பெயர் மற்றும் இமெயில் கொடுத்து உறுப்பினராகலாம்.!

We'll not spam mate! We promise.

Monday, September 1, 2014

வீட்டு மின் கட்டணம் மாதந்தோறும் வசூலிக்கப்பட வேண்டும்

Tamil_News_large_1058625
தொழிற்சாலைகளுக்கு, மாதந்தோறும், மின் கட்டணம் வசூலிப்பது போல், வீட்டு மின் இணைப்புகளுக்கும், மாதம் தோறும் மின் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்ற, கோரிக்கை வலுத்துள்ளது.
தமிழகத்தில், வீடு, 1.72 கோடி; விவசாயம், 20.47 லட்சம்; வணிகம், 32.87 லட்சம்; தொழிற்சாலை, 5.98 லட்சம்; குடிசை, 11.82 லட்சம்; இதர பிரிவு, 8.95 லட்சம் என, மொத்தம், 2.52 கோடி மின் நுகர்வோர் உள்ளனர்.வீடுகளில், இரண்டு மாதங்களுக்கு, ஒரு முறை; தொழிற்சாலைகளுக்கு, மாதம் தோறும், மின் கட்டணம் கணக்கிடப்படுகிறது.வீட்டு மின் கட்டண விவரம், கணக்கு எடுக்கப்பட்டதில் இருந்து, 20 நாட்களுக்குள், கட்டண தொகையை செலுத்த வேண்டும்.
வீட்டு மின் இணைப்புக்கு, 100 யூனிட் வரை, யூனிட் ஒன்றுக்கு,  ரூபாய்; 101 முதல், 200 வரை, 1.50 ரூபாய்; 201 முதல் 500 வரை, மூன்று ரூபாய்; 500க்கு மேல், 5.75 ரூபாய் என, மின் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
மானியம் கிடையாது :
அரசின் சார்பில், 500 யூனிட் வரை பயன்படுத்தினால், 1.60 ரூபாய்; 1.30 ரூபாய்; ஒரு ரூபாய் என, மானியம் வழங்கப்படுகிறது. அதற்கு மேல், அதாவது, 500 யூனிட்டிற்கு மேல் பயன்படுத்தினால், அரசு மானியம் கிடையாது.தற்போது, மின் சாதனங்களின் எண்ணிக்கை, பல்வேறு பரிணாமங்களில், பெருகி வருவதால், வீடுகளில், மின் பயன்பாடு அதிகரித்து வருகிறது.இதனால், இரண்டு மாதங்களுக்கு, சாதாரண ஓட்டு வீட்டில் கூட, 500 யூனிட் மேல் வருகிறது. இதனால், அந்த வீட்டு மின் இணைப்புக்கு அரசு மானியம் பெற தகுதி இல்லாததால், முழு கட்டணமும் செலுத்த வேண்டிஉள்ளது.அதேசமயம், மாதம் தோறும், மின் கணக்கீடு எடுத்தால், அதற்கு ஏற்ப, குறைந்த செலவில், மின்சாரத்தைப் பயன்படுத்திக் கொள்ள முடியும். இதன் மூலம், அரசு மானியம் கிடைப்பதுடன், மின்சாரத்தை சிக்கனமாகவும் பயன்படுத்த முடியும்.
எனவே, தொழிற்சாலைகளுக்கு, மாதந்தோறும், மின் கட்டணம் வசூலிப்பது போல், வீட்டு மின் இணைப்புகளுக்கும், வசூலிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
இதுகுறித்து, ‘கோயம்புத்துார் கன்ஸ்யூமர் வாய்ஸ்’ அமைப்பின் செயலர், லோகு கூறியதாவது: உயரழுத்த மின் இணைப்பு பெற்றுள்ள, தொழிற்சாலைகளில், உதவி செயற் பொறியாளர் மூலம், 26ம் தேதி முதல், 30ம் தேதிக்குள், மின் கட்டணம் கணக்கிடப்படுகிறது. ஆனால், வீட்டு மின் இணைப்புகளில், குறிப்பிட்ட நாட்களில், மின் கட்டணம் கணக்கிடுவதில்லை. மின் வாரிய ஊழியர்கள், ஒரு நாள் தாமதமாக வந்தால் கூட, அரசு மானியம் பெற முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே, வீடுகளுக்கு, மாதம்தோறும், மின் கட்டணம் வசூலிக்கும் நடைமுறையை துவக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.

இதுகுறித்து, எரிசக்தி துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘கடந்த, 1987 முதல், இரு மாதங்களுக்கு, ஒரு முறை மின் கட்டணம், வசூல் செய்யப்படுகிறது. ஊழியர்கள் பற்றாக்குறையால், இந்த நடைமுறையை மாற்றுவது, எளிதான காரியம் அல்ல’ என்றார்.
நன்றி : தினமலர்

Socializer Widget By Blogger Yard
SOCIALIZE IT →
FOLLOW US →
SHARE IT →

0 comments:

Post a Comment