பெயர் மற்றும் இமெயில் கொடுத்து உறுப்பினராகலாம்.!

We'll not spam mate! We promise.

Showing posts with label பாடல்கள்;. Show all posts
Showing posts with label பாடல்கள்;. Show all posts

Saturday, October 25, 2014

பெட்டகம்: யாப்பை மறந்த தமிழருக்கு ‘யாப்பதிகாரம்’


திராவிட இயக்கத்தின் முக்கியமான படைப்பாளிகளின் ஒருவர் புலவர் குழந்தை. இவர் எழுதிய ராவண காவியத்தை மறக்க முடியுமா? மரபிலக் கியத்திலும் மரபிலக்கிய வடிவங்களிலும் ஆழ்ந்த பரிச்சயம் உடையவர் குழந்தை. அவர் எழுதிய உரைநடை நூல்களுள் மிக முக்கியமானது ‘யாப் பதிகாரம்’. 20-ம் நூற்றாண்டின் மத்தியில் தமிழ்க் கவிதை அநேகமாக யாப்பைத் துறந்துவிட்டது. புலவர் குழந்தை போன்ற ஒருசிலர்தான் முழு மூச்சாக யாப்பில் எழுதிக்கொண்டிருந்தார்கள். புலவர் குழந்தையின் ‘யாப்பதிகாரம்’ நூலைப் படிக்கும்போது பல தகவல்கள் நமக்குக் கிடைக்கின்றன.

யாப்பு என்றால் என்ன என்று நம்மில் யாராவது ஒருவருக்கு எப்போதாவது கேள்வி எழுந்தால் அணுகுவதற்குச் சரியான நூல் ‘யாப்பதிகாரம்’. ஒவ்வொரு யாப்பு வடிவமும் அதன் உள்வடிவங்களும் இலக்கியங்களிலிருந்து சரியான எடுத்துக்காட்டுக்களுடன் எளிமையாக விளக்கப்பட்டிருக்கின்றன. இன்றளவும் ஈர்க்கும் நூல் ‘யாப்பதிகாரம்’.


நன்றி :- தி இந்து

Wednesday, October 15, 2014

கம்பர் ஆரம்பித்து ஒளவையார் முடித்து வைத்த பாடல் !

அம்பர் என்றொரு கிராமம். அங்கு வாழ்ந்து வந்தாள் சிலம்பி என்றொருத்தி. அவளிடம் 500  பொன்பெற்றுக்  கம்பர்  இருவரிகளை  மட்டும்  பாடிச்சென்றார்.
 
தண்ணீரும்  காவிரியே  தார்வேந்தன்  சோழனே
மண்ணாவதுஞ்  சோழ  மண்டலமே  - என்று பாடிவிட்டுச் சென்று விட்டார்.
 
 
பின்னர்  அங்கு வருகை புரிந்த ஒளவையார் மீதி இரு  வரிகளைப்  பாடி பாடலை  முடித்து  வைத்தார்.
 
---பெண்ணானவள்
அம்பொற் சிலம்பி  யரவிந்தத்  தாளணியுஞ்
செம்பொற்  சிலம்பே  சிலம்பு.
 
முழுப்பாடல் :- 

தண்ணீரும்  காவிரியே  தார்வேந்தன்  சோழனே
மண்ணாவ  துஞ்சோழ  மண்டலமே  -  பெண்ணாவாள்
 அம்பொற் சிலம்பி  யரவிந்தத்  தாளணியுஞ்
செம்பொற்  சிலம்பே  சிலம்பு.
 
பொருள் :-

வற்றாதது காவிரி  ஆறு. சோழமன்னனே  மன்னருள்  சிறந்தோன்.  சோழநாடே நிலவளம் மிகுந்தது. அம்பர் என்னும்  கிராமத்தில்  வாழும் சிலம்பியே பெண் என்று சொல்லத்தக்கவள் ஆவாள்.

Wednesday, October 8, 2014

உண்மைக்கு என்றும் மதிப்புண்டு ! - பாவலரேறு பெருஞ்சித்திரனார்


உண்மைக்  கென்றும்

மதிப்புண்டு,  நல்ல

உழைப்புக்  கென்றும்

விளைவுண்டு!

திண்மைக்  கென்றும்

துணிவுண்டு,  மனத்

தெளிவுக்  கன்பின்

கனிவுண்டு !


பொறுமைக்  கென்றும்

வழியுண்டு,  உளப்

பொறாமைக்  கென்றும்

நலிவுண்டு !

வெறுமைக்  கென்றும்

இழிவுண்டு ! ,  நல்ல  

விளைவுக்  கென்றும்

புகழுண்டு ! 

----------------------------------------------------
என்றும்  தமிழாய்  வாழும்

பாவலரேறு  பெருஞ்சித்திரனார்

கனிச்சாறு  - தொகுதி - 5

தென்மொழி  பதிப்பகம்

மேடவாக்கம்  கூட்டுச்சாலை

மேடவாக்கம்,  சென்னை  -  600 100
-------------------------------------------------------
94444  40449



அறிவறியத் துடிப்தெதோ அதுதனைவாழ்த் துவமே ! - பாவலரரேறு பெருஞ்சித்திரனார்

விரிவிசும்பைச்  செங்கதிரை  விண்மீனை  நிலவை

வெப்பவொளி  மண்டிலத்தை  விளங்கருபாழ்  வெளியை,

எரிவளியைத்  தீப்புனலை  இருநிலத்தை, நிலமேல்

ஏந்துகின்ற  நுண்னுயிரை  இயங்குநிலைத்  திணையை,

திரிதருமென்  புள்ளினத்தைத்  திறல்விலங்கை  நீரில்

தேங்குறுமீன்  கூட்டத்தைத்  தெருள்மாந்த  வினத்தைப்

புரிமனத்தைப்  பெருநினைவைப்[  பொருள்செறிந்த  தமிழைப்

பொலப்படுத்துந்  திறலெதுதுவோ  புலனுறவாழ்த்  துவமெ!


தமிழாருஞ்  செம்பொருளைத்  தவிர்தலிலா  முதலைத்

தாயாருக்குந்  தாயாகித்  தனித்திருக்கும்  மெய்யைக்

குமிழாரும்  உயிர்ப்புனலைக் கூட்டுவிக்கும் நெறியைக்

கோதில்லா  நல்லுணர்விற்  குமிழ்த்தெழுமெய்க்  கூத்தைச்

சிமிழாரும்  இமைவிழிக்குள்  சிறுபாவைக்  குள்ளே

சிதரொளியைக்  குவிக்குமொரு  செயலறுத்த   செயலை

அமிழாதெம்  நன்னெஞ்சம்  அங்காந்த  தாகி

அறிவறியத்  துடிப்தெதோ  அதுதனைவாழ்த்  துவமே !  


கனிச்சாறு  -  6  -வது  தொகுதி

தென்மொழி  பதிப்பகம்

மேடவாக்கம்  கூட்டுச்சாலை,

மேடவாக்கம்,  சென்னை - 600 100.
---------------------------------------------------------
94444  40449




  

Tuesday, October 7, 2014

மற்றை இனத்தார்க்கே மண்டியிடான்; மணியிட்டால் ?

