பெயர் மற்றும் இமெயில் கொடுத்து உறுப்பினராகலாம்.!

We'll not spam mate! We promise.

Sunday, September 7, 2014

இரட்டைமலை சீனிவாசனுக்கு ஆங்கிலேயர் தந்த அதிசய அரிசி

 06-12-2009 ஞாயிறு அம்பேத்கர் நினைவு நாளில், அவரது முன்னோடி தாத்தா இரட்டைமலை சீனிவாசன்  தகவல் குறிப்பு.

1904-ல்  தென்னாப்பிரிக்காவில் காந்திக்கு மொழி பெயர்ப்பாளராகத் திகழ்ந்தவர்.காந்திக்குத் தமிழி்ல் கையெழுத்துப் போடப் பழகிக் கொடுத்தவர். காந்திக்குத் திருக்குறளை அறிமுகப்படுத்தியவர்.1923-ஆம் ஆண்டில், ஆங்கிலேயர்களால் சென்னை மாநில மேல் சபைக்கு நியமிக்கப் பட்டவர்.சில்வர் டங்க் சீனிவாச சாஸ்திரிக்கு ஈடாக ஆங்கிலத்தில் புலமை பெற்றவர். அவருடன் பேசுவதற்கு ஆங்கிலேயர்  தாத்தா ரெட்டை மலை சீனிவாசனைத்தான் பயன்படுத்திக் கொண்டனர்.

அன்னிபெசன்ட் அம்மையாரி்ன் ஹோம் ரூல் இயக்கத்தால் பிராமணர் அல்லாதோருக்கு ஆபத்து ஏற்பட்டது. சீனிவாசன் அப்பொழுது பிராமணர் அல்லாதோர் இயக்கம் தேவை என வலியுறுத்தினார். அதன் பி்ன்புதான்  தென்னிந்திய நலச் சங்கம் உருவானது. இதில் தாத்தா ரெட்டை மலை சீனிவாசன் முக்கியப் பங்கேற்றார்.. இதுவே பிறகு நீதிக் கட்சியானது.

ராவ் சாகிப், ராவ் பஹதூர், திவான் பஹதூர் பட்டங்களப் பெற்றவர். "FELLOW OF MADRAS UNIVERSITY " தகுதியையும் ஆங்கிலேயரால் ரெட்டை மலை சீனிவாசனுக்கு வழங்கப்பட்டது. ஆங்கிலேயருக்குச் சமமாகக் கல்வியில்,சமூக அந்தஸ்தில் தன்னை உயர்த்திக் கொண்டவர், அதனால் ஆங்கிலேயரால் மதிக்கப் பட்டவர். தன் உயர் நிலயைத் தாழ்த்தப் பட்ட/பிற்படுத்தப்பட்ட  மக்களின் முன்னேற்றத்திற்காக மட்டுமே பயன் படுத்தியவர்.

ஷெட்யூல்டு இன மக்களுக்காகப் பாடுபட்ட நல்லவர்களுக்கு ஆங்கில அரசாங்கம் :"அதிசய அரிசி" (WONDERFUL RICE) ஒன்று கொடுத்துப் பாராட்டியது.

அந்த அரிசியின் மேல் 123 ஆங்கில எழுத்துக்களில் வாழ்த்தி எழுதியிருக்கும். இந்த அரிசியைப் பெற்றவர்கள் தமிழகத்தில் இருவர் மட்டுமே. ஒருவர் நமது தாத்தா  ரெட்டை மலை சீனிவாசன். மற்றொருவர் வடஆர்க்காடு  மாவட்டம் திருப்பத்தூர் கௌதமாபேட்டை A.P. பெரியசாமி புலவர்.

