செல்வா-குமரி அறக்கட்டளை வழங்கும்

2014 ஆம் ஆண்டிற்கான

உத்தமம் தமிழ்க்கணிமைப் பரிசை

திறமூல ஆர்வலர் திரு. த. சீனிவாசன்

வென்றுள்ளார்.

 tha.seenivasan
இளைஞரான இவருக்கு நல்ல கணிநிரல்அறிவும் பட்டறிவும் இருப்பதுடன், நல்லஉள்ளமும், தமிழார்வமும், தன்னறிவைப் பகிரும் பேருள்ளமும் கொண்டுள்ளார்.பல இளைஞர்களுக்கு நல்வழிகாட்டியாகவும்விளங்குகின்றார்.
 ‘
கணியம்’ என்னும் மின்னிதழில் ஏறத்தாழ இரண்டாண்டுகளாக நல்ல பங்களிப்புகள் செய்து வருகின்றார். இவையனைத்தும்   படைப்புப்பொதுமை (‘கிரியேட்டிவ் காமன்சு’) பகிர்வுரிமத்தின்கீழ் கட்டணமின்றிப் பயன்படுத்திக் கொள்ளத்தக்கவை.

 பார்க்கவும்: http://www.kaniyam.com/
இந்திய இலினக்ஃசு (Linux) பயனர் குழுவின் சென்னைக்கிளையின்தலைவராகவும் திரு த.சீனிவாசன் இருக்கின்றார். இவரது அரும்பணிகளால் இளைஞர்கள் பயன் அடைகின்றார்கள்.

 பார்க்கவும்: http://ilugc.in/

 இலவசத் தமிழ்ப்புத்தகங்களாகக் கைப்பேசிகளிலும், கைக்கருவிகளிலும் பெறத்தக்க நூற்றுக்கும் மேலான மி-நூல்களை வெளியிட உதவியிருக்கின்றார்.

 பார்க்கவும்: http://freetamilebooks.com/

புதுச்சேரியில்  உத்தமம் நடத்திய தமிழ்இணைய மாநாட்டின்பொழுது நிறைவு நாளான புரட்டாசி 5, 2045 / 21.09.2014  அன்று பரிசு வழங்கப்பட்டது. பரிசைப் பாரத்துப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் மு. பொன்னவைக்கோ வழங்கத் திரு த. சீனிவாசன் பெற்றுக்கொள்கிறார்.

sei_selvakumariparisu_seenivasan01

படத்தில் இடமிருந்து வலமாக; முனைவர் கு. கல்யாணசுந்தரம், திரு, த. சீனிவாசன், பிரான்சிய மொழிப்பேராசிரியர் பன்னீர்செல்வம், பேரா. பொன்னவைக்கோ, முனைவர் வாசு அரங்கநாதன், செ.இரா செல்வக்குமார், திரு தவா தவரூபன். படம் உதவி: உத்தமம்.

பரிசாளர் த. சீனிவாசன் அவர்களுக்கு அகரமுதல இதழின் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்! பரிசு நல்கும் செல்வா-குமரி அறக்கட்டளையினருக்குப் பாராட்டுகள்!