பெயர் மற்றும் இமெயில் கொடுத்து உறுப்பினராகலாம்.!

We'll not spam mate! We promise.

Thursday, September 18, 2014

சிலோன் விஜயேந்திரன் 1946 -2004



சிலோன் விஜயேந்திரன் (1946 - ஆகத்து 2004) ஈழத்து எழுத்தாளரும்,கவிஞரும், நாடக, மற்றும் திரைப்படத் துணை நடிகரும் ஆவார்.

நடிப்பாற்றலில் சிறந்து விளங்கிய விஜயேந்திரன் ஆசுகவி கல்லடி வேலுப்பிள்ளையின் பேரன் ஆவார். தந்தை சைவ சமயத்தவர், தாயார் மதுரையைச் சேர்ந்த கிறித்தவர், மனைவி இசுலாமியர். இவர் சில காலம் இசுலாமிய மதத்தினைத் தழுவி இசுலாமியராகவும் வாழ்ந்தார்.

 கல்லடியாரைப் போலவே விஜயேந்திரனும் நினைத்தவுடன் கவி இயற்றுவதிலும் வல்லவராகத் திகழ்ந்தவர். தமிழ்நாட்டில் வாழ்ந்தபோது கலையுலகத் தொடர்பினால் சிலோன் விஜயேந்திரன் என அழைக்கப்பட்டவர்.

நடிகர் சிவாஜி கணேசன் உட்பட முன்னணிக் கதாநாயகர்கள் பலருடன் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். இவரது முதல் திரைப்படம் பைலட் பிரேம்நாத். 77 திரைப்படங்களில் துணை வேடங்களில் தோன்றியுள்ளார்.

சிலோன் விஜயேந்திரன் நடிப்புத் தொழிலை விட்டு எழுத்துத் துறைக்கு முழுமூச்சாக வந்தார். தமிழகத்தின் மூத்த பதிப்பகங்கள் ஆதரவு கொடுத்தன. கழகம், பாரி, மணிவாசகர், அல்லயன்ஸ், கண்ணதாசன், கலைஞன் என அவருக்குப் பலர் ஆதரவு கொடுத்தனர். கவிஞர் கம்பதாசனை ஆய்வு செய்து நூல்கள் எழுதினார்.

சிலோன் விஜயேந்திரன் இராஜீவ் காந்தி கொலை விசாரணை தொடர்பாகச் சைதாப்பேட்டைச் சிறையில் ஓராண்டைக் கழித்தவர்]. 2004, ஆகத்து 26 ஆம் நாள் திருவல்லிக்கேணியில் இடம்பெற்ற ஒரு தீவிபத்தில் படுகாயமடைந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் தனது 58வது அகவையில் காலமானார்.

எழுதிய நூல்கள்

Noolaham.gif தளத்தில்  சிலோன் விஜயேந்திரன் எழுதிய நூல்கள் உள்ளன.

ஈழத்துக் கலை இலக்கிய நினைவுகள்

விஜயேந்திரன் கவிதைகள் (1968)

அவள் ( நாவல்) (1968)

அண்ணா என்றொரு மானிடன் (1969)

செளந்தர்ய பூஜை (சிறு கதைகள்)(1970)

பிரேம தியானம் (வசன காவியம்) (1971)

ஆசுகவி கல்லடி வேலுப்பிள்ளை (வரலாறு) (1973)

விஜயேந்திரன் கதைகள் (1975)

பாரதி வரலாற்று நாடகம் (1982)

நேசக் குயில் (கவிதைகள்) (1984)

உலக நடிகர்களும் நடிகமேதை சிவாஜியும் (1985)

கவிஞர் கம்பதாசன் வாழ்வும் பணியும் (1986)

சிலோன் விஜயேந்திரன் கவிதைகள் (பாகம் 2) (1990)

ஈழத்துக் கவிதை விமர்சனம் (1992)

மூன்று கவிதைகள் (1993)

சிலோன் விஜயேந்திரன் கவிதைகள் (பாகம் 3) (1994)

இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த கவிஞர்களும் கவிதைகளும் (1994)

அல்லாஹு அக்பர் (1996)

தொகுத்த நூல்கள்

கல்லடிவேலன் நகைச்சுவை கதைகள் (1987)

கம்பதாசன் கவிதைத் திரட்டு (1987)

கம்பதாசன் திரை இசைப்பாடள்கள் (1987)

கம்பதாசன் காவியஙள் (1987)

கம்பதாசன் சிறுகதைகள் (1988)

கம்பதாசன் நாடகங்கள் (1988)

கம்பதாசன் கவிதா நுட்பங்கள் (1997)

கலைஞர் திரை இசைப் பாடல்கள் (1988)

ஈழத்துக் கவிதைக் கனிகள் (1990)

அறுபது காலத் திரைப்பாடல்களும் பாடலாசிரியர்களும் (1992)

நடித்த திரைப்படங்கள்

பைலட் பிரேம்நாத்

புன்னகை மன்னன்

பொல்லாதவன்

http://ta.wikipedia.org/s/ya5

Socializer Widget By Blogger Yard
SOCIALIZE IT →
FOLLOW US →
SHARE IT →

0 comments:

Post a Comment