 


ஒற்றைத்  தமிழ்மகன்  உள்ளவரை,  உள்ளத்தே

அற்றைத்  தமிழ்த்தாயிங்  காட்சி  புரியும்வரை,

எற்றைக்கும்,  எந்நிலத்தும்,  எந்த  நிலையிலும்

மற்றை  இனத்தார்க்கே  மண்டியிடான்;  மணியிட்டால்

பெற்றவர்மேல்  ஐயம்;  பிறப்பின்மேல்  ஐயமெனச்

சற்றும்  தயக்கமின்றிச்  சாற்று !


நன்றி :-

கனிச்சாறு -  தொகுதி -3

தென்மொழி  பதிப்பகம்

மேடவாக்கம்  கூட்டுச்சாலை,

சென்னை - 600 100
---------------------------
94444  40449
 

என்ன பயன், என எண்ணிப் பார்க்கிலேன் ! - பாவலரேறு பெருஞ்சித்திரனார்

 

எழுதி  எழுதிச்  செல்கின்  றேன்,  நான் !
என்ன  பயன்,  என  எண்ணிப்  பார்க்கிலேன்!
உழுது  விதைத்தவை  ஒருநாள்  விளையுமோ?
ஊமை  விதைகளாய்ச்  சாவியாய்  ஒழியுமோ?
புழுதியுள்  மறையுமோ?  பூக்களாய்  மறையுமோ?
அழுகியும்  உலுத்தும்  அமுங்கிப்  போகுமோ?
பழுதென்  றுரைத்து,  அவை  பழித்திடப்  படுமோ?
தொழுதொ  போற்றுமோர்  காலந்  தோன்றுமோ?
துயரச்  சுமைக்கொரு  தூண்என  நிற்குமோ?

பசித்த  அறிவினால்  புசித்திடு  வார்களோ?
பரபரப்  புணர்வொடு  கொறித்திடு  வார்களோ?
விசித்து  விசித்து,  நான்  அழுத  அழுகையும்
விடிய  விடிய,  நான்  வடித்த  கண்ணீரும்,
மக்கள்  இனத்தின்  கடைசி  மாந்தனின்
ஒக்க  அழுகையோ  டொன்றாய்  இணையுமோ?
ஒழுகுகண்  ணீரோ(டு)  ஓடிக்  கலக்குமோ?
என்ன  பயன்,  என  எண்ணிப்  பார்க்கிலேன் !    

நன்றி :-

கனிச்சாறு  - தொகுதி 7

தென்மொழிப் பதிப்பகம்

மேடவாக்கம் கூட்டுச்சாலை

சென்னை- 600 100
---------------------------
94444 40449

Friday, October 3, 2014

யாழ்ப்பாணத்திலிருந்து 12 - கடவுளர் + அடைக்கலச் சிந்து + குருவிச் சிந்துப் பாடல்கள்

SINDHU (GOD GREETING SONG), சிந்து

The songs mention as “Sindhu” mostly greets the gods. People’s life & religious believes are depends on one to another. The peoples start their all activities with the religious prayers. The sindhu songs greet the god, describe about them and in between them it says about the agriculture & the animals, which are helpful to their activities.

Not only the sindhu sings on God pillayar, God shiva & God murugan, but also it sings on Amman, Naaga thambiran, Iyanaar, Viruman, Veera paththiran, Krishna, Vathanamaar & Annamaar. More than these Pancha paadavar sindhu, the historical very important Kuzhakoaddan sindhu, Kuruvi sindhu & Pandaara vanniyan sindhu also come in this category, and they are used as harvesting song.

“Murugaiyan sindhu” links the harvesting activity with the God kandhaswamy, who is in Nallainagar. In these songs, it has some songs notes about Vallipura maayon & Nallainagar velon.

Amman sindhu describes about amman, who is in Vattapazhai temple. It says the history about her, her miracles & how she comes to that place after the very big displacements.

“Silambukooral / Kovalanaar kadhai” are now also in written form. It is different from “Silappathikaaram”. In “Silappathikaaram” the human lady respect as god. But in “Silambukooral”, the god Umathaeviyaar describes as “Kannagi”. In Hindu tradition, there is a restriction to worship a human lady as a god. So, to compromise this problem “Silambukooral & Amman sindhu” has been risen.

Naachimaar prayer is famous in Mullaitivu. In Naachimaar sindhu, it mentions the history of Naachimaar temple in “Vaddu vaahal”.

“Naagathambiran sindhu” is also famous in Mullaitivu.

The god, who is protecting the soul, is called as Annamaar. The song sings on this god is called as “Annamaar sindhu”.

“Vadhanamaar sindhu” says the birth of Vadhanamaar. A lady prays to god Thirumaal to give a child. Due to that she gets 100 Vadhanamaar. The Vadhanamaar sindhu says them as young soldiers. The last song of the Vadhanamaar sindhu greets & thanks to Maayavan, The kandy king Thambalakaamanaathar & the head of Vathanamaar. Some records have mentioned, that these songs may be sung by a person belongs to east Sri Lanka.

Now, we can be noticed the main lyrics of “Sindhu” songs. These songs were taken from a written copy, which is written by Velupillai kanapathipillai, he is belongs to Puthukudiyiruppu, on 1959 by using a ancient written copies.




01.பிள்ளையார் சிந்து (PILLAYAR SINDHU)


வீசுகரமேக நிற வேதநுதலான் கருணே

மேவுமதவாரண வினாயக வினோத

கூறு தமிழ்சேர் முதலி கோமளவள்ளிக்கிளைய

குஞ்சு மதனைக் கிளைய குஞ்சரமுகத்தோன்

பேசுதிசை மேருவிடை பாரதமார் கெடு

சேமமறவே யெழுது சேர்கருணையாலே

பேசுதிகளுன் கதைகளிசை பாடுதற்குமொரு

பிழைகள் வாராமலே கார் பேளை வயிறானே




02.பரமசிவன் சிந்து (PARAMAN SINDHU)


நாவியும் கீரியும் துளையாத குருமண்ணில்

நாங்கள் நுளைந்து குறும்பொல்லு வெட்டி

பொல்லு நல்ல பொல்லு இது வௌ;ளிகட்டிய பொல்லு

மதியாமல் வாறவரை மட்டடக்கும் பொல்லு

எண்ணமுள்ள பொல்லு இது எதிர் ஏறு பொல்லு

ஏழையடியார்களை ஈடேற்றும் பொல்லு

வண்ணமுள்ள பொல்லு இது வரிசையுள்ள பொல்லு

மதியாமல் வாறவரை மட்டடக்கும் பொல்லு

காச்சி நிமிர்த் கதிர் கோடணல்வாங்கி

காவலுக் கென்று கருதி நடந்து

கூள வெடியாம் குளிர்ந்த இணலாம்

குளக்கட்டு நீளம் புளியம் இணலாம்

ஆரடா எந்தன் புளியடி தன்னில்





03.முருகையன் சிந்து (MURUGAIYAN SINDHU)


