒடிஸாவில் ஹுத்ஹுத் புயலின் தாக்கத்தால் வேருடன் சாய்ந்த மரம்.| கோப்புப் படம்: பி.டி.ஐ.

15:33 மாணவர்கள் திறமையை சோதிக்கும் வினாத்தாள்கள் வடிவமைக்க வலியுறுத்தல்

பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவர்களின் அறிவு, திறமையை சோதிக்கும் வகையில் வினாத்தாள்களை தயார் செய்ய வேண்டும் . »
ஒடிஸாவில் ஹுத்ஹுத் புயலின் தாக்கத்தால் வேருடன் சாய்ந்த மரம்.| கோப்புப் படம்: பி.டி.ஐ.

15:12 புதுச்சேரி அருகே பேருந்து விபத்து: 50 பேர் காயம்

புதுச்சேரி அருகே தனியார் பேருந்து விபத்துக்குள்ளானதில் 50 பேர் காயமடைந்தனர். »
ஹுத்ஹுத் புயலில் சேதமடைந்த விசாகப்பட்டினம் விமான நிலையம்| படம்: ஆந்திர மாநில அரசு.

14:59 விசாகப்பட்டினம் விமான நிலையத்தில் நாளை முதல் விமானங்கள் இயக்கம்

விசாகப்பட்டினம் விமான நிலையத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) முதல் விமானங்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. »
உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்| கோப்புப் படம்.

14:47 தீவிரவாதத்தை ஒடுக்க கூட்டு முயற்சி தேவை: ராஜ்நாத் சிங்

தீவிரவாதத்தை ஒடுக்க உலக நாடுகளின் கூட்டு முயற்சி தேவை என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். »
உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்| கோப்புப் படம்.

14:17 ஆந்திரா செல்கிறார் ராகுல் காந்தி

ஹுத்ஹுத் புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள ஆந்திர மாநிலத்திற்கு காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி நேரில் சென்று ஆய்வு மேற்கொள்கிறார். »
உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்| கோப்புப் படம்.

13:58 உரத்தை பதுக்கினால் விற்பனை நிலைய உரிமம் ரத்து: ஆட்சியர் எச்சரிக்கை

உரத்தை பதுக்கினால் உர விற்பனை நிலையங்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் எச்சரித் துள்ளார். »

13:35 நிலக்கரி ஊழல் வழக்கு: சுரங்கப் பணிகளுக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

"6 மாதங்களுக்குள் வெளியேற வேண்டும் என கெடு விதிக்கப்பட்ட நிறுவனங்கள் நிலக்கரிச் சுரங்கத்தில் மேற்கொண்டுள்ள பணிகளை நிறுத்தி வைக்க உத்தரவிட முடியாது" »

Socializer Widget By Blogger Yard
SOCIALIZE IT →
FOLLOW US →
SHARE IT →

0 comments:

Post a Comment