பெயர் மற்றும் இமெயில் கொடுத்து உறுப்பினராகலாம்.!

We'll not spam mate! We promise.

Friday, September 19, 2014

சூரியனும் ஒரு தொழிலாளி - கம்பதாசனின் திரைப் படப்பாடல் - 1956சூரியனையும், சுற்றும் பூமியையும், ஆர்ப்பரிக்கும் கடலலைகளையும், வீசுங் காற்றையும், மழை நதியையும், விண்மீன்களையும் பாட்டாளி வர்க்கத்திற்குள் கொண்டுவந்துவிட்ட மக்கள் கவி கம்பதாசன், தொழிலாளியைக் கடவுளுக்கு நிகராகக் காண்கிறார்.

எந்தத் தமிழ்க் கவிஞனுமே பார்க்காத புதிய கோணத்தில் தொழிலாளியைக் கடவுளுக்கு நிகராகக்  காண்கிறார்.

1956-இல் வெளிவந்தது : நன்னம்பிக்கை” என்னும் திரைப்படம். கம்பதாசன் எழுதியுள்ள “சூரியனும் ஒரு தொழிலாளி’ பாடல் இடம் பெற்றுள்ளது. இப்பாடலைத் தாமே இசையமைத்துப் பாடியுள்ளவர், இசைமேதை, எஸ்.வி. வெங்கட்ராமன்.

1. சூரியனும் ஒரு தொழிலாளி


சூரியனும் ஒரு தொழிலாளி - தினம்
சுற்றும் உலகும் தொழிஉலாளி
வாரி அலையும் தொழிலாளி - எதிர்
வந்திடும் காற்றும் தொழிலாளி
மாரி நதியும் தொழிலாளி
மலரும் உடுவும் தொழிலாளி
பாரை நடத்தும் தொழிலாளி - இனி
பரமனடா கலை பிரமனடா.

இவ்விதமாகக் கலைத்துறையைப் பிரமனாக்கிய ஒரே திரைத்துறைக் கலைஞன் கம்பதாசன் ஒருவரே!

கம்பதாசன் திரைப்படப் பாடல்கள்,சிலோன் விஜயேந்திரன் எம்.ஏ..டி.லிட்.

மருதா

10, ரயில்வே ஸ்டேஷன் ரோடு,

எடமலைப்பட்டி புதூர்

திருச்சி - 620 012

132 பக்கங்கள் 40/- ரூபாய்

Socializer Widget By Blogger Yard
SOCIALIZE IT →
FOLLOW US →
SHARE IT →

0 comments:

Post a Comment