கரியதொரு விறுமனும் வைகாளி அப்பரும்

கஞ்ச வீரபத்திரரும் யாப்பை வன்னியரும்

குருபரன் ஆறுமுகக் குமாரவேலாயுதன்

குன்றுதைக் குறமகள் வள்ளிபங்காளன்

முருகர் முள்ளியவளைக் கலியான வேலரை

முதல்வனைச் சேவிக்க முழுதும் வந்தனரே

பொன்னினாலே பூனைநுhல் பின் குடுமியும்

பொழுது விளையாட நல்ல வேலுஞ் சிலம்பும்

என்னாயனோ யெனதன் நாவுக்கு அரசே

எந்த வினை தீர்க்க வந்த வள்ளி மணவாளா

உன்னாமமே சொல்லி ஓதுமடியாற்கு

ஒரு நொடியில் மயில் ஏறி வரவேணும் முருகா


04.நாகதம்பிரான் சிந்து (NAAGATHAMBIRAN SINDHU)


வாசுவுடனே சேடன் வாதாடிநின்றான்

மகா மேடு தன்னைப் படத்தால் மறைத்தாய்

கூசுபுனல் வாயுவின் கோபம் பெறாமலே

கொடு முடிகள் சிதற நின்றலை பொருத நேரம்

வீசு புகழ் ஈசனரும் சந்தோஷமாகி

நீராவினார் படந்தாழ்தனை ஒதுக்கி

நீடு புகழ் சேடன் என நின்ற நாயகமே

நீர் தங்கு வேணாவில் நாக நயினாரே

ஆயனார்க் கன்று நீ பாஷமும் ஆனாய்

அன்று நீர் பாதாளமூடு வளி சென்றாய்

ஈசனார் உறைகின்ற தில்லையின் மீதே

இயல்வாகவே நடந்து கொண்டு வந்தாயே நயினாரே





05.ஐயனார் சிந்து (IYANAAR SINDHU)



வண்ணமிகு பொன்னின் வரத்தியைச் சூடி

வாகான நெற்றியிற் பொட்டுகளுமிட்டு

பொன்னின் நுhல் மார்பில் சங்கிலி பதக்கம்

பொருந்து நல்ல வாகுபுரி முன்கை வளை கொச்சை

இன்னமும் பல பல மாலைகள் அணிந்து

இடையிலே யருகு மணி கெச்சை சிலம்பு

அன்னமுஞ் சொர்னமும் என்னுமுள்ளபெருகு

ஆதி சடவக்கங்குளம் வாழுமையனாரே





06.அண்ணமார் சிந்து (ANNAMAAR SINDHU)


அய்யனார் தன்னுடைய திருவருளினாலும்

அலங்கார வைகாளி அப்பனருளாலும்

மெய்யாக வெற்றிதரு மெய்க்கிட்டினராலும்

மிக்கதோர் நல்ல நயினார் பணிக்கனாலும்

அய்யா எனப் பெரிய வாளல கொடுத்து

அகல நின்றுயிர் காக்கும் அண்ணமாற்கபயம்

கோர்த்த மணிமாலையாங்குங்குமப் பொட்டாம்

கோலமுடனே நல்ல பொல்லுடன் கயிறும்

பார்த்த பொழுதெல்லாம் படிநடை நடத்தி

பதினாயிரம் பொலி பறித்தவனும் நீயே

மாத்தலன் தன்நகர் வாள வந்தண்ணமார்

மலரடிகள் பொற்பதம் மனதிலயரலாமே



07.கிருட்டிணன் சிந்து (KIRUDDINAN SINDHU)



சுருதி மொழிதவறாத மனுநீதி மன்னன்

சோளனுதவுஞ் சோள கங்காள கண்டன்

பருதிகுல மன்னன் குளக்கோட்டு ராசன்

பண்டு பூதப் படைகள் கொண்டு சென்றனரே

கருதரிய கல்லு மண்ணும் சுமப்பித்து

கடலும்மலையும் போலவே குளங்கட்டி

வருஷமிரு சென்னல் விளையாப் பன்னிரண்டு

மாதமும் புனல்பாய் மாதவு செய்தனரே



 08.விறுமன் சிந்து (VIRUMAN SINDHU)



பாரினில் மளுப்படை வெளுக்கயிறு சூலம்

பட்டைய மிருப்ப வளை தடி கொண்டு சாட

பிரியமுடனே கரு மீசையை முறுக்கி

வெறி கொண்டமதகரியை வெண்டு காடேறி

ஏறுமலர் மேவு சடவக்கங்குளம் வாளவரு

இயல்வான விறுமனுடை திருநாமமயரோமே





09.வயிரவன் சிந்து (VAYIRAVAN SINDHU)



கைதனிற் பொக்கணங்கஞ் சுளிகமண்டலம்

காவி துயிலாடை கைத் தண்டையுடனே

மெங்கனி திறந்து சிவமணித் தாவடம்

வீமக்க பால மொருகர மீதி லேந்தி

பைந்தலை முர்ந்தலை சூலம் தரித்தாகும்

வயிரவரை மறவாத மதுரை நாயகனே

வயிரமது கொண்டாட முகடா விழுந்து

மாறாத நிழல்மருப் பெங்கும் பரந்து

தயிருடன் கரையொடு கட்டுனற் நாதனார்

தாமென்ன வழர் பூதர் தாத்தினிழல் மேவும்

சேலுண்டு பரிவினுடன் தேவதைகள் நின்று

திந்தோமெனவே நடம் புரிந்திடச் சென்னல்

பயிர்கொண்டு விளையுமுறிப்பில் குளத்திலுறைகின்ற

பகவானே திரிசூலிபாணி தன் மகனே



10.வதனமார் சிந்து (VATHANAMAAR SINDHU)



கங்கை அணியுஞ் சடில மீதினிலிங்க

கருணை பெறவே வந்த கஞ்ச மலர் கண்ணன்

செங்கை நெடுமால் திருமங்கவர் பதத்தை

தெண்டனிட்ட நல்ல சிந்து கவிபாட

பங்கயமென்னும் புரவி நாவில் விளையாட

பவளவாய் செல்வியும் பண்ணுதமிழ் மாதுவும்

வெங்கரிமுகன் பிள்ளை வெம்பிறைக் கோடுடைய

விக்னேஸ்பரன் பாதம் நித்தமயரோமே





11.வீரபத்திரன் சிந்து (VEERAPATHTHIRAN SINDHU)



பார் நடுங்கப் பரமாரதிபர் நடுங்கப்

பங்கயத்தனுமாலு மும்மது நடுங்க

பார் நடுங்கப் பெரிய கரி முகன் நடுங்க

பிந்தி வரு கந்த வேள்மும்மதன் நடுங்க

பார் நடுங்கப் பெரியதக்கனார் வேள்வியில்

பொருதளித்தே யாதி உருவாகி நின்றாய்

சீர் நடுங்கப் புவியில் வந்தவதரித்தாய்

செல்வனே கல்யாண வீரபத்திரனே





12.அம்மன் சிந்து (AMMAN SINDHU)



