பெயர் மற்றும் இமெயில் கொடுத்து உறுப்பினராகலாம்.!

We'll not spam mate! We promise.

Tuesday, September 2, 2014

இணையத்தில் தமிழ்த் தரவுத்தளங்கள். - முனைவர் துரைமணிகண்டன்

 




நமது  வலைப்பூ  நண்பர்  எழுதிய


இணையத்தில் தமிழ்த் தரவுத்தளங்கள்



என்ற நூல்  கவுதம் பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்டுள்ளது.


அணிந்துரை-1


முனைவர்.கோ.மீனா
துணைவேந்தர்,
பாரதிதாசன் பல்கலைக்கழகம்,
திருச்சிராப்பள்ளி.



இணையத்தில் தமிழ்த் தரவுகள், தமிழ் விக்கிப்பீடியாவின் செயல்பாடுகள், தமிழ்மரபு அறக்கட்டளையின் பங்களிப்பு, தமிழ் எழுத்துரு மாற்றிகள், மின் - மொழிபெயர்ப்பின் அவசியம், மின் - குழுமத்தின் இன்றைய தேவைகள் எனத் தெளிவாகவும், சுருக்கமாகவும் இந்நூலில் ஆசிரியர் முனைவர் துரை.மணிகண்டன் எடுத்து விளக்கியுள்ளார். இந்நூல் இன்றைய ஆய்வுலகிற்கு மிக முக்கியப் பங்காற்றும் என்பதில் ஐயமில்லை.



முனைவர் கோ.மீனா.


அணிந்துரை-2


சிவா பிள்ளை, லண்டன் ஐஇ(UK)



இணையத்தில் தமிழ்த்தரவு தளங்கள் பற்றிய தகவல்களை ஒருங்கிணத்து முனைவர் துரைமணிகண்டன் இந்நூலைத் தொகுத்திருக்கிறார்.



தரவுத் தளங்களைப் பலரும் புரியும் வண்ணம், தரவுத் தளங்கள் என்றால் என்ன எனப் பட்டியலிட்டு இந்தநூல் ஆக்கி வெளியிடுவதற்கு எனது பாராட்டுகள். தமிழில் தரவு தளங்கள் பற்றிய விளக்கங்கள் தந்திருந்தாலும் இடைக்கிடையே தலைப்புக்களுக்கு ஆங்கில தலைப்பும் கொடுத்திருப்பது விளங்கிக் கொள்வதற்கு ஏதுவாக இருக்கிறது. தமிழ் மொழி மிகத் தொன்மை வாய்ந்தது என்பதை மிகத் தெளிவாக ஆதாரங்களுடன் இந்நூலில் காணப்படுகிறது.



மேலும் அதற்கான இணைய தளங்களையும் அவ்வப்போது வரிசைப்படுத்தி வெளியிட்டிருப்பது பாராட்டுதற்குரியது.



தமிழ் மொழி பிறமொழித் தாக்கமின்றி ஆரம்ப காலத்தில் இருந்தே இருந்ததையும், பிறமொழிக் கலப்பின்றி புதுச் சொல்லை உருவாக்க முடியும் என்பதையும் தெளிவாக இந்நூலில் காட்டப்பட்டுள்ளது. பலரிடம் புழக்கத்தில் இருக்கும் தமிழ் விக்கிப்பீடியா பற்றியும் இந்நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. மின்மொழிபெயர்ப்பு, மின்குழுமம் ஆகினவற்றின் அவசியம் பற்றியும் இந்நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. உத்தமம்- உலகத்தழிர் தகவல் தொழில்நுட்ப மன்றம், செம்மொழி தரவு தரங்கள் பற்றிய விவரங்களைக் குறிப்பிட்டிருப்பதும் பாராட்டுக்குரியது.



இங்ஙனம்,



சிவா பிள்ளை


அறிமுக உரை


அமெரிக்காவில் வசிக்கும் தமிழ் உணர்வாளரும், தமிழ் உலகம் அறக்கட்டளையின் ஆலோசகருமான  திரு. ஆல்பர்ட் பெர்ணான்டோ இவரைப் பற்றிய அறிமுக உரை எழுதி நூலுக்கு மேலும்  சிறப்புச் சேர்த்துள்ளார்.


கிடைக்குமிடம்


கெளதம் பதிப்பகம். 2 சத்தியவதி நகர், முதல் தெரு, பாடி. சென்னை-600 050 

9042276544 -

Socializer Widget By Blogger Yard
SOCIALIZE IT →
FOLLOW US →
SHARE IT →

1 comments:

  1. நல்ல நூல். இதுபோன்று இன்னும் மூன்று நூல்கள் உள்ளன.
    1. இணையமும் தமிழும்
    2. இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்
    3. தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள் என்பவையாகும்.
    நூல் வேண்டும் என்று விரும்பும் அன்பர்கள் எம்மைத் தொடர்புகொள்ளுங்கள். தொடர்பிற்கு: 9486265886.

    ReplyDelete