"HIS GREAT EXCELLENCY RETTAIMALAI SRINIVASAN, A MEMBER OF LEGISLATIVE COUNCIL FOR POONAMALLEE CONSTITUENCY PRAY FOR HIS LONG AND PROGRESS LIFE." (LETTERS123)

 "ஒரு சில்வர் தண்டின் நுனியில் வைக்கப்பட்ட பஞ்சின் மத்தியில் அந்த அரிசி இருந்தது. அது ஒரு கண்ணாடிக் குழாயில் மூடப்பட்ட நிலையில் வைக்கப் பட்டுள்ளது.  சில்வரால் செய்யப்பட்ட அழகிய வேலைப்பாடுகள் அமைந்த பெட்டி்க்குள் பார்த்தேன்.  நுட்பமான எழுத்துக்ளைப் படிக்க லென்ஸும் உண்டு."  ரெட்டை மலை சீனிவாசன் பேத்தி வீட்டில்  பார்த்ததாக இத்தகவல்களத் தொகுத்தளிக்கும் பேராசிரியர் டாக்டர் அம்பேத்கர்பிரியன் கூறுகின்றார்.

திராவிடமணி திவான் பஹதூர் தாத்தா ரெட்டை மலை சீனிவாசன் நினைவு மண்டம் அமைக்க ஒரு குழு உருவானது, திவான் பஹதூர் பாஷ்யம் அய்யங்கார் தலவராகவும், கூட்டுக் காரியதரிசிகளாக தாஷாயணி வேலாயுதன், இரத்தினசாமி ஆகியோரும் திகழ்ந்தனர். 32 கமிட்டி அங்கத்தினர்கள். அனைவ்ருமே அந்தக் காலத்தின் முக்கியப் புள்ளிகள்.இந்தப் புத்தகம் வெளிவந்த ஆண்டு 2001. அதுவரை மணிமண்டபம் கோரிக்கயளவிலேயே இருந்து வந்துள்ளது.

இந்த நூலாசிரியர் அம்பேத்கர் பிரியனின் கடுமையான  தொடர்ந்த முயற்சிகளி்ன் விளைவாய் சென்னை காந்தி மண்டபம் உள்ள இடத்தில், தாத்தாஇரட்டை மலை சீனிவாசன் மணி மண்டபம் அக்டோபர் 2009-ல் மு.க.ஸ்டாலினால் திறந்து வைக்கப் பட்டது. நீண்ட காலதாமதத்திற்குப் பிறகேனும் நல் உள்ளங்களின் எண்ணம் நிறைவேறியமைக்கு மகிழ்ச்சி கொள்ளலாம்..

நன்றி:--

மண்ணுரிமைப் போராளி இரட்டை மலை சீனிவாசன் (1859-1945) எழுதியவர்:பேராசிரியர் டாக்டர் அம்பேத்கர்பிரியன், எம்,ஏ. டி,லிட்.(USA)
37/3 சக்தி பிளாட்ஸ்,பஜார் வீதி, நெசப்பாக்கம்,மேற்கு கே.கே நகர், 600 078.

இன்று இதனை இங்கு பதிவு செய்வதில் பெரு மகிழ்வு கொள்கின்றேன்.
மேலும் நூலாசிரியர் அறிமுகமும் இன்று கிடைத்துவிட்டதென்பது  எனது மகிழ்ச்சியை இரட்டிப்பாக்குகின்றது.அவரது மேற்கண்ட முகவரியில் தொடர்பு கொண்டால் அரிய புத்தகங்கள் பல நியாயமான விலைக்குக் கிடைக்கும். ஒவ்வொரு புத்தகத்திற்குப் பின்பும் சொல்லமுடியாத உழைப்பும் பொருட்செலவும் காலமும் செலவிடப்பட்டு உள்ளதென்பதைக் கணக்கிற் கொண்டு ஆர்வலர் அணுகிட வேண்டுகின்றேன்.

இணைய தளத்தில் RETTAI MALAI என்றால்தான் தகவல்களைப்பெற முடிகின்றது.. இரட்டைமலை என்பதே சரியான வார்த்தை.இஃது ஆங்கிலேயரின் பங்களிப்பு.


.                       .

Socializer Widget By Blogger Yard
SOCIALIZE IT →
FOLLOW US →
SHARE IT →

0 comments:

Post a Comment