திரு மருவு கயிலாய மலைதனில் நிலவு புனை

சிவனுமுமையவளு மொரு சிங்காசனத்தில்

மருவும் பொளுது உமையவள் எழுந்தடிபணிந்து

வள்ளலே மதுரை நகர் வந்ததமிழ் மாறன்

வெருவுதலில்லாமலே யவர் மனதில் விளிகண்டு

வெட்கினேனென்று துயர் விடையகலுமென்றார்

தருமருவு மீதளித்தண்டிங்கே தானும்

தையலுன் மனநினைவுதவ முயலுமென்றார்

என்ற பணிவிடை கொண்டு கயிலையங்கிரி நின்று

துண்டு மிண்டின கொடிய கணிதி நிதமும் வளுதி

சூது மாவின் கனியிலே யுறைந்ததனால்

அண்டுமா போதனற்க் கெண்டருளிதன்வளுதி

இனிய மறை நுதலின் விளிதனை மறைத்ததுவே

தவமனைய துதலின் விளிமதிய மறலை வளுதி

தன் கையில் நற்கணிதனைக் கொடுநடந்து

நவ மணிகளுமொரு பேளையில் அடைத்து

நடு விலும் மூடிவைத்தந்த நாளுறைந்தாயே





13.அடைக்கலச் சிந்து (ADAIKALACH SINDHU)



பொன்னே மணிவிளக்கே புருடராகமே

பொதுவர் குல நாயகியே பொற்கொடியே

அன்னே தவமே அறத்தின் பயனே

அடைந்தவர் தமக்குதவும் ஆருயிற்துணையே

மின்னேர் பசும் பொற் சிலம்புதனையான் கொண்டு

வெற்றி மதுராபுரியில் விற்று வருமளவும்

தென்னேரிதளதங்கு வார்குழல் கண்ணகை

தேனாகி அமுதாகியினியதொரு பாலாகி

செல்வப் பெருஞ் செல்வமாய் உங்களுக்கு

ஊனாகி உயிராகி உயர்வாகி ஆயர் குலம்

ஓளியாகி வெளியாகி நின்ற ஓவியமே

மானார் சமைப்பித்த கனகச்சிலம்பை

வளுதி மதுராபுரியில் வித்து வருமளவும்

கானாருமாலைக் கனங்குழல் என்கின்ற

கண்ணகை உந்தனடைக்கலம் தானே





14.குருவிச் சிந்து (KURUVICH SINDHU)



பூதலம் புகழ் பெருகு தனிக்கல் வயல்தன்னில்

புனைக்குருவி வாராமலே காவல் செய்வாய்

ஆதலம் புகழும் பாவினிசை பாட

ஐங்கரனும் ஆறுமுகனும் அம்மனுந்துணையே

நாதமொடுகீதமும் ஓது நான்மறைகளும்

நாலுலகுமொன்றாக நின்ற உமையவளே

மாதவன் தந்திருவின் மாமகளின் நாமகளும்

வந்துதவ அனுதினமும் சிந்தனை செய்வோமே


About us


SIYAPATHA is a group ,which is mainly focused on to find out the various folk songs in the Sri Lanka among all races.From that we keen to find out more details of folk songs which are distributed in Wayamba province.This is a part of our work which is done under the course unit of  LFN  1 X 10 ,Social Harmony & Conflict Resolution of the faculty of Livestock Fisheries & Nutrition of Wayamba university of Sri Lanka.


OBJECTIVES

.         To identify different types of folk songs and how they have related to the religion, cultural festivals, and occupations of the folk.

·         To identify folk songs available in different races, and how they have interconnected to the day to day life of the population in different regions.

·         To aware the relationship and similarities available in folk songs of different races.

·         To make familiarize the university students about different kinds of folk songs.






Faculty of Livestock Fisheries & Nutrition:-

Wayamba University of Sri Lanka

Makandura

Tel: 031-2299429 / 3399870

Fax: 031-2299870

e mail: flfn@mkd.wyb.ac.lk

Web: http://www.wyb.ac.lk/mkdr/flfn/index.html

SIYAPATHA Group leader:-

Tel: 075-7967716

e mail: gayanwindana@gmail.com

Follow us in Facebook:  http://www.facebook.com/pages/Siyapatha/247044525415909

நன்றி :-http://siyapatha.weebly.com/297030072984302129803009.html


சிந்துப் பாடல்களை எல்லாம் தொகுக்க வேண்டும் என்று
முயன்றபோது, கொக்குச் சிந்து, குருவிச் சிந்து, அம்மன் சிந்து ஆகியவை யாழ்ப்பாணத்தில் புகழ்வாய்ந்தவையாகத் திகழ்ந்து வருவதாக இணையத்தில் தகவல் கிடைத்தது.,  


தேடியபோது  SIYAPATHA குழுவினர்  இணையம் உதவிக்கு  வந்தது.  
ஆறுமுகமே  அறுவராக வந்து உதவியதாகக் கொண்டு அவர்களது  
பதிவினை அப்படியே  மீள்பதிவிடப்பட்டது.  ஓர்  யூகத்தின்
அடிப்படையில்  படங்கள் சேர்க்கப்பட்டுள்ளன..சரிப்படுத்துவோம்.


சிந்து இலக்கியங்கள் அனைத்தையும் ஒருங்கிணைத்து நூலாக்குவது
நமது கடமை.  ஏனெனில், பண்டிதருக்கே  சொந்தமாக  இருந்த தமிழை 
தெருக்கூத்து  மற்றும்  நாடோடிப் பாடல்களுக்குப்பின்  பாமரர்களுக்குச்  
சொந்தமாக்கியதில்  சிந்துப் பாடல்களுக்குப்  பெரும்  பங்குண்டு. 

சங்கர இராமசாமி, rssairam99@gmail.com
  




Thursday, October 2, 2014

என் தந்தை - நொண்டிச் சிந்து - மகாகவி பாரதியார்



பூமிக் கெனைய னுப்பி னான்; - அந்தப்
புதுமண்ட லத்திலென் தம்பிக ளுண்டு;
நேமித்த நெறிப்படி யே - இந்த
நெடுவெளி யெங்கணும் நித்தம் உருண்டே
போமித் தரைகளி லெல்லாம் - மனம்
போலவிருந் தாளுபவர் எங்க ளினத்தார்,
சாமி இவற்றினுக் கெல்லாம் - எங்க
தந்தையவன் சரிதைகள் சிறி துரைப்பேன்.

செல்வத்திற்கோர் குறையில்லை; - எந்தை
சேமித்து வைத்த பொன்னுக் களவொன் றில்லை;
கல்வியில் மிகச் சிறந்தோன் - அவன்
கவிதையின் இனிமையொர் கணக்கி லில்லை;
பல்வகை மாண்பி னிடையே - கொஞ்சம்
பயித்தியம் அடிக்கடி தோன்றுவ துண்டு;
நல்வழி செல்லு பவரை - மனம்
நையும்வரை சோதனைசெய் நடத்தை யுண்டு.

நாவு துணிகுவ தில்லை - உண்மை
நாமத்தை வெளிப்பட உரைப்பதற்கே;
யாவருந் தெரிந்திடவே - எங்கள்
ஈசனென்றும் கண்ணனென்றும் சொல்லுவதுண்டு.
மூவகைப் பெயர் புனைந்தே - அவன்
முகமறி யாதவர் சண்டைகள் செய்வார்;
தேவர் குலத்தவன் என்றே - அவன்
செய்திதெரி யாதவர் சிலருரைப்பார்.

பிறந்தது மறக் குலத்தில்; - அவன்
பேதமற வளர்ந்ததும் இடைக்குலத்தில்;
சிறந்தது பார்ப்பன ருள்ளே; - சில
செட்டிமக்க ளோடுமிகப் பழக்க முண்டு;
நிறந்தனிற் கருமை கொண்டான்; - அவன்
நேயமுறக் களிப்பது பொன்னிறப் பெண்கள்!
துறந்த நடைக ளுடையான்; - உங்கள்
சூனியப்பொய்ச் சாத்திரங்கள் கண்டு நகைப்பான்.

ஏழைகளைத் தோழமை கொள்வான்; - செல்வம்
ஏறியார் தமைக்கண்டு சீறி விழுவான்;
தாழவருந் துன்ப மதிலும் - நெஞ்சத்
தளர்ச்சிகொள் ளாதவார்க்குச் செல்வ மளிப்பான்;
நாழிகைக்கொர் புத்தி யுடையான்; - ஒரு
நாளிருந்த படிமற்றொர் நாளினி லில்லை.
பாழிடத்தை நாடி யிருப்பான்; - பல
பாட்டினிலும் கதையிலும் நேரமழிப் பான்.

இன்பத்தை இனிதெனவும் - துன்பம்
இனிதில்லை யென்றுமவன் எண்ணுவ தில்லை;
அன்பு மிகவு முடையான்; - தெளிந்
தறிவினில் உயிர்க்குலம் ஏற்ற முறவே,
வன்புகள் பல புரிவான்; - ஒரு
மந்திரியுண் டெந்தைக்கு விதியென்பவன்;
முன்பு விதித்த தனையே - பின்பு
முறைப்படி அறிந்துண்ண மூட்டி விடுவான்.

வேதங்கள் கோத்து வைத்தான் - அந்த
வேதங்கள் மனிதர்தம் மொழியி லில்லை;
வேதங்க ளென்று புவியோர் - சொல்லும்
வெறுங்கதைத் திரளிலவ் வேதமில்லை;
வேதங்க ளென்றவற் றுள்ளே - அவன்
வேதத்திற் சிலசில கலந்ததுண்டு;
வேதங்க ளன்றி யொன்றில்லை - இந்த
மேதினி மாந்தர் சொலும் வார்த்தைக ளெல்லாம்.

நாலு குலங்கள் அமைத்தான்; - அதை
நாசமுறப் புரிந்தனர் மூடமனிதர்,
சீலம் அறிவு கருமம் - இவை
சிறந்தவர் குலத்தினில் சிறந்தவராம்;
மேலவர் கீழவ ரென்றே - வெறும்
வேடத்திற் பிறப்பினில் விதிப்பன வாம்
போலிச் சுவடியை யெல்லாம் - இன்று
பொசுக்கிவிட்டாலெவர்க்கும் நன்மையுண்டென்பான்.

வயது முதிர்ந்து விடினும் - எந்தை
வாலிபக் களையென்றும் மாறுவதில்லை;
துயரில்லை; மூப்பு மில்லை, - என்றும்
சோர்வில்லை; நோயொன்றும் தொடுவ தில்லை;
பயமில்லை, பரிவொன்றில்லை, - எவர்
பக்கமும்நின் றெதிர்ப்பக்கம் வாட்டுவ தில்லை
நயமிகத் தெரிந்தவன் காண்; - தனி
நடுநின்று விதிச்செயல் கண்டு மகிழ்வான்.

துன்பத்தில் நொந்து வருவோர் - தம்மைத்
தூவென் றிகழ்ந்து சொல்லி வன்பு கனிவான்;
அன்பினைக் கைக்கொள் என்பான்; - துன்பம்
அத்தனையும் அப்பொழுது தீர்ந்திடும் என்பான்;
என்புடை பட்ட பொழுதும் - நெஞ்சில்
ஏக்கமுறப் பொறுப்பவர் தம்மை உகப்பான்;
இன்பத்தை எண்ணு பவர்க்கே - என்றும்
இன்பமிகத் தருவதில் இன்ப முடையான்.

https://www.facebook.com/permalink.php?story_fbid=481539025202883&id=317657194924401

நொண்டிச் சிந்து - ஆசிரியர் : கவிஞர் பாரதிதாசன்.

கவிஞன் இவ்வா றுரைத்தான்-புவி
காப்பவன் இடியெனக் கனன்றுரைப்பான்:
'குவிந்த உன் உடற்சதையைப்-பல
கூறிட்டு நரிதின்னக் கொடுத்திடுவேன்.
தவந்தனில் ஈன்ற என்பெண்-மனம்
தாங்குவ தில்லையெனிற் கவலை யில்லை!
நவிலுமுன் பெரும்பிழைக்கெ-தக்க
ராசதண்டனையுண்டு! மாற்ற முண்டோ?

அரசனின் புதல்வி அவள்-எனில்
அயலவ னிடம்மனம் அடைதலுண்டோ?
சரச நிலையி லிருந்தீர்-அந்தத்
தையலும் நீயும்அத் தருணமதில்
இருவிழி யாற்பார்த்தேன்!-அறி
விலி, உனதொரு குடி அடியோடே
விரைவில்என் ஆட்சியிலே-ஒரு
வேர்இன்றிப் பெயர்த்திட விதித்துவிட்டேன்!'

'கொலைஞர்கள் வருக' என்றான்-அவன்
கூப்பிடு முன் வந்து கூடிவிட்டார்
'சிலையிடை இவனை வைத்தே-சிரச்
சேதம் புரிக' எனச் செப்பிடுமுனம்
மலையினைப் பிளந்திடும் ஓர்-சத்தம்
வந்தது! வந்தனள் அமுதவல்லி!
'இலை உனக் கதிகாரம்-அந்த
எழிலுடையான் பிழை இழைக்கவில்லை.

ஒருவனும் ஒருத்தியுமாய்-மனம்
உவந்திடில் பிழையென உரைப்பதுண்டோ?
அரசென ஒருசாதி-அதற்
கயலென வேறொரு சாதியுண்டோ?
கரிசன நால்வருணம்-தனைக்
காத்திடும் கருத்தெனில், இலக்கணந் தான்
தரும்படி அவனை இங்கே-நீ
தருவித்த வகையது சரிதா னோ?

என்மனம் காதலனைச்-சென்
றிழுத்தபின் னேஅவன் இணங்கின தால்
அன்னவன் பிழையிலனாம்! அதற்
கணங்கெனைத் தண்டித்தல் முறையெனினும்,
மன்னநின் ஒருமகள் நான்-எனை
வருத்திட உனக்கதிகாரமில்லை!
உன்குடிக் கூறிழைத்தான்-எனில்
ஊர்மக்கள் இடம்அதை உரைத்தல் கடன்!'

என்றபற் பலவார்த்தை-வான்
இடியென உரைத்துமின் னெனநகைத்தே
முன்னின்ற கொலைஞர் வசம்-நின்ற
முழுதுணர் கவிஞனைத்-தனதுயிரை
மென்மலர்க் கரத்தாலே-சென்று
மீட்டனள் வெடுக்கெனத் தாட்டிகத்தால்.
மன்னவன் இருவிழியும்-பொறி
வழங்கிட எழுந்தனன்; மொழிந்திடுவான்

எண்ணெய்ச் சிந்து - முற்றாகவும் கிடைக்கவில்லை; ஆசிரியர் பெயரும் தெரியவில்லை:

காப்பு
சீர்பூத்த தென்குடவை தேவி ஆனந்தவல்லி
பார்பூத்த செங்கமலப் பாதம் தனைப்போற்றி
1. சீர்பூத்த - சிறப்பு மிகுந்த
பார்பூத்த ... பாதம் - அன்னையின் திருவடி உலகின்
தோற்றத்திற்குக் காரணம் என்றபடி. "இருதாள் நிழற்கீழ்
மூவகை உலகும் முகிழ்த்தன"- ஐங்குறுநூறு
1


செப்பரிய எண்ணெய்ச் சிந்து தனைப்பாட
கற்பகக் கன்றான கணபதி காப்பாமே

2. கற்பகக் கன்று - அருள் வழங்கும் இளங்களிறு
2



வெள்ளைக் கலையாளே வெண்டா மரையாளே
தெள்ளரிய ஞானத் திரவியமே வந்துதவாய்
3

வீறுதரு சூரர்களை வென்றுலகைத் தானாண்ட
ஆறுமுகனே அடியாற்கு வந்துத வாய்
4

தெள்ளரிய எண்ணெய்ச் சிந்து தனைப்பாட
வள்ளி தெய்வானை மலரடியே காப்பாமே 
5

கடவுள் வாழ்த்து

பனிமதிச் சடையாள் ஈசன் பரமனார் பாதம் போற்றி
கனியிதழ் உமையாள் சோதி காரணி தன்னை வாழ்த்தி
6. காரணி - காரணமானவள்
6

புனிதமாம் எண்ணெய்ச் சிந்தைப் புவிமிசை பாடுதற்குத்
தனியொரு கடவுளான தந்தியைச் சிந்தை செய்வோம்
7. கடவுளான தந்தி - ஆனை முகக் கடவுள்
7

அடிமுடி இல்லான் பின்னும் யாவையும் படைத்தோன் என்றும்
படிநமக் களக்கும் ஈசன் பரமனார் கிருபை யாலே
8

மடிதனில் அமிர்த மூட்டி வளர்த்தாய் மனதி ரங்கி
சடுதியில் அனுப்பு மம்மா சரணம் சரணம் தாயே
9. மடிதனில் - கருவறையில்; சடுதியில் - விரைவில்
9

வேறு

மண்ணுலகும் விண்ணுலகும் மற்றும் புவிவாழ்க
எண்ணும் புவியில் இருநிதியம்தான் பெருக
10. இருநிதியம் - பெருஞ்செல்வம்
10

கோதில்லா ஞானக் குருதே சிகனருளால்
தீதில்லா எண்ணெய்ச் சிந்துதனைப் பாடுகிறேன்
11. கோது - குற்றம்
11

ஒன்றுமில்லாக் காலம் உலகம் யாவும் படைத்து
இன்றுநமை நடத்தும் ஏகன் திருவருளால்
12. ஒன்றுமில்லாக் காலம் - மகா சங்காரகாலம், கடையூழிக்காலம்
ஏகன் - ஒப்பற்ற ஒருவன் (ஏகன் அநேகன் - திருவாசகம்)
11

முட்டைக் கருவால் முடிந்து புவிதனிலே
விட்டஇறை யோன்இரக்கம் விள்ளமுடியாது
13. இறையோன் இரக்கம் - உலகினைப் படைத்த தனிப்பெருங்கருணை
13

எட்டாது புத்திதன்னால் பாவிக்கக் கூடாது
சட்டமெமைப் படைத்த சுவாமி கிருபையதால்
14. பாவிக்கக் கூடாது - பாவனைக்கு எட்டாது, நினைப்பரிது
சட்டமெனப் படைத்த என்றும் பாடம்
14

திட்டமதாய்ச் சூழுகின்ற தீவினைக்கெல் லாம்பிழைத்து
சட்டமாய் இப்போ தமிழறியும் காலமதில்
15. சட்டமாய் - சட்டம் - செப்பம்.
சட்ட - செப்பம் உணர்த்த நின்ற தோர் இடைச்சொல்
அது சட்டம் என மருவியது. (சிவஞானமுனிவர்)
15

துட்டத் தனம்போக சூதுவஞ் சனையகல
பட்டமரம் தனிலே பச்சைத்தளிர் ஆனாற்போல
16

ஆவ லுடனே அண்ணாவி தன்னிடத்தில்
பாவ புண்ணிய மறியப்பள்ளிக்கு வைத்ததுவும்
17. அண்ணாவி - கூத்து முதலியன பழக்குவோர் -
இங்கு எழுத்தறிவிக்கும் ஆசிரியரைக் குறித்தது
பள்ளிக்கு வைத்தல் - பள்ளிக்கு அனுப்பல்
17

அண்ணாவி தாமும் அறிவித்த ஞானமது
நண்ணாகச் சொல்லுகிறேன் நாட்டிலெந்தன் மாதாவே
18

மண்ணும் புவியில் மணவாளனும் மாதும்
மின்னதிகச் செல்வம் மிகவாழ்ந் திருக்கையிலே
19. மணவாளன் - கணவன்
19

புத்திரனே வேணுமென்று புண்ணியம்செய் யத்துணிந்து
சத்திரங்கள் அம்பலங்கள் சாலை மடங்கள்செய்து
20. சத்திரம் - தங்கும் இலவசக் கூடம்
அம்பலம் - மன்றம்; சாலை - உணவிடுமிடம்
20

ஆதித்த வாரம் வாசி ஆதரித்து
நீதியுடன் தானதவம் நேராக வேபுரிய
21. ஆதித்த வாரம் - ஞாயிறு; வாசி - மூச்சோட்டம்
21

கண்டு சிவனார் கருணை மிகவிரங்கி
தொண்டு மிகச்செய்த தோகையாள் தன்வயத்தில்
22. வயத்தில் - வயிற்றில்
22

சற்புத் திரனாகத் தானருளிச் செய்தனராம்
விற்புருவ மாதுநல்லாள் மேன்மையுடன் பெற்றெடுத்த
23. சற்புத்திரனாக - உயர்ந்த மகனாக
23

வல்ல பிறையும் வளரும் வகைபோல்
செல்லக் குமரனையும் சீக்கிர மாய்வளர்த்து
24

பண்ணு தமிழைப் படிப்பிக்க வேணு மென்று
மன்னவனும் தேவியுமாய் மனதில் மிகநினைந்து
25. பண்ணு - ஓசை
25

காலுக்குத் தண்டை கழுத்துக்குக் காறையுடன்
கோலவர்ணச் சோமனையும் கொய்து மிகவுடுத்தி
26. காறை - கழுத்தணியுள் ஒன்று; சோமன் - வேட்டி
கொய்து - கொசுவி, மடித்து
26

வீரச்ச தங்கை விரலுக்கு மோதிரமும்
ஆரமிகப் பூட்டி அன்பாய் அலங்கரித்து
27. ஆரம் - மாலை
27

திரிபுண்ட ரீகத் திருநீறும் தான்பூசி
வெறிமாலை சுற்றி விளங்கு திலகமிட்டு
28. திரிபுண்ட ரீகம் - திரி புண்டரம், மூன்றுவரியாய்ப்
பூசும் திருநீறு; வெறிமாலை - மணமிக்க மாலை
28

காதில் கடுக்கனிட்டுக் கனத்த முருகும் தூக்கிச்
சீதநறும் வெள்ளி எழுத்தாணி தான்சேர்த்து
29. முருகு - காதணியில் ஒன்று; கனத்த - பருத்த
29

வாத்தியார் தன்னை வரவழைத்து அந்நேரம்
கோத்திரத்தில் உள்ளோரும் கூடி மிகஎழுந்து
30. கோத்திரத்தில் உள்ளோர் - சுற்றத்தார்
30

பள்ளிக் கூடத்தில் பண்பாகச் சென்றுபுக்கு
விள்ளரிய ஞான விமலன் திருவருளால்
31. விள்ளரிய - கூறமுடியாத
31

சாணியைக் கொண்டு தரையை மிகமெழுகி
பேணியே தூபமிட்டுப் பிள்ளையா ரைநிறுத்தி
32. சாணி - பசுவின் சாணம்
32

வாசமலரும் மகிழருகும் தான் சார்த்தி
நேசமிகும் தாம்பூலம் நிறைநாழி தானும்வைத்து
33. மகிழருகு - அருகம்புல்
தாம்பூலம் - வெற்றிலை பாக்கு
நிறைநாழி - மங்கலக்குறியாக நெல் வைத்து நிரப்பிய நாழி
33

கடலைஅவல் பயறு கனிவகைகள் சர்க்கரையும்
விடலையுயர் தரமிக்க வாழைப் பழமும்
34. விடலை - திண்ணிய
34

மாம்பழம் பலாப்பழமும் வரிசையா கப்படைத்து
சாம்பிராணி கற்பூரம் தாலத் திருவிளக்கும்
35

தாம்பிரம் வெள்ளிபொன் குருதட்சனை தானும்வைத்து
ஆம்பொருளான மத யானைமுகனைத் தொழுது
36

சீராக வாத்தியார் செய்யபனை ஓலைதனை
நேராகச் செப்பமிட்டு நிறைந்தமகு டம்பிடித்து
37. மகுடம் - தொடக்கத்தில் முழங்கும் பொருள் நிறைவுடைய
சொற்கள், அறிவோம் நன்றாக என்பது போல.
37

அரிஎன்ற எழுத்தை அப்போதி லேஎழுதி
தெரியப் படுத்தி சித்தரியும் தானெழுதி
38. அரி - கல்வி தொடங்குமுன் அறிவோம் நன்றாக
எனத் தொடங்குதலின் முன் எழுத்துக்கள்-அரி-
திருமாலைக் குறிப்பதாகக் கொள்ளப்பட்டது
38

கற்பகக் கன்றைக் கைதொழுது ஆதரித்து
அற்புதமாய் மைந்தனையும் அருகிலே தானிருத்தி
39. கற்பகக் கன்று - ஆனைமுகன்
39

கையைப் பிடித்து கதிபெறவே அண்ணாவி
மெய்யாக அண்ணாவி மெய்ஞ்ஞான மேவழங்க
40. கதி - பேறு; மெய்ஞ்ஞானம் - உண்மைஅறிவு
40

அரிவரி கொன்றைவேந்தன் அன்னையும் பிதாவுடனே
விரிவான எண்சுவடி மிக்க உலகநீதி
41. அரிவரி - அகரமுதலாகக் கோவை செய்யப்பட்ட
வரி வடிவ எழுத்துக்கள்
41

பிள்ளையார் விருத்தம் பெரியஅவ்வை மூதுரையும்
வள்ளுவமாலை வளம்குறள் நாலடியார்
42

நல்லபொருளை நவிலும் திவாகரமும்
சொல்லரிய நிகண்டும் சுப்பிரமண்யர் புகழும்
43. திவாகரம் - நிகண்டு. சேந்தன் எனும் அரசன் காலத்தில்
திவாகர முனிவரால் இயற்றப்பட்டது.
சுப்ரமண்யர் புகழ் - திருப்புகழ்
43

நல்பிள்ளைத் தமிழும் ராசரிசி பாடல்களும்
நல்ல புவியில் நலமுடனே எங்களுக்கு
44. ராசரிசி - ராஜரிசி - இளங்கோவடிகள்
44

படிப்பித்தார் வேறுபல சாஸ்திரம் தன்னையும்
படித்தோம்காண் மாதாவே பாருலகில் அண்ணாவி
45. சாஸ்திரம் - கலை நூல்; காண் - முன்னிலை அசை
அண்ணாவி நெடியோன் - அண்ணாவியாகிய பெரியோன்
45

நெடியோன் திருவருளால் நிமிடமிது தட்சணமே
வடிவாக எண்ணெய்தனை வாங்கிவரச் சொன்னார்கள்
46. தட்சணம் - உடன்
46

என்றறிந்து நாங்கள் இயம்பியசொல் தட்டாமல்
சிந்தை மகிழ்ந்து திருத்தாள் கரம்குவித்து
47. திருத்தால் கரம் குவித்து - திருவடிகளைத் தொழுது
47

சனி எண்ணெய்க் கென்று வந்தோம் தாயே சலியாதே
இனிதான நல்லெண்ணெய் இலுப்பெண்ணெய் ஆனாலும்
48

நான்கெண்ணெய் ஆனாலும் நறுநெய் ஆனாலும்
மங்கெண்ணெய் முத்தெண்ணெய் பொதுவாய்ச் சேர்த்தெண்ணெய்
49

எந்தநோ வானதுக்கும் எருக்கிடுமே வேப்பெண்ணெய்முதல்
எந்தஎண்ணெய் ஆனாலும் இப்போதே விட்டனுப்பு
50. எருக்கிடும் - அழித்திடும்
50

பேரம்மை சிற்றம்மை பெரியதாய் உடன்பிறந்தாள்
அத்தைமகள் மதனி அன்பான மச்சினமார்
51. பேரம்மை - பெரிய தாய்; சிற்றம்மை - சிறிய தாய்
மதனி - மைத்துனி
51

இத்தனை பேரும் எமக்கிரங்கி எண்ணெய் தனைச்
சித்தம் மகிழ்ந்து சீக்கிரமாய்த் தந்தனுப்பும்
52

செல்லக் குமாரருங்கள் திண்ணையிலே வந்துநிற்க
அல்லற்படுத் தாதேஎங்கள் அன்புடைய மாதாவே
53. அல்லல் - துன்பம்
53

முத்துக் குமாரருங்கள் முத்தத்தில் வந்துநிற்க
சித்தம் இரங்கிச் சீக்கிரத்தில் எண்ணெய்தனைத்
54. முத்தத்தில் - முற்றத்தில்
54

தந்தனுப்பும் எங்களுக்குத் தாயேநீ மாதாவே
மைந்தன் தனக்கிரங்கி வார்த்துவிடு எண்ணெய்தனை
55. வார்த்தல் - கொடுத்தல்
55

பிள்ளை தனக்கிரங்கிப் பெற்றார் உதவிசெய்தால்
கொள்ளை தவம்பெறுவீர் கொற்றவன்போல் வாழ்ந்திடுவீர்
56. கொள்ளை - மிகுதி
கொற்றவன் - அரசன்
56

அன்ன மணியே அருமையுள்ள மாதாவே
சின்னஞ்சிறு பாலகர்மேல் சித்தம் இரங்கியன்பாய்
57

மாதா மகிழ்ந்தெண்ணெய் வார்த்திடுவார் என்று சொல்லி
ஆதலால் வந்தோம்காண் அன்னையரே நீர்கேளிர்
காண் - முன்னிலை அசை
58

சோதிதிரு அண்ணாவி சொன்ன மொழிதவறி
நீதியுடனே நெடுநேர மான துண்டோ
59

எங்களையும் அண்ணாவி எண்ணாம லேஅடிப்பார்
பங்கய முகத்தழகு பவளவிதழ்த் தாய்மாரே
60. பங்கயம் - தாமரை
60

நன்னயமாய் எண்ணெய்தனை நலமாகத் தந்தனுப்பும்
இன்னமொரு சற்றுநேரஞ்சென்றால் எங்களையும் அண்ணாவி
61

கோவித் திடுவார் கொடிப்பிரம் பாலடிப்பார்
நாவூற நகட்டுவார் எங்க ளைத்தான்
62. நகட்டுவார் - நசுக்குவார்
62

அல்லாமல் சட்டம்பிள்ளை அவன்கொடுமை சொல்லரிது
செல்லப்பிள்ளை யானாலும் சினமே பொறுக்கறியான்
63. சட்டம்பிள்ளை - மாணவத்தலைவன்
63

கோதண்ட ராமனிலே கூசாமல் போட்டிடுவான்
மாதண்ட மாக வடுப்படவே தண்டிப்பான்
64. கோதண்டம் - பள்ளிச் சிறுவர் தண்டனையில் ஒன்று
கோதண்டந் தன்னிலே என்றும் பாடம்
வடுப்படவே - காயம்படவே
64

முட்டுக்கண்ணி போட்டு முதுகில்கல் எடுத்திடுவான்
கட்டியடிப்பான் கசையால் உரித்திடுவான்
65. கசையால் - சவுக்கால்
65

தூதுளை விளாறுவெட்டித் துடிக்க அடித்திடுவான்
மாதுளையம் கொம்பாலே மலர அடித்திடுவான்
66. தூதுளை விளாறு - தூதுவளை வளாறு
66

குட்டிப் பிரம்பாலே எட்டி அடித்திடுவான்
சட்டம்பிள்ளை துட்டனவன் சற்றும் இரக்கமில்லான்
67. துட்டன் - கொடியன்
67

காணிகன் கையாலும் காசினியி லண்ணாவி
தாணிகன் கையாலும் தானடியே பட்டுழன்று
68. தாணிகன் - உரிமை உடையவன் (ஸ்தாணிகன்)
68

பிள்ளை நாங்கள் புலம்பி அழுகையிலே
தள்ளைநீங்கள் கண்டால்தான் பொறுக்குமோ மனது
69. தள்ளை - தாய்
69

ஆதலினால் நாங்கள் அவசரமாய்ப் போவதற்கு
மாதாவே தாயே மனதிரங்கி யேயனுப்பும்
70

வந்தோம் வெகுநேரம் வருத்தமிகக் காணுதம்மா
தந்தை மனதிரங்கி தாய்மாரே நீங்களும்தான்
71

நிறுத்திவிட்டுப் பாராதே நீதியில்லாத் தாய்மாரே
சுறுதிதனில் அனுப்பும் சுகம்பெறுவீர் மாதாவே
72. சுறுதி - சுறுசுறுப்பு - விரைவு
72

உந்தனுட வீட்டிலெண்ணெய் உண்டில்லை யானாலும்
எந்த வீட்டிலானாலும் வாங்கிவிடு எண்ணெய்தனை
73. உந்தனுடைய - உன்தன் உடைய என்பதன் பேச்சுத் திரிபு
73

உண்டான எண்ணெய் ஒருகரண்டி குறையாமல்
கொண்டாந்து விட்டிடுவீர் கூர்மையுள்ள மாதாவே
74. கொண்டாந்து - கொண்டுவந்து என்பதன் பேச்சு வழக்கு
74

பழஞ்சோ றுண்ணாமல் வயிறு கொதிக்குதம்மா
குழைந்து விழுகுதம்மா கொவ்வையிதழ் மேனி யெல்லா
75. பழஞ்சோறு - நீரிட்டசோறு
75

வேர்த்து நடுங்குதப்பா மெய்சோர்ந்து காணுதிப்போ
ஆத்தில் நட்ட கோரைகள்போல் அலையுது சடலமெல்லாம்
76. ஆற்றில் நட்ட கோரை - அலைதலுக்கு உவமை
76

திண்ணக்க மில்லாமல் தியங்குதே என்னுடம்பு
அண்ணாவி தாமும் அடிப்பாரென் றென்மனது
77. திண்ணக்கம் - மனஉரம்
77

உள்ளம் பதறுதம்மா ஒளிச்சுதான் போகவென்று
கள்ளமனம் போலே கலங்குதம்மா உள்ளமெல்லாம்
78. ஒளிச்சு - ஒளிஞ்சு
78

சட்டமெழுதித் தயவுடனே தான்கணக்கு
திட்டம்தாய்ப் பார்க்கச் சிறுவர் தனக்கிரங்கி
79

ஆத்தாள் எனப்பயின்ற அன்னையே எண்ணெய்தனை
...... ....... ...... ....... ...... .......

...... ........ ........ ........ ...... ........
...... ........ ........ ........ ...... ........


எண்ணெய்ச்சிந்து முற்றாகக் கிடைக்கப் பெறவில்லை

நன்றி :-
http://library.senthamil.org/